• August
    21
    Wednesday

Main Area

Main



இரண்டு ஆண்டுகளாக 59 சிறுமிகளிடம் அத்துமீறிய முதியவர்: மிட்டாய் வாங்க சென்ற இடத்தில் நடந்த கொடூரம்!

பாலியல் தொல்லை
பாலியல் தொல்லை
Loading...

திருவனந்தபுரம்: 59 சிறுமிகளிடம் அத்துமீறிய முதியவர் ஒருவர் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

கேரளாவின் பாலக்காடு அருகே பட்டாம்பி திருத்தலா பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணன். 57 வயதாகும் இவர் அங்குள்ள அரசு பள்ளியின் அருகே பெட்டிக்கடை ஒன்று நடத்தி வந்துள்ளார். அரசு பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவிகள் அங்கு பெட்டிக்கடையில் மிட்டாய் வாங்குவதை வழக்கமாக வைத்துள்ளனர். அப்போது அங்கு வரும் மாணவிகளை முதியவர் கிருஷ்ணன் பாலியல் சீண்டலுக்கு ஆளாகியுள்ளார். இதில் ஆறாம் மற்றும் ஏழாம் வகுப்பு மாணவிகள் தான் அதிகம் பாதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

harassment

இதில்  பாதிக்கப்பட்ட சிறுமி ஒருவர் ஆசிரியையிடம்  இதுபற்றி கூற அவர்கள் இதுகுறித்து  குழந்தைகள் நல அமைப்பிடம் புகார் செய்துள்ளனர். இதையடுத்து அங்கு விரைந்து வந்த அதிகாரிகள் நடத்திய விசாரணையில்,  கடந்த 2 ஆண்டுகளாக 59 மாணவிகளிடம் கிருஷ்ணன் இதுபோல சில்மிஷத்தில் ஈடுபட்டு வந்தது தெரிந்தது. இதை தொடர்ந்து குழந்தைகள் நல அமைப்பினர் பட்டாம்பி திருத்தலா போலீசில் அளித்த புகாரின் அடிப்படையில், கிருஷ்ணன் மீது  போக்சோ சட்டத்தின் கீழ்  வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

abuse

ஆனால்  இதுகுறித்து தகவல் வெளியான போதே கிருஷ்ணன் தலைமறைவானதாகத் தெரிகிறது. இதனால் அவரை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். 
 

2018 TopTamilNews. All rights reserved.