• August
    21
    Wednesday

Main Area

Main



ஜீவஜோதி கணவர் கொலை வழக்கு குற்றவாளி ராஜகோபால் காலமானார்!

 ராஜகோபால்
ராஜகோபால்
Loading...

சென்னை: ஜீவஜோதி கணவர் கொலை வழக்கில் சிக்கிய சரவண பவன் உரிமையாளர் ராஜகோபால் சென்னையில் இன்று காலமானார். 

rajagopal

நாகை மா‌வ‌ட்ட‌ம் வேதார‌ண்ய‌த்தை சே‌ர்‌ந்‌தவ‌ர் ‌ஜீவஜோ‌தி. சரவண பவன் ஹோட்டல் மேலாளரின் மகளான ஜீவஜோதியின் கணவர் பிரின்ஸ் சா‌ந்தகுமா‌ர். ஜீவஜோதியின் மீது சரவணபவன் உரிமையாளர் ராஜகோபாலுக்கு ஈர்ப்பு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனால், அவரை அடையும் நோக்கில் சா‌ந்தகுமாரை  கொடைக்கானலுக்குக்  கடத்திச் சென்று ராஜகோபால் கொலை செ‌ய்ததாக குற்றம் சா‌ற்றப்பட்டது.இ‌ந்த வழ‌க்‌கை விசாரித்த சென்னை பூந்தமல்லி நீதிமன்றம், ராஜகோபாலுக்கு 10 ஆ‌ண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.55 லட்சம் அபராதமும் விதித்தது. இந்த கொலைக்கு உடந்தையாக இருந்த டே‌னிய‌ல், கா‌‌ர்மேக‌ம், ஹூசை‌ன், த‌மி‌ழ்செ‌ல்வ‌ன், முருகான‌ந்த‌ம், சேது, ப‌ட்டுர‌ங்க‌ம், கா‌சி ‌வி‌ஸ்வநாத‌ன் 7 முத‌ல் 9 ஆ‌ண்டுக‌ள் வரை த‌ண்டனை ‌வி‌தி‌க்க‌ப்ப‌ட்டது.இந்த கொலை வழக்கின் பகுதியாக பதிவு செய்யப்பட்ட மற்றொரு வழக்கான கடத்தல் வழக்கில் ராஜகோபாலு‌க்கு 3 ஆ‌ண்டு‌களும், ம‌ற்ற 8 பேரு‌க்கு இர‌ண்டு ஆ‌‌ண்டுக‌ளும் த‌‌ண்டனை ‌‌வி‌தி‌க்க‌ப்ப‌ட்டது. 

rajagopal

இ‌ந்த இர‌ண்டு வழ‌க்‌குக‌‌ளிலு‌ம் ‌ வழங்கப்பட்ட தீர்ப்பை எதிர்த்து செ‌ன்னை உய‌ர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். அதே சமயம் 10 ஆ‌ண்டுக‌ள் ‌சிறை‌த்  த‌ண்டனையை ஆ‌யு‌ள் த‌ண்டனையாக அ‌திக‌ரி‌க்க  வே‌ண்டு‌ம் என்று அரசு தரப்பில் முறையிடப்பட்டது. இந்த மேல்முறையீட்டு வழக்கில் கடந்த 2009-ம் ஆண்டு தீர்ப்பளித்த சென்னை உயர் நீதிமன்றம், கிழமை நீதிமன்றம் வழங்கிய 10 ஆ‌ண்டுக‌ள் ‌சிறை‌த்  த‌ண்டனையை ஆ‌யு‌ள் த‌ண்டனையாக அதிகரித்து உத்தரவிட்டது.

rajagopal

அதன்பின்னர் சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து ராஜகோபால் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கில் கடந்த மார்ச் 29ஆம் தேதி தீர்ப்பு வழங்கிய உச்ச நீதிமன்றம் ராஜகோபாலுக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை உறுதி செய்து உத்தரவிட்டது. அத்துடன் தற்போது ஜாமீனில் இருக்கும் ராஜகோபால் வருகிற ஜூலை மாதம் 7-ம் தேதிக்குள் சரணடைய வேண்டும் எனவும் உத்தரவிட்டது.அதன்படி சரவணபவன் உரிமையாளர் ராஜகோபால் தவிர 9 பேரும் சென்னை 4வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் ஜூலை 8ஆம் தேதி  சரணடைந்தனர்.ராஜகோபாலுக்கு உடல்நிலை சரியில்லை என்பதால் அவர் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை  என்று அவர் தரப்பில் கூறப்பட்டது.இதையடுத்து ராஜகோபால்  சரவண பவன் ராஜகோபால் உடனே சரணடைய உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.  

​   rajagopal


உச்சநீதிமன்ற உத்தரவை அடுத்து கடந்த 9-ம் தேதி நீதிபதியின் முன் ராஜகோபால் ஆஜராகினார். உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்ததால்  ஆம்புலன்ஸ் மூலம்  ராஜகோபால் கொண்டுவரப்பட்டார். நீதிபதி அவரைப் புழல் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். ஆனால் சிறைக்கு செல்லும் போதே அவருடைய உடல்நிலை மேலும் பாதிக்கப்பட்டது. அதனால், ஸ்டான்லி மருத்துவமனையில் சிறை கைதிகளுக்கான வார்டில் ராஜகோபால் அனுமதிப்பட்டார். உடல்நிலை மோசமானதால் தீவிர சிகிச்சை பிரிவிற்கு மாற்றப்பட்டு, மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது .இதைத் தொடர்ந்து ஸ்டான்லி மருத்துவமனையில் போதிய வசதி இல்லாத காரணத்தினால் அவர் மகன் தாக்கல் செய்த மனுவின் அடிப்படையில் ராஜகோபாலை தனியார் மருத்துவமனைக்கு மாற்றி சிகிச்சை தர சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்தது. 

rajagopal

இந்நிலையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ராஜகோபால், உடல்நிலை மோசமானதால்  அவர் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. 

2018 TopTamilNews. All rights reserved.