போட்டியின் ஆரம்பத்திலேயே ரோகித் சர்மா புதிய சாதனை! | Tamil News | Latest Online Tamil News | Tamil News Live | Tamilnadu News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள்- Top Tamil News
  • February
    20
    Thursday

Main Area

Mainபோட்டியின் ஆரம்பத்திலேயே ரோகித் சர்மா புதிய சாதனை!

ROHIT SHARMA
ROHIT SHARMA

ஆஸி., அணிக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியின்போது, ஒருநாள் அரங்கில் புதிய சாதனை படைத்துள்ளார் துவக்க வீரர் ரோகித் சர்மா.

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதி வரும் மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்து 9 விக்கெட் இழப்பிற்கு 287 ரன்கள் குவித்தது.

இதனையடுத்து பேட்டிங் செய்ய வந்த இந்திய அணியின் துவக்க வீரர் ரோகித் சர்மா 4 ரன்கள் அடித்த போது, ஒருநாள் அரங்கில் 9 ஆயிரம் ரன்களை கடந்துள்ளார். இவர் 217 இன்னிங்சில் இந்த இலக்கை கடந்து இருக்கிறார். 

ROHIT

இதன் மூலம் சர்வதேச ஒருநாள் அரங்கில், அதிவேகமாக 9000 ரன்கள் அடித்தவர்கள் பட்டியலில் மூன்றாவது இடம் பிடித்து சாதனையை படைத்திருக்கிறார். அதேபோல், இந்திய வீரர்கள் மத்தியில் இரண்டாவது அதிவேக 9 ஆயிரம் ரன்கள் இதுவாகும். 

194 இன்னிங்ஸ்களில் கேப்டன் விராட் கோலி 9 ஆயிரம் ரன்களை கடந்தது அதிவேகமாக இருக்கிறது. இரண்டாவது இடத்தில் தென்னாபிரிக்க வீரர் டி வில்லியர்ஸ் 208 இன்னிங்ஸ்களில் 9 ஆயிரம் ரன்களை கடந்து இருக்கிறார்.

ஒருநாள் அரங்கில் அதிவேகமாக 9000 ரன்கள் கடந்த வீரர்கள் பட்டியல்:

#1 விராட்கோலி - 194 இன்னிங்ஸ்கள்

#2 டி வில்லியர்ஸ் - 208 இன்னிங்ஸ்கள்

#3 ரோகித் சர்மா - 217 இன்னிங்ஸ்கள்

#4 சவுரவ் கங்குலி - 228 இன்னிங்ஸ்கள்

#5  சச்சின் டெண்டுல்கர் - 235 இன்னிங்ஸ்கள்

2018 TopTamilNews. All rights reserved.