• October
    15
    Tuesday

Main Area

Main



’என்னது அதிமுகவுக்கு 22ல ஒண்ணு கூட கிடைக்காதா?...வாக்கு எண்ணும் மையங்களில் கலவரம் கன்ஃபர்ம்...

இபிஎஸ் - ஓபிஎஸ்
இபிஎஸ் - ஓபிஎஸ்

தயங்கித் தயங்கி வெளியான ஒன்றிரண்டு சட்டசபை இடைத்தேர்தல் கணிப்புகள், மற்றும் அரசல்புரசலாக வெளியான உள்துறை ரிப்போர்ட்களை வைத்துப்பார்க்கும்போது அதிமுக இந்த இடைத்தேர்தலில்  ‘டக் அவுட்’ ஆகக்கூட வாய்ப்புள்ளது என்று கசிந்துவரும் தகவல்களால் ஆடிப்போயுள்ளதாம் இபிஎஸ் வட்டாரம். 

palani

இந்தியா முழுவதும் மக்களவைத் தேர்தல் முடிவுகள் நாளை மே 23ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் தமிழகம் மிக முக்கியமான சட்டசபை இடைத்தேர்தல்  முடிவுகளுக்காகக் காத்திருக்கிறது. வாக்கு எண்ணிக்கை மையத்தில் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, திமுக தலைவர் ஸ்டாலின், அமமுக பொதுச் செயலாளர் தினகரன் உள்ளிட்டோர் தத்தமது கட்சிகளுடைய முகவர்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர். 

ttv

இதுவரை சட்டசபை இடைத்தேர்தல் தொடர்பான தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகளை இந்தியா டுடே, தந்தி டிவி போன்றவை மட்டுமே வெளியிட்டன. அவை அதிமுகவுக்கு சாதகமாக இல்லாத நிலையில் மற்ற சானல்கள் யாரும் கருத்துக்கண்ப்புகளை வெளியிட்டுவிடாதபடி அதிமுக தலைமை பயங்கர பிரசர் கொடுத்துள்ளது. ரிசல்ட் அவ்வாறே மிக மோசமாக வரும் நிலையில் என்ன மாதிரியான ‘ஜனநாயக’ நடவடிக்கைகளில் ஈடுபடுவது என்று இபிஎஸ் வட்டாரம் திட்டம் தீட்டி வருவதாகத் தெரிகிறது.

verivel

இதை மோப்பம் பிடித்த டிடிவி அணி படு சுறுசுறுப்பாகக் களத்தில் இறங்கியுள்ளது.இது குறித்து செய்தியாளர்களைச் சந்தித்த வெற்றிவேல், “ஆர்.கே.நகர் இடைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையின்போது முதல் இரண்டு மணி நேரத்தில் எவ்வளவு பிரச்சினை நடைபெற்றது என்று பார்த்தோம். அதிமுகவினர் வாக்கு இயந்திரத்தை உடைக்கச் சென்றார்கள், அங்கிருந்தவர்களை அடிக்கச் சென்றார்கள். எனவேதான் கூடுதல் பாதுகாப்பு கேட்டு மனு அளித்துள்ளோம். உரிய பாதுகாப்பு வழங்குவதாகவும், சிசிடிவி கேமராக்கள் சரியாக இயங்குவதை உறுதி செய்வோம் எனவும் தேர்தல் அதிகாரி உறுதியளித்துள்ளார்” என்று தெரிவித்தார்.

வாக்கு எண்ணிக்கையை நிறுத்துவதற்காக அதிமுகவினர் கலவரத்தை ஏற்படுத்த நினைக்கிறார்கள். எங்கெல்லாம் சொற்ப ஓட்டுக்கள் வித்தியாசத்தில் தோற்போமோ அங்கெல்லாம் கலவரத்தை உண்டாக்க முயற்சி செய்வார்கள் என்றும் அவர் குற்றம்சாட்டினார். நாளை பொதுமக்கள் கொஞ்சம் உஷாராக இருப்பது நல்லது

2018 TopTamilNews. All rights reserved.