• February
    20
    Thursday

Main Area

Main



'அவெஞ்சர்ஸ்' பட நடிகைக்கு விரைவில் திருமணம்! மாப்பிள்ளை இவர் தான்!

ஸ்கார்லெட் ஜோஹான்சன்
ஸ்கார்லெட் ஜோஹான்சன்

சென்னை: ஸ்கார்லெட் ஜோஹான்சன் தனது நீண்ட நாள் காதலரை திருமணம் செய்து கொள்ளவுள்ளதாக அறிவித்துள்ளார். 

ஹாலிவுட் வெளியான பல திரைப்படங்கள் இந்தியாவில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. அதில் ஒன்று தான் அவெஞ்சர்ஸ். இதில்  பிளாக் விடோ கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் நடிகை ஸ்கார்லெட் ஜோஹான்சன். இவரின் நடிப்பு பலரையும் கவர்ந்ததால் இவருக்கு என்றே ஒரு ரசிகர் பட்டாளம் உருவானது. 

Scarlett Johansson

இந்த நிலையில் இவருக்கு, ரியான் ரெனால்ட்ஸ் என்பவருக்கும் கடந்த 2008ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. பின்னர் 2011ஆம் ஆண்டு சில கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்தனர். அதன்பின் ரொமென் டாரிக் என்பவரைத் திருமணம் செய்து அவரையும் 2017ஆம் ஆண்டு விவாகரத்து செய்தார். 

Scarlett Johansson

இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக இவரும், பிரபல தொலைக்காட்சி நடிகரான கோலின் ஜோன்ஸ் என்பவரும் காதலித்து வருவதாக அறிவித்தார். தற்போது இவர்கள் இருவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளதாம். விரைவில் திருமண தேதி பற்றி அறிவிக்கப்படும் என்று ஸ்கார்லெட் ஜோஹான்சன் கூறியுள்ளார். 

2018 TopTamilNews. All rights reserved.