• November
    17
    Sunday

தற்போதைய செய்திகள்

Main Area

Sabareesan

உதயநிதி

அத்தையை அடிச்சித்தூக்கிய உதயநிதி... மாப்பிள்ளை, மச்சான் கிடா விருந்து வைத்து உதயநிதி தடபுடல் பார்ட்டி..!

அ.தி.மு.க.வை சட்டமன்ற தேர்தல்களிலெல்லாம் காப்பாற்றும் ஆபத்பாந்தவன் இந்த மண்டலம்தான், ஆனால், அதை குறிவைத்து உதயநிதி இறங்கியிருப்பதுதான் அவர்களின் வயிற்றில் புளியை கரைக்கிறது.

மு.க.ஸ்டாலினை ஆட்டிப்படைக்கும் ஐம்பது பேர்... மாமாவுக்கு பாடம் புகட்டும் மருமகன் சபரீசன்..!

திமுக  எப்படி முன்னேறியது? என்று கேட்டால், ‘பேசிப்பேசியே வளர்ந்த கட்சி இது’ என்று பெருமையாக சொல்லிக் கொள்வார்கள். அண்ணா, கருணாநிதி, வைகோ, நாஞ்சிலார், துரைமுருகன், சாதிக்பாட்ஷா என்று ஆரம்பித்து பெரும் லிஸ்டே இருக்கிறது. அப்பேர்ப்பட்ட கட்சியின் தலைவராக இன்று இருக்கும் ஸ்டாலினின் மேடைப்பேச்சுக்கு உதவுவதோ ஒரு துண்டுச்சீட்டு.stalin

அதுவும் அவரது சொந்தக் கருத்துக் குறிப்புகள் இல்லை. கிட்டத்தட்ட ஐம்பதுக்கும் மேற்பட்ட நபர்களின் உழைப்பின் சுருக்கத்தைத்தான் அவர் பேசுகிறார் என்று சொல்லி தலையிலடிக்கின்றனர் தி.மு.க.வின் வி.ஐ.பி. சீனியர்கள். கடந்த 2016 சட்டமன்ற தேர்தலுக்கு முன்பிருந்து ஸ்டாலினை இயக்க ஆரம்பித்துள்ளது ஓ.எம்.ஜி. டீம். இது ஒரு கார்ப்பரேட் கம்பெனி.

இவர்கள்தான் ஸ்டாலினின் உடையலங்காரத்தில் இருந்து அவர் பேச வேண்டியது வரை தீர்மானிக்கிறார்கள். இப்படியொரு வட்டத்துக்குள் ஸ்டாலினை கொண்டுவந்து நிறுத்தியிருப்பது அவரது மகள் செந்தாமரையின் கணவர் சபரீசன். இன்று இந்த ஓ.எம்.ஜி. டீம் ஓரளவை தாண்டி தி.மு.க.வின் உள் விவகாரங்களில் தலையிடுவதால் இந்த தரப்புக்கும், கட்சியின் நீண்ட கால வி.ஐ.பி.க்களுக்கும் இடையில் பெரும் மோதல் வெடித்துள்ளது.

இந்த பஞ்சாயத்து பற்றிப் பேசும் கழக சீனியர் வி.ஐ.பி.க்கள் சிலர் “ஆமாங்க பேசி பேசி இந்த கட்சி வளர்ந்தது. அதுவும் எப்படி தெரியுமா? கையில் ஒரு எழுத்தை எழுதி வெச்சுக்காம, மைக்கை பிடித்ததும் மடை திறந்த வெள்ளம் போல் பேசும் திறன் மிக்க அறிஞர் அண்ணாதுரை, தலைவர் கலைஞர் போன்றோரால் வளர்ந்துச்சு இந்த கட்சி.stalin

இன்னைக்கு சேனல்களின் லைவ் செய்திகள், வாட்ஸ் அப், ட்விட்டர்னு ஆயிரம் வசதிகள் இருக்குது. எதிர்கட்சி தலைவர்களின் கருத்துக்கள், நாட்டு நடப்புகள்னு அடுத்த நொடியிலேயே தலைவர்களின் கவனத்துக்கு வந்துடும். அதை வெச்சு அப்டேட் பண்ணிக்கிட்டே அசத்தலா பேசலாம். ஆனால் அன்னைக்கு இதெல்லாம் கிடையவே கிடையாது. ஆனாலும் வெளுத்தெடுப்பார்கள் எங்கள் தலைவர்கள்.

ஆனால் இன்னைக்கு ஸ்டாலினோ ஓ.எம்.ஜி. டீமின் கைகளில் சிக்கி, அவர்கள் எழுதிக் கொடுக்கும் துண்டுச் சீட்டை வைத்துக் கொண்டு, அதை விரிவாக்கி பேசுகிறார். தலைவர் பேசும் துண்டு சீட்டுக்குப் பின் எத்தனை பேரின் உழைப்பு இருக்குதுன்னு தெரியுமா..? ஓ.எம்.ஜி. டீம் இருக்குது, இதன் நிர்வாகி சுனில். இந்த அணியை ஸ்டாலினின் மருகமகன் சபரீசன் தான் கண்காணித்து, இயக்குகிறார்.

இவருக்கு உதவியாக அண்ணா நகர் எம்.எல்.ஏ. மோகன் மகன் கார்த்திக், அன்பில் மகேஷ், அப்துல்லா ஆகியோர் இருக்கிறாங்க. அடுத்து டிஜிட்டல் டீம், அரசியல் அலசல் டீம், இது போக அ.தி.மு.க. மற்றும் மோடி அரசின் செயல்பாடுகளை கண்காணித்து அறிக்கை, பேட்டி ஆகியவற்றைக் கவனித்து ஸ்டாலினுக்கு அறிக்கை தயாரிக்கும் இருப்பத்தைந்து பேர் கொண்ட குழு உள்ளது.sabareesan

இவர்களின் செயல்பாடுகள் சரியாக இருக்குதான்னு கவனிக்க ஓய்வு பெற்ற காவல்துறை மற்றும் நிர்வாகத்துறை அதிகாரிகள் அமர்த்தப்பட்டிருக்காங்க. இவங்களுக்கு உள் தகவல்களை எடுத்துக் கொடுக்க இப்ப ஆட்சியில் உள்ள தி.மு.க. ஆதரவு உயரதிகாரிகளும் இருக்கிறாங்க. இதெல்லாம் போதாதுன்னு மீடியா ரிசர்ச் டீம், ப்ரோக்ராம் அண்டு அப்பாயிண்ட்மெண்ட்ஸ் டீம் இப்படி பல நிலைகள் இருக்குது. இவங்களெல்லாம் சேர்ந்து உருவாக்கும் அறிக்கைகள், கண்டன உரைகள், வருத்தக் கடிதங்கள், வாழ்த்து மடல்களைத்தான் ஸ்டாலின் வெளியிடுறார். மேடைகளில் அவர் வைத்துக் கொண்டு பேசும் துண்டுச் சீட்டுக்களின் பின்னணியிலும் இவ்வளவு பேரின் உழைப்பும் இருக்கிறது.

ஆனால் தலைவர் கலைஞரெல்லாம் ‘சண்முகநாதன்’ அப்படிங்கிற ஒத்த மனுஷனை மட்டும் ஒத்தாசைக்கு வெச்சுக்கிட்டு தேசிய அரசியலின் கண்ணில் விரலை விட்டு ஆட்டினார். ஹும் அதெல்லாம் தமிழக அரசியலின் பொற்காலம்!” என்று முடித்தனர் பெருமூச்சோடு.
 

Thijai Sat, 07/27/2019 - 08:59
Sabareesan mkstalin Karunanidhi ஸ்டாலின் அரசியல்

English Title

Fifty people attacking MK Stalin

News Order

0

Ticker

1 
நக்கீரன் கோபால் (கோப்புப்படம்)

பொள்ளாச்சி விவகாரம்; நக்கீரன் கோபால், சபரீசன் உள்ளிட்டோர் மீதான 5 வழக்குகளும் சி.பி.ஐ.-க்கு மாற்றம்!

பொள்ளாச்சி பாலியல் விவகாரம் தொடர்பாக நக்கீரன் கோபால், சபரீசன் உள்ளிட்டோர் மீதான 5 வழக்குகளும் சி.பி.ஐ.-க்கு மாற்றப்பட்டுள்ளதாக தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது

சபரீசன் மீது வழக்குப்பதிவு; பொள்ளாச்சி ஜெயராமனுக்கு சபரீசன் வக்கீல் நோட்டீஸ்!

சென்னை: பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் திமுக தலைவர் ஸ்டாலினின் மருமகன் ஸ்டாலினின் மருமகன் சபரீசன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பள்ளி, கல்லூரி மாணவிகள் மற்றும் பெண்களுடன் முகநூல் மூலம் நண்பர்களாக பழகி, காதலிப்பதாக கூறி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து அதனை வீடியோவாகவும் எடுத்து வைத்து அந்த பெண்களை மிரட்டி ஒரு கும்பல் பணம் பறித்து வந்துள்ளது. இது தொடர்பாகத் திருநாவுக்கரசு, சதீஷ், வசந்தகுமார், சபரி ராஜன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்

இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகளும் வெளிவந்து, நெஞ்சை பதைபதைக்க வைத்துள்ளது. குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என அனைத்து தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர்.

ஆளுங்கட்சியைச் சேர்ந்தவர்களுக்கு இந்த விவகாரத்தில் தொடர்பிருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த வழக்கை விரைந்து முடிக்க வேண்டும். குற்றவாளிகள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு உரிய தண்டனை வழங்கப்பட வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி பல போராட்டங்களை நடத்தின.

பொள்ளாச்சி பாலியல் குற்ற வழக்கில், தனது பெயரையும் தன் குடும்பத்தின் பெயரையும் களங்கப்படுத்தும் விதமாக, ஸ்டாலினின் மருமகன் சபரீசன்  செயல்படுவதாக சென்னை மாநகரக் காவல் துறையில் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் புகார் அளித்திருந்தார். அதில், தி.மு.க. ஐ.டி விங்கைச் சேர்ந்தவர்கள், சபரீசன் தூண்டுதலின் பெயரில் தனது பெயரையும் தன் குடும்பத்தின் பெயரையும் களங்கப்படுத்துவதாக கூறியிருந்தார்.

இந்நிலையில், இந்த புகாரின் பேரில் சபரீசன் மீது, குற்றவழக்கு எண் 97/2019 பெயரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சபரீசன் தரப்பிலும் பொள்ளாச்சி ஜெயராமனுக்கு எதிராக வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அதில், சபரீசன் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் விதத்தில் பொள்ளாச்சி ஜெயராமன் பேட்டி அளித்துள்ளார் எனவும், பொள்ளாச்சி ஜெயராமனின் குற்றச்சாட்டால் சபரீசன் மன உளைச்சல் அடைந்துள்ளார் எனவும் கூறப்பட்டுள்ளது.

smprabu Thu, 03/14/2019 - 20:22
mk stalin Sabareesan dmk pollachi rape சபரீசன் (கோப்புப்படம்) தமிழகம்

English Title

Case filed against MK Stalin's son in law sabareesan

News Order

0

Ticker

0
2018 TopTamilNews. All rights reserved.