kaappan-mobile kaappan-large
  • September
    22
    Sunday

Main Area

Main

kaappan-mobile kaappan-large


பள்ளி மாணவர்களாக மாறிய ஹவுஸ் மேட்ஸ்: கஸ்தூரியை பங்கமாக கலாய்த்த சாண்டி

கஸ்தூரி
கஸ்தூரி
Loading...

சென்னை: பிக்  பாஸ் 3யின் இன்றைக்கான முதல் புரோமோ வெளியாகியுள்ளது. 

பிக் பாஸ் சீசன் தொடங்கி 58 நாட்களைக் கடந்துள்ளது. 16 போட்டியாளர்களுடன் தொடங்கிய இதில் இது வரை பாத்திமா பாபு, மோகன் வைத்யா, ரேஷ்மா, சரவணன், மதுமிதா, சாக்ஷி அகர்வால் மற்றும் அபிராமி ஆகியோர் வெளியேறியுள்ளனர். அதை தொடர்ந்து இந்த வார நாமினேஷனில் சாண்டி, தர்ஷன், கஸ்தூரி மற்றும் சேரன் ஆகியோர் உள்ளனர். 

இந்த நிலையில் இந்த வாரத்திற்கான luxury பட்ஜெட் டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது போல் புரோமோ வெளியாகியுள்ளது. அதில் ஹவுஸ் மேட்ஸ் அனைவரும் பள்ளி குழந்தைகளாக மாறி கஸ்தூரி ஆசிரியராக மாறியுள்ளார். அந்த பள்ளி மாணவி வேடம் கச்சிதமாக லாஸ்லியாவுக்கு பொருந்துகிறது.

அதில் வழக்கம் போல் சாண்டி, கஸ்தூரியை சத்துணவு ஆயா என்று கலாய்க்கின்றார். டாஸ்க் என்பதால் சாண்டி கலாய்ப்பதைக் கஸ்தூரி பொறுத்துக் கொள்கிறார். அது ஒரு பக்கம் இருக்க ஷெரின், தர்ஷன் வழக்கம்போல் டாஸ்க்காக இருந்தாலும் ரொமான்ஸை செய்கின்றனர். இதில் இந்த வேடம் சுத்தமாகப் பொருந்தாத ஒரே ஆள் வனிதா மட்டுமே. அதை பார்ப்பதற்கு என்றே ஒரு தனி மனதைரியம் வேண்டும் போல. மொத்தத்தில் இந்த வார டாஸ்க் நகைச்சுவையாகச் செல்லும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. 

2018 TopTamilNews. All rights reserved.