kaappan-mobile kaappan-large
  • September
    21
    Saturday

Main Area

Main

kaappan-mobile kaappan-large


தூக்கம் உம் கண்களை தழுவட்டுமே! சுகர் உம்மைவிட்டு ஓடட்டுமே!

sleep therapy for sugar patients
sleep therapy for sugar patients
Loading...

வெளியூர்களில் இருக்கும் உறவினர்களை தொலைபேசியில் அழைக்கும்போது, ஊரில் மழை பெய்ததா என்ற கேள்விகள் குறைந்து, சுகர் கன்ட்ரோல்ல இருக்கா, இப்ப எவ்வளவு என விசாரிப்பது வாடிக்கையாகிவிட்டது. ஆனால், மருத்துவர்களின் அறிவுரைப்படி முறையான‌ உடற்பயிற்சி, சரியான உணவுகள் என மாத்திரைகளை குறைத்து எளிய பயிற்சிகள் வழியாகவே இரத்தத்தில் சர்க்கரையில் அளவை கட்டுக்குள் வைக்கலாம். சர்க்கரையை கட்டுக்குள் வைக்கும் எளிய முயற்சிகளுள் முக்கியமானதும், எல்லாராலும் செய்யக்கூடியதும், எல்லாருக்கும் விருப்பமானதும் என ஒன்று உண்டா என்றால், உண்டு. தூக்கம்.

Good sleep helps control sugar

சரியான நேரத்திற்கு தூங்கச் செல்லுங்கள். அடுத்த நாள் விடுமுறை, பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்றைக்கு யாரை வெளியேற்றுகிறார்கள் என பார்த்துவிட்டு தூங்குவது, ஊரிலிருந்து உறவினர்கள் வந்திருப்பதால் அவர்களிடம் கதைபேசிவிட்டு தூங்கச்செல்வது இவற்றை எல்லாம் தவிர்க்கவும். படுக்கையில் படுத்துக்கொண்டு போஸ்ட் போடுவது, வாசிப்பது தவறு. படுக்கை அறையில் லேப்டாப், மொபைல் அறவே தவிர்க்கவும். கவலைப்படாதீர்கள். கவலைப்படுவது, வட்டிக்கு பணம் விடுவதுபோல. அசல் அப்படியே இருக்கும், வட்டி கூடிக்கொண்டே வரும். எனவே, கவலைப்படுவதால் கவலைகள் தீருவதில்லை. தெளிவான மனதுடன் படுக்கைக்கு செல்லுங்கள். படுத்தால் தூக்கம் வரவில்லையா? மனதை அமைதிபடுத்திவிட்டு பிறகு தூங்க முயலுங்கள். தூங்கும்போது அதிக வெளிச்சம் வேண்டாம். தூங்க செல்வதற்கு முன் தேவையான அளவு தண்ணீர் குடிக்கவும். தூக்கம் உம் கண்களை தழுவட்டுமே!

2018 TopTamilNews. All rights reserved.