• October
    14
    Monday

Main Area

Main



குடும்பம் குடும்பமா படம் பார்க்க வாறாங்க...குற்றவுணர்ச்சியா இருக்கு...எஸ்.ஜே.சூர்யா!

எஸ்.ஜே.சூர்யா
எஸ்.ஜே.சூர்யா

இயக்குநர் நெல்சன் வெங்கடேசன்  இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் வெளியான படம் மான்ஸ்டர். இதில் ஹீரோயின் கதாபாத்திரத்தில் நடிகை பிரியா பவானி ஷங்கர் நடித்துள்ளார். கடந்த 17ம் தேதி வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் அமகோ வரவேற்பை பெற்று வருகிறது.

monster

இந்த நிலையில் படம் வெற்றியடைந்ததை அடுத்து படக்குழுவினர் பத்திரிகையாளர்களை இன்று வடபழனியில் சந்தித்தனர். அப்போது பேசிய படத்தின் நாயகன் எஸ்.ஜே.சூர்யா, 'முதல்முறையாக என் படத்தை குடும்பத்தோடு மக்கள் வந்து பார்க்குறாங்க.  இதனால் முன்பு தவறு செய்தது போல் ஒரு குற்ற உணர்ச்சி தோன்றுகிறது. இந்தி தெலுங்கு போன்ற மொழி படங்களில் ஒரு கலக்கு கலக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றியுள்ளது. பிள்ளையாரின் வாகனமாக எலியின் மூலம் நல்ல தொடக்கம் கிடைத்துள்ளது. ஒரு குத்து பாடல் இல்லை கிளாமர் இல்லை ஆனால் கூட்டம் வருகிறது' என்றார். 

அதைத்தொடர்ந்து  விஜய், அஜித் அரசியலுக்கு வருவார்களா? என்ற கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த எஸ்.ஜே.சூர்யா, 'அரசியலுக்கு வருவதை அவர்கள் தான் முடிவு செய்ய வேண்டும். ஆனா ஒரு விஷயம் நிச்சியம். ரெண்டு பேருமே ஒரு முடிவெடுத்தாங்கனா அத வெற்றிகரமாக முடிக்கக் கூடிய நபர்கள். அவர்களை பற்றி தனிப்பட்ட முறையில் தெரிந்ததால் சொல்றேன்' என்று கூறியுள்ளார். 

2018 TopTamilNews. All rights reserved.