• April
    06
    Monday

Main Area

Main



பாஸ் ஆக பரிட்சைத் தாளில் ரூ.100 வைக்கச் சொன்ன தலைமை ஆசிரியர் கைது!

representative Image
representative Image

உ.பி-யில் தேர்வில் வெற்றி பெற தேர்வுத் தாளில் ரூ.100 நோட்டை வைத்து அனுப்பும்படி கூறிய பள்ளி தலைமை ஆசிரியரை போலீசார் கைது செய்தனர்.
உத்தரப்பிரதேசத்தில் 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான தேர்வுகள் தொடங்கியுள்ளது. உத்தரப்பிரதேசம், பீகார் உள்ளிட்ட வட இந்திய மாநிலங்களில் தேர்வுகளில் முறைகேடு என்பது சகஜமான ஒன்று. பெற்றோரே நேரடியாக வந்து பிட் அடிக்க உதவும் சம்பவங்கள் எல்லாம் பல நடந்துள்ளன. இந்த நிலையில், மவு மாவட்டத்தில் தனியார் பள்ளி ஒன்றின் முதல்வர் பிரவின் மால் தேர்வில் எப்படி முறைகேடு செய்யலாம் என்று ஆலோசனை கூறிய வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியது. அவர், "தேர்வு அறையில் நீங்கள் உங்களுக்குள்  பேசிக்கொள்ளலாம். தேர்வு விடைத் தாளைப் பரிமாறிக்கொள்ளலாம் . நீங்கள் தேர்வு எழுதும் அரசு பள்ளி தேர்வு மையங்களில் உள்ள ஆசிரியர்கள் எனது நண்பர்கள். நீங்கள் சிக்கிக் கொண்டாலும், யாராவது உங்களுக்கு ஒரு அறை அல்லது இரண்டு அறை  கொடுத்தாலும், பயப்பட வேண்டாம்.  தாங்கிக் கொள்ளுங்கள்.

up exam
Source: ANI


நீங்கள் எந்த பதில்களையும் விட வேண்டாம். விடைத்தாளில் ரூ. 100 -யை மட்டும்  இணைத்து விடுங்கள். ஆசிரியர்கள் கண்மூடித்தனமாக உங்களுக்கு மதிப்பெண்கள் கொடுப்பார்கள். ஒரு கேள்விக்கு நீங்கள் தவறாக பதிலளித்தாலும், அது நான்கு மதிப்பெண்களுக்கு, பதில் உங்களுக்கு மூன்று மதிப்பெண்களைக் கொடுக்கும்" என்று கூறியிருந்தார்.
இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரல் ஆனது. பிரவின் மாலின் பேச்சுக்குக் கண்டனங்களும் எழுந்தன. அவரை கைது செய்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்தது. இதனால், அவரை நேற்று உத்தரப்பிரதேச போலீசார் கைது செய்தனர்.

 

2018 TopTamilNews. All rights reserved.