darbar
  • January
    28
    Tuesday

Main Area

Main



சபரிமலையில் பக்தர்கள் வருகை அதிகரிப்பு... கோடிகளை தொட்டது ஒருநாள் உண்டியல் வசூல்!

சபரிமலை
சபரிமலை

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் அனைத்து  வயது பெண்களும் சபரிமலைக்குச் செல்லலாம் என்று  உச்ச நீதிமன்ற  உத்தரவிட்டது.  நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த கேரள அரசு எடுத்த முயற்சிக்கு எதிராக பக்தர்களும், இந்து அமைப்பினரும் போராட்டம் நடத்தினர். இதனால், பக்தர்கள் வருகை சபரிமலையில் குறைந்தது. 

sabari

இதையடுத்து இந்தாண்டு கடந்த 16 ஆம் தேதி, மண்டல பூஜை, மகரவிளக்கு பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நடை திறக்கப்பட்டது. பெண்கள் கோயிலுக்குள் செல்வது குறித்து எந்த முடிவும்  உறுதியாக கேரள அரசு எடுக்காத நிலையில்  மீண்டும் பக்தர்கள் கூட்டம் அதிகரித்துள்ளது. கடந்த இரு தினங்களில் சுமார் 70ஆயிரம் பேர் சபரிமலையில் சாமி தரிசனம் செய்தனர். 

sabari

இந்நிலையில் சபரிமலை கோயில் நடை திறந்த முதல் நாளிலேயே 3 கோடியே 30 லட்சம் ரூபாய் உண்டியல் காணிக்கை  வந்திருப்பதாக  திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டு தெரிவித்துள்ளது. இது கடந்த ஆண்டைவிட  இரண்டு மடங்கு அதிகம்.  கடந்த ஆண்டு, ஒரு கோடியே 28 லட்சம் ரூபாய் வசூலானது  குறிப்பிடத்தக்கது. 

2018 TopTamilNews. All rights reserved.