• December
    13
    Friday

Main Area

Main



கன்னத்தில் என்னடா காயம்? அது காம்ப்பட்டீஷனால வந்த மாயம்!

Slapping Championship
Slapping Championship

ஆயிரம் உதை வாங்கிய அபூர்வ சிகாமணிகளுக்கு பரிசுகள் குடுத்தார்களா என தெரியவில்லை. ஆனால், ஐந்து அறை வாங்கியும் கெம்பீரமாக நிற்பவர்களுக்கு சாம்பியன் பட்டமும் ஒரு லட்ச ரூபாய் பரிசுத்தொகையும் வழங்குகிறார்கள். கிர்கிஸ்தானில் இப்போது இதுதான் ஹாட் டாபிக். அங்கே நடைபெற்றுவரும் அறை வாங்கும் போட்டியில் எதிரெதிரே நிற்கும் போட்டியாளர்கள் ஒருவருக்கொருவர் மாற்றிமாற்றி 5 அறைவிட வேண்டும். யார் அடிச்சா பொறி கலங்கி பூமி அதிருரது உடம்புல தெரியுதோ, அவரேதான் சாம்பியனாக‌ அறிவிக்கப்படுகிறார்.

Champion

அடின்னா  உங்க வீட்டு அடி எங்க வீட்டு அடி கிடையாது, கன்னம் பழுத்துவிடும், பற்கள் தெறித்துவிழும். இதை எல்லாம் தாண்டியும் வெற்றிபெற்றாக வேண்டும். பத்து போட்டியாளர்கள் பங்கேற்ற அகில உலக அறைவாங்கும் போட்டியில், அமன் அய்தராவ் என்ற 23 வயது இளைஞர், "நீ அடிச்சா எனக்கு அறை, நான் அடிச்சா உனக்கு பொறை" என பஞ்ச் டயலாக் எல்லாம் சொல்லி சாம்பியன் பட்டத்தை தட்டிச்சென்றுள்ளார். இந்த விளையாட்டை காட்டுமிராண்டித்தனமான விளையாட்டு என விமர்சிப்பது தவறு என்கிறார் முன்னாள் சாம்பியன் வசிலி கமாட்ஸ்கி.

2018 TopTamilNews. All rights reserved.