• August
    26
    Monday

Main Area

Main



பிக் பாஸ் வீட்டிற்குள் நுழையும் 17வது போட்டியாளர் இவர் தானா? நடிகை ஷாலு ஷாமு ஓபன் டாக் 

பிக் பாஸ்
பிக் பாஸ்
Loading...

சென்னை: பிக் பாஸ் வீட்டிற்குள் வைல்ட் கார்ட் எண்ட்ரியில் செல்லும் 17வது போட்டியாளர் குறித்த தகவலை நடிகை ஷாலு ஷாமு கூறியுள்ளார். 

பிக் பாஸ் நிகழ்ச்சி ஆரம்பித்து மூன்று வாரங்கள் கடந்து விட்டது. 16 போட்டியாளர்களுடன் தொடங்கிய இதில் வனிதா மற்றும் பாத்திமா பாபு வெளியான பிறகு 14 போட்டியாளர்களுடன் நிகழ்ச்சி நகர்ந்து சென்றுள்ளது. முதலில் வனிதா இருந்த போது அவர் மற்ற போட்டியாளர்களிடம் சண்டை போடுவது மட்டுமின்றி அவர்களை அடக்கியும் வைத்து வந்தார். இப்போது அவரின் இடத்தை மீரா பிடித்து வருகிறார். 

shalu

இந்த நிலையில் இந்த நிகழ்ச்சி குறித்து நடிகை ஷாலு ஷாமு சமீபத்தில் பேட்டியளித்துள்ளார். அப்போது இதில் 17வது போட்டியாளராக உள்ளே செல்லவுள்ள போட்டியாளர் யாராக இருக்கும் என்று கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், 'விஜய் டிவியில் மிகவும் பிரபலமான ‘ராஜா ராணி’ சீரியல் ஹீரோயின் ஆல்யா மானசா  செல்ல அதிகபட்ச உள்ளது'. ஏனென்றால் ஆல்யா மானசா நடித்து வந்த ராஜா ராணி சீரியல் நிறைவடைந்துள்ளது அதனால் அவர் பிக் பாஸ் வீட்டிற்குள் செல்ல அதிக வாய்ப்பு உள்ளது' என்று கூறியுள்ளார்.

alya

மேலும் வழக்கமாக பிக் பாஸ் நிகழ்ச்சியில், விஜய் தொலைக்காட்சியைச் சேர்ந்த இரண்டு போட்டியாளர்கள் நுழைவார்கள். அதனால் கண்டிப்பாக அல்யா மனசா செல்ல அதிக வாய்ப்புகள் உள்ளதாகப் பேசப்படுகிறது. 


 

2018 TopTamilNews. All rights reserved.