kaappan-mobile kaappan-large
  • September
    18
    Wednesday

Main Area

Main

kaappan-mobile kaappan-large


பா.ஜ.க தேர்தலுக்காக 27 ஆயிரம் கோடி செலவு செய்து வெற்றிப்பெற்றுள்ளது- சீதாராம் யெச்சூரி 

sitaram yeturi
sitaram yeturi
Loading...

பா.ஜ.க மட்டும் தேர்தல் செலவு 27 ஆயிரம் கோடி செலவு செய்துள்ளது  என  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “ தமிழகத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் பெரும் பெற்றி பெற்றுது மகிழ்ச்சியளிக்கிறது. தமிழகத்தில் விவசாயிகள் தற்கொலை, வேலை வாய்ப்பு பிரச்சனை அதிகளவு இருந்தது. ஆனால் புல்வாமா தாக்குதல் பெரிதுபடுத்தியது பா.ஜ.க பெருமை தேடிக் கொண்டது.  அரசியல் அமைப்பு சட்டத்தை பாதுகாக்க வேண்டும். இந்துத்துவத்துவை எதிர்த்து இடதுசாரி கட்சிகள் வலுவான போராட்டம் நடத்த தயாராகி இருக்கிறோம். பா.ஜ.க பற்றி எழுதுவதால் உத்திரப்பிரதேசத்தில் செய்தியாளர் மீது தாக்குதல் சம்பவம் நடந்துள்ளது.


தமிழகத்தில் மதச்சார்பற்ற அணி இணைந்ததுபோல், இந்திய அளவில் எதிர்க்கட்சிகள் இணையவில்லை. மின்னணு வாக்கு இயந்திரத்தில் ஏராளமான சந்தேகம் இருக்கிறது. தேர்தல் முடிவுக்கு பிறகு ஆணையம் இன்னும் கட்சிகள் வாங்கிய வாக்குகள் நிலவரத்தை வெளியிடவில்லை. இவை சந்தேகத்தினை ஏற்படுத்திருக்கிறது. மும்மொழி கொள்கையை மத்திய அரசு கைவிட வேண்டும். அனைத்து மொழியும் சமமாக பார்க்க வேண்டும்.  புதிய கல்விக் கொள்கை தவறானது” என்று தெரிவித்தார். 
 

2018 TopTamilNews. All rights reserved.