darbar
  • January
    26
    Sunday

Main Area

Main



ரூ.710 கோடி முதலீடு! ஓ.பி.எஸ். முன்னிலையில் கையெழுத்தானது!

OPS
OPS

தமிழகத்தின் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அரசு முறை பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார். சிகாகோவில், இந்திய-அமெரிக்க தொழில் கூட்டமைப்பின் சர்வதேச வட்ட மேஜை கருத்தரங்கிலும் பங்கேற்று, தமிழகத்தில் தொழில் துவங்குவதற்கும், முதலீடு செய்வதற்கும் உள்ள வாய்ப்புகள் குறித்து கருத்தரங்கில் பேசினார்.

OPS

இந்நிகழ்வின் போது தமிழ்நாடு உள்கட்டமைப்பிற்கும், உறைவிட நிதிக்குமாக சுமார் ரூ.710 கோடி அளவிற்கு முதலீடுகள் திரட்டுவது தொடர்பாக துணை முதலவர் ஓ.பன்னீர்செல்வம் முன்னிலையில் குளோபல் ஸ்டிரேஜடிக் அலையன்ஸ் இன்க் தலைவர் டாக்டர் விஜய் பிரபாகரும், தமிழ்நாடு நிதித்துறை முதன்மை செயலாளரும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

ops

சமீபத்தில் அரசு முறை பயணமாக முதல்வர் எடப்பாடியும் அமெரிக்கா சென்று திரும்பிய நிலையில், தற்போது துணை முதல்வரும் அரசு முறை பயணமாக அமெரிக்கா செய்து முதலீடுகளை ஈர்த்து வருவது குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்வின் போது, தேனி எம்பி.யும், ஓ.பி.எஸ். மகனுமான ப.ரவீந்திரநாத் குமாரும் உடன் இருந்தார்.

2018 TopTamilNews. All rights reserved.