• November
    13
    Wednesday

Main Area

Main



வாழ்க்கையில் வெற்றி பெற இன்னைக்கு மிஸ் பண்ணாதீங்க!

விநாயகர்
விநாயகர்

என்ன செய்தாலும் ஏதோவொரு விஷயத்தில் சொதப்பி கடைசியில் தோல்வியில் தான் முடிகிறது என்று விரக்தியில் இருக்கிறீர்களா? செய்யும் எல்லா செயல்களிலுமே வெற்றியைக் கொண்டு வரும் சங்கடஹர சதுர்த்தி விரதத்தைக் கடைப்பிடித்துப் பாருங்கள். நம் சங்கடங்களை எல்லாம் நீக்கி சந்தோஷத்தைத் தருவது தான் சங்கடஹர சதுர்த்தி. இன்று குரு வார சங்கடஹர சதுர்த்தியாக இருப்பது கூடுதல் விசேஷம். இந்த சங்கடஹர சதுர்த்தி நன்னாளில், கணபதியை வழிபட்டு, நம்  கவலைகள் அனைத்தையும் தீர்த்து வைக்கச் சொல்லி ஆனைமுகத்தானை வேண்டி நிற்போம்.

vinayakar


மாதந்தோறும் சங்கடஹர சதுர்த்தி நாள் வரும். இது விநாயகர் வழிபாட்டுக்குரிய அற்புதமான நாள். மாதந்தோறும் வருகிற சிவராத்திரி, சிவ வழிபாட்டுக்கு உரியது என்பது போல், சஷ்டியானது முருக வழிபாட்டுக்கு உகந்தது என்று கொண்டாடுவது போல், ஏகாதசி நாளில் மகாவிஷ்ணுவை வழிபடுவது போல், சங்கட ஹர சதுர்த்தி நாளில், விநாயகருக்கு விரதமிருந்து வழிபடுவார்கள் பக்தர்கள்.
இந்நாளில், விநாயகர் அகவல் படித்தும் பூஜைகள் மேற்கொள்ளலாம். மாலையில், அருகில் உள்ள பிள்ளையார் கோயிலுக்குச் சென்று, ஆனைமுகனைத் தரிசிப்பது நன்மை பயக்கும். நலம் அனைத்தும் வழங்கும். இன்று வியாழக்கிழமை. குரு வாரம். எனவே குருவார சங்கடஹர சதுர்த்தி என்பது ரொம்பவே விசேஷம். இன்று மாலை விநாயகருக்கு கொழுக்கட்டையோ, சர்க்கரைப் பொங்கலோ உங்களால் இயன்றதை நைவேத்தியமாக செய்து வேண்டிக் கொள்ளுங்கள். காரியத்தில் இருந்த தடைகளையெல்லாம் தகர்ப்பார்; காரியம் அனைத்தையும் வெற்றியாக்கித் தருவார் விநாயகர்.

2018 TopTamilNews. All rights reserved.