kaappan-mobile kaappan-large
  • September
    19
    Thursday

Main Area

Main

kaappan-mobile kaappan-large


திருப்பதி ஏழுமலையானை இனி சீனியர் சிட்டிசன்கள் இலவசமாக சேவிக்கலாம்... ! எப்படித் தெரியுமா?

திருப்பதி
திருப்பதி
Loading...

வெங்கடேசப் பெருமானை காணவரும் மூத்த குடிமக்களுக்கு 65 வயது நிறைந்து இருக்க வேண்டும். அதோடு மேலும் சில நிபந்தனைகளை திருப்பதி தேவஸ்தானம் விதித்து இருக்கிறது.

இலவச தரிசனத்துக்கு ஆதார் அட்டை அவசியம்.துணைக்கு ஒரு உதவியாளரை அழைத்து வரலாம்.அவருக்கு வயது குறித்த நிபந்தனை இல்லை.ஆனால் அவருக்கும் ஆதார் அட்டை அவசியம்.

காலை எட்டு மணிக்கு குறிப்பிட்ட இடத்திற்கு வந்து தனது வருகையை உறுதிப்படுத்த வேண்டும்.நாள் ஒன்றுக்கு 700 பேருக்கு மட்டுமே இலவச தரிசன அனுமதி வழங்கப்படும்.இலவச தரிசனத்துக்கு வரும் மூத்த குடிமக்களுக்கான அனுமதி நேரம் காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை மட்டுமே. மூத்த குடிமக்களுக்கு காலை உணவாக பால் மட்டும் இலவசமாக வழங்கப்படும்.

tirupati

ஒருமுறை இலவச தரிசனம் செய்தவர் மூன்று மாத காலத்துக்கு பிறகுதான் மீண்டும் அனுமதிக்கப்படுவார்.மூத்த குடிமக்களுக்கு 70 ரூபாய் மதிப்புள்ள 4 லட்டுகள் வழங்கப்படும்.இது, ஆண் பெண் இரு பாலர்க்கும் பொதுவானது.
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த கணவர், மனைவி இருவரும் வரும்போது இரண்டு உதவியாளர்களை அழைத்து வரலாமா? இருவருக்கும் தனித் தனியாக 70 ரூபாய்  மதிப்புள்ள லட்டுகள் வழங்கப்படுமா? 

tirupati

உதவியாளருக்கு காலை உணவு இலவசமா?அப்படியே இலவசமாக வழங்கப்பட்டாலும் அவருக்கும் ஒரு டம்ளர் பால் மட்டும் தானா? 70 ரூபாய் இலவச லட்டுகள் அவருக்கும் உண்டா,சந்திர பாபு நாயுடு போய் ஜெகன்மோகன் ரெட்டி வந்த பிறகும் இது கடைபிடிக்க படுமா போன்ற கேள்விகளுக்கு இனிமேல்தான் விடை கிடைக்கும் என்றாலும் இந்த அறிவிப்பு எத்தனையோ மூத்த குடிமக்களுக்கு. பெரும் மகிழ்ச்சியை கொடுத்திருக்கிறது என்பதை மறுக்க முடியாது. இந்த  மகிழ்வை புதிய ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் கூட்டுவாரா குறைப்பாரா என்பதை வரும் காலம்தான் சொல்ல வேண்டும்.

2018 TopTamilNews. All rights reserved.