• October
    16
    Wednesday

Main Area

Main



வாக்குகளை பெற போராட்டம் தேவையில்லை, பிக்பாஸ் நிகழ்ச்சி போதும்- சீமான்

seeman
seeman

தமிழகத்தில் வாக்குகளைப் பெற போராட்டங்கள் நடத்த தேவையில்லை பிக்பாஸ் போதும் என்பதைத்தான் நடந்து முடிந்துள்ள நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். 

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், “தமிழகத்தில் வாக்குகளைப் பெற போராட்டங்கள் நடத்த தேவையில்லை பிக்பாஸ் போதும் என்பதைத்தான் நடந்து முடிந்துள்ள நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன. நாம் தமிழர் கட்சி ஆரம்பிக்கப்பட்டு 10 ஆண்டுகளில் பல போராட்டங்கள் நடத்தி உள்ள எங்களுக்கும், கட்சி ஆரம்பித்து ஒரு வருடம் ஆகி இருக்கக் கூடிய மக்கள் நீதி மையத்திற்கும் ஏறக்குறைய சமமான வாக்குகள் கிடைத்திருப்பது தமிழக மக்கள் இன்னும் திரை மோகத்திலிருந்து  மீளவில்லை என்பதைத்தான் காட்டுகிறது.

பேராசிரியர் சுப வீரபாண்டியன் திமுகவிடம் சம்பளம் பெற்றுக்கொண்டு என்னைப்பற்றி அவதூறு பேசி வருகிறார். ஈழம் பற்றியும் தமிழ்த் தேசியம் பற்றியும் எனக்கு அதிகம் கற்றுக் கொடுத்தவர் அவர்தான், ஆனால் தற்போது அவரே அதை மாற்றி பேசுகிறார். பிரபாகரனை தலைவர் என்ற அவர் தற்போது மு க ஸ்டாலினை தலைவராக ஏற்றுக் கொண்டு செயல்பட்டு வருகிறார்.குடிநீர் பற்றாக்குறையை போக்க நதிநீர் இணைப்பு என்பது சரியான தீர்வாக இருக்காது நதிநீர் இணைப்பால் காடுகள் உயிரினங்கள் வெகுவாக பாதிக்கப்படும்” என்று கூறினார். 

2018 TopTamilNews. All rights reserved.