• August
    24
    Saturday

Main Area

Sivakasi

கர்ப்பிணிக்கு எச்ஐவி ரத்தம் கொடுத்த இளைஞர் தற்கொலை முயற்சி: அதிரவைக்கும் பின்னணி தகவல்கள்!

விருதுநகர்: 8 மாத கர்ப்பிணி பெண்ணுக்கு தன்னை அறியாமல் எச்ஐவி ரத்தம் கொடுத்த இளைஞர் தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார்.

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அரசு மருத்துவமனையில் 8 மாத கர்ப்பிணிப் பெண் ஒருவர், மருத்துவ சிகிச்சைக்காக நேற்று அனுமதிக்கப்பட்டார். அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், அப்பெண்ணின் உடலில் சிவப்பு அணுக்கள் குறைவாக இருப்பதாகவும், உடனே ரத்தம் ஏற்ற வேண்டும் என்றும் கூறியுள்ளனர். 

அதனையடுத்து, அருகில் உள்ள ஒரு ரத்த வங்கியில் இளைஞர் ஒருவர் தானமாக கொடுத்த ரத்தத்தை, பரிசோதித்துப் பார்க்காமல் கர்ப்பிணிப் பெண்ணின் உடலில் மருத்துவமனை ஊழியர்கள் ஏற்றியுள்ளனர். 

இதற்கிடையே, ரத்தத்தைத் தானமாக வழங்கிய அந்த இளைஞர், வெளிநாடு செல்ல முயற்சித்த போது அவருக்கு எச்ஐவி நோய் தொற்று இருப்பது தெரியவந்துள்ளது. இதுகுறித்து, உடனடியாக தான் ரத்தம் வழங்கிய மையத்தை தொடர்பு கொண்டு, தான் வழங்கிய ரத்தத்தை யாருக்கும் ஏற்றிவிட வேண்டாம் என எச்சரித்துள்ளார்.

ஆனால், ஊழியர்களின் அலட்சியத்தால் 8 மாத கர்ப்பிணிக்கு அந்த இளைஞர் வழங்கிய ரத்தம் ஏற்றப்பட்டது. தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சுகாதாரத்துறை அமைச்சர், செயலாளர் உள்ளிட்டவர்கள் பாதிக்கப்பட்டு பெண்ணுக்கு நிவாரணம் வழங்கப்படும், உயர்தர சிகிச்சை வழங்கப்படும் என கூறி வருகின்றனர்.

இந்நிலையில், ரத்தம் தானம் வழங்கிய அந்த இளைஞர் தற்போது தற்கொலை செய்துகொள்ள முயற்சித்துள்ளார். தனக்கு ஏற்பட்ட நோய் தொற்றினால், கர்ப்பிணி பெண்ணின் உயிரும், அவர் வயிற்றில் இருக்கும் குழந்தையின் உயிரும் கேள்விக்குறியாகி இருப்பதால் மன உளைச்சல் ஏற்பட்டதாகவும், அதன் காரணமாகவே தற்கொலைக்கு முயற்சித்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

sanjeevravichandran Wed, 12/26/2018 - 17:35
Sivakasi Pregnant Women hiv aids suicide attempt hiv தமிழகம்

English Title

man who gave his hiv contaminated blood to pregnant women attempted suicide at sivakasi 8 மாத கர்ப்பிணிக்கு எச்ஐவி ரத்தம் ஏற்றிய மருத்துவமனை ஊழியர்கள்

சிவகாசி: சிவகாசி அரசு மருத்துவமனையில் 8 மாத கர்ப்பிணி பெண்ணுக்கு, எச்ஐவி ரத்தம் ஏற்றப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சிவகாசி அரசு மருத்துவமனையில் 8 மாத கர்ப்பிணிப் பெண் ஒருவர், மருத்துவ சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், அப்பெண்ணின் உடலில் சிவப்பு அணுக்கள் குறைவாக இருப்பதாகவும், உடனே ரத்தம் ஏற்ற வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

அதனையடுத்து, அப்பெண்ணுக்கு ரத்தம் ஏற்றும் பணிகளில் மருத்துவமனை ஊழியர்கள் ஈடுபட்டனர். அதன்படி, வாலிபர் ஒருவரிடம் தானமாக பெறப்பட்ட ரத்தம் கர்ப்பிணிப் பெண்ணின் உடலில் செலுத்தப்பட்டது.

ஆனால், அனைவருக்கும் அதிர்ச்சி அளிக்கும் விதமாக ரத்தம் தானம் செய்த வாலிபருக்கு எச்ஐவி நோய் தொற்று இருப்பது தெரியவந்துள்ளது. இந்த விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், மருத்துவமனை ஊழியர்களின் அலட்சியத்தால் அப்பாவிப் பெண்ணின் வாழ்க்கையே கேள்விக்குறியாகி இருப்பதாக மக்கள் ஆதங்கப்படுகின்றனர்.
 

sanjeevravichandran Tue, 12/25/2018 - 18:53
hiv Sivakasi Pregnant Women govt. hospital hiv தமிழகம்

English Title

hiv blood transferred to pregnant women at sivakasi 
strike

சிவகாசியில் உள்ள 1,400 பட்டாசு ஆலைகளும் இன்று முதல் காலவரையின்றி மூடப்படுகிறது!

பட்டாசு வெடிக்க உச்சநீதிமன்றம் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்ததையடுத்து, பட்டாசு ஆலைகள் மூடப்படுவதாக உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

2018 TopTamilNews. All rights reserved.