'ரெண்டு பக்கமும் காடு...நான் கத்திட்டே ஓடுனேன்' பிரபல பின்னணி பாடகியின் திக் திக் நிமிடங்கள்!

பாடகி மாலதி
பாடகி மாலதி


பிரபல பாடகி மாலதி இவர் தனுஷ், சாயா சிங் நடிப்பில் வெளியான திருடா திருடி படத்தில் வெளியான மன்மத ராசா பாடல் பாடி பட்டிதொட்டி எங்கும் பிரபலமானார். அதன்பிறகு கைவசம் நிறைய பாடல்கள், மேடை கச்சேரி, வெளிநாட்டு நிகழ்ச்சிகள் என படுபிஸியாக உள்ளார்.

ttn

இந்நிலையில் சமீபத்தில் ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்துள்ள பாடகி மாலதி, 'நான் தற்போது தனியாகவே நிறைய பயணங்கள் செய்கிறேன். 15 ஆண்டுகளுக்கு முன்பு என் கணவர் என்னுடன் எங்கு சென்றாலும் வருவார். அதனால் எனக்கு கஷ்டமே இருக்காது.சினிமாவில் பாட ஆரம்பித்ததும் நான் தனியாக கச்சேரிகளுக்குப் போகத் தொடங்கினேன். வெளியூர் வெளிநாடுகளுக்குச் சென்றேன். அப்போது தான் எனக்கு பொறுமை, நிதானம், தைரியம், நம்பிக்கை இதெல்லாம் கிடைத்தது. 

ttn

12 வருடங்களுக்கு முன்பு ஒரு முறை நான் திருநெல்வேலி பக்கத்தில் உள்ள ஒரு கிராமத்தில் நடந்த கச்சேரிக்காக சென்றேன். இரவு 11மணி இருக்கும். கச்சேரி முடிந்து காரில் வந்து கொண்டிருந்தேன். என்னுடன் 2 டிரைவர்கள்  இருந்தனர்.  நான் பின்பக்கம் படுத்து தூங்கிக்கொண்டிருந்த போது, மதுரை நோக்கி கார் சென்று கொண்டிருந்தது. அப்போது  காட்டு வழிப்பாதையில் ஒரு டிரைவர்  இறங்கி மற்றொரு டிரைவர்  காரை ஓட்ட  நிறுத்தினார்கள். அப்போது நான் ரெஸ்ட் ரூம் போக காரை விட்டு இறங்கினேன். இதை டிரைவர்கள் கவனிக்காமல் என்னை விட்டுவிட்டு வண்டியை எடுத்து கொண்டு போய்  விட்டார்கள். நான் கத்துவது அவங்களுக்கு கேட்கல. இரண்டு புறமும் காடு என்ன செய்வதென்று தெரியாமல் கொஞ்சம் தூரம் ஓடினேன்.

ttn

என் கையில் பணமும் இல்லை,போனும் இல்லை. அதற்கு மேல் என்னால் ஓட முடியவில்லை. அப்போது  அந்த பக்கம் லாரி ஒன்று வந்தது. அந்த லாரியை தைரியமாக கையை காண்பித்து நிறுத்தினேன். அவர்களிடம் எனக்கு நடந்ததை சொன்னேன் . சரிங்க மேடம் பயப்படாதீங்க வாங்கன்னு கூட்டிட்டு போனாங்க. அடுத்த ஊரில் நான் என் நம்பருக்கு போன் செய்தேன். அப்போது தான் நான் காரில் இல்லாதது என் டிரைவருக்கு தெரிந்தது.  டிரைவர்  வந்ததும் எனக்கு உதவி செய்தவர்களுக்குப் பணத்துடன் கண்ணீருடன் நன்றி கூறினேன். என்னுடைய பொறுமையும் நிதானமும் தான் எனக்கு அன்று உதவியது என்று நினைக்கிறேன்' என்று  பிரமிப்பு குறையாமல் கூறியுள்ளார்.