• August
    21
    Wednesday

Main Area

Main



விரைவில் சிறையிலிருந்து விடுதலையாகிறார் சசிகலா: டிடிவி தினகரன் உறுதி!

சசிகலா
சசிகலா
Loading...


தஞ்சாவூர்:  விரைவில் சசிகலா  வெளியே வருவார் என்று அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் தெரிவித்துள்ளார்.

sasikala

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா. சுமார் 30 ஆண்டுகளுக்கு மேல் ஜெயலலிதா உடன் போயஸ் கார்டன் வீட்டிலிருந்தவர். ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு அ.தி.மு.க-வின் தற்காலிக பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டார்.பின்பு சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை உறுதி செய்யப்பட்டதால் சசிகலா பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் அடைக்கப்பட்டார். அவரை டி.டி.வி.தினகரன் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் அவ்வப்போது சிறையில் சென்று சந்தித்து வருகின்றனர். சில மாதங்களாகவே சசிகலா சிறை நன்னடத்தை விதிகளின் படி விடுதலையாகவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ttv

இந்நிலையில்  தஞ்சாவூரில்  திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட  டி.டி.வி.தினகரன் செய்தியாளர்களைச்  சந்தித்தார். அப்போது பேசிய அவர், 'அம்மா இருந்தவரை விவசாயிகளின்  கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டு வந்தன. இப்போது அம்மா ஆட்சியை தருகிறோம் என்று சொல்லி கொள்பவர்கள் யாரும் அதைச் சரியாகச் செய்யவில்லை' என்றார்.

sasikala

தொடர்ந்து பேசிய அவரிடம் சசிகலா விடுதலை குறித்து கேள்வி முன்வைக்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், 'சட்டரீதியான நடவடிக்கைகள் நடந்து வருகிறது. விரைவில் சசிகலா வெளியே வருவார் என நம்புகிறோம்' என்றார். 

2018 TopTamilNews. All rights reserved.