• November
    12
    Tuesday

Main Area

Main



ஆர்.எஸ்.எஸ்.,தலைவரின் பாதுகாப்பு அதிகாரி தீவிரவாதிகளால் சுட்டுக் கொலை!

கோப்புப்படம்
கோப்புப்படம்

ஜம்மு: ஆர்.எஸ்.எஸ்.,தலைவரின் பாதுகாப்பு அதிகாரி ஒருவர் தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ள சம்பவம் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் நிகழ்ந்துள்ளது.

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் கிஷ்த்வார் நகரத்தை சேர்ந்த ஆர்.எஸ்.எஸ்., தலைவர் சந்திரகாந்தா, வழக்கமான மருத்துவ பரிசோதனைகளுக்காக மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அப்போது, திடீரென அங்கு நுழைந்த மர்ம நபர்கள் சிலர், அவரது பாதுகாப்பு அதிகாரியின் ஆயுதத்தை பறித்து, சந்த்ரகாந்தாவை சுட முயற்சி செய்துள்ளனர்.

rss

ஆனால், அதனை தடுக்க அவரது பாதுகாப்பு அதிகாரியான போலீஸ் அதிகாரி முயன்றுள்ளார். அப்போது ஏற்பட்ட கைகலப்பில் அந்த மர்ம நபர்கள் அவரை சுட்டுக் கொன்றனர். ஆர்.எஸ்.எஸ்., தலைவர் சந்திரகாந்தா சிறிய காயங்களுடன் அதிர்ஷ்டவாசமாக உயிர் தப்பினார்.

gun shot

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார், மருத்துவமனையை தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். அத்துடன் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள அவர்கள், இந்த தாக்குதலை நடத்தியது தீவிரவாதிகளாக இருக்கலாம் எனவும் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.

இதையும் வாசிங்க

மாட்டிறைச்சி விற்றதாக இஸ்லாமிய முதியவரை தாக்கிய கொடூர கும்பல்; அசாமில் அதிர்ச்சி!

2018 TopTamilNews. All rights reserved.