• August
    21
    Wednesday

Main Area

Main



’நான் இப்பதான் ஸ்கூல் முடிச்ச சின்னப்பொண்ணு சார் என்றதும்  இன்னும் நெருங்கினார் அந்த  இயக்குநர்’...ஒரு பாடகியின் அந்த அனுபவம்...

பிரணவி
பிரணவி
Loading...

’ஒரு பிரபலமான இயக்குநர் தன் படத்தில் பாட வைப்பதற்காக ரெகார்டிங் ஸ்டுடியோவுக்குள்ளேயே செக்ஸ் வைத்துக்கொள்ள என்னை மீண்டும் மீண்டும் வற்புறுத்தினார்’ என்று பிரபல தெலுங்குப் பாடகி பிரணவி அதிர்ச்சி அளித்துள்ளார்.

தெலுங்கு சினிமாவின் முன்னணி பாடகிகளில் ஒருவர் பிரணவி. இவர் ’ஸ்ரீ ராமதாசு’, ’ஹேப்பி டேஸ்’, ’லயன்’ உள்ளிட்ட படங்களில் பாடி புகழ் பெற்றவர்.  சிறந்த பாடகிக்கான ஆந்திர அரசின் நந்தி விருதையும் பெற்றுள்ளார். சில ஆண்டுகளுக்கு முன்பு நடன இயக்குனர் ரகு மாஸ்டரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது.

pranavi

சினிமாவில் ‘மி டு’ புகார்கள் குவிந்துவந்த நிலையில் மவுனம் காத்த பிரணவி என்ன காரணத்தாலோ திடீரென்று  சினிமாவில் பாட வாய்ப்பு தேடிய சமயத்தில் பலர் தனக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக தெரிவித்துள்ளார். அதற்கு சம்மதித்தால் மட்டுமே பாட வாய்ப்பு அளிக்கப்படும் என சில பிரபலங்கள் தன்னை வற்புறுத்தியதாக குற்றம் சாட்டியுள்ளார். 

அதற்கு உதாரணமாக ஒரு சம்பவத்தை விவரிக்கிறார் பிரணவி ‘அப்போது நான் இண்டஸ்ட்ரிக்குப் புதுசு. சினிமாவில் பாட பலரிடம் வாய்ப்பு கேட்டேன். அப்போது பிரபல இயக்குனர் ஒருவர் தனக்கு பாட வாய்ப்பு தருவதாக தெரிவித்தார். ஸ்டூடியோவுக்கு வருமாறு அழைத்தார். அங்கு சென்றதும் வா ஸ்டியோவுக்குள்ளேயே செக்ஸ் வைத்துக்கொள்ளலாம். அப்போதுதான் உனக்குப் பாட சான்ஸ் தருவேன் என்று கூறினார். நானோ இப்பத்தான் ஸ்கூல் முடிச்ச சின்னப் பொண்ணு சார் என்று எவ்வளவோ மறுத்துப்பார்த்தேன். அவர் வலுக்கட்டாயமாக என்னை நெருங்கினார். நான் எவ்வளவோ தவிர்த்தும் அதை அவர் பொருட்படுத்தவில்லை. ஆபாசமாகவும் பேசினார். எனக்கு கோபம் வந்தது. அவரை பார்த்து செருப்பால் அடிப்பேன் என்று சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பி வந்து விட்டேன்’ என்று அந்த இயக்குநரின் பயங்கர கற்பழிப்பு சம்பவத்திலிருந்து தப்பி வந்த காட்சியை விவரிக்கிறார் பிரணவி.

2018 TopTamilNews. All rights reserved.