• April
    03
    Friday

Main Area

Main



ஆளுங்கட்சியை நம்பி தான் இருக்கோம்: ‘எல்.கே.ஜி’ படத்துக்கு இலவச விளம்பரம் தேடும் ஆர்.ஜே.பாலாஜி!

rjbalaji
rjbalaji

சென்னை: ஆர்.ஜே.பாலாஜி நடித்துள்ள ‘எல்.கே.ஜி’ திரைப்படம் பொங்கல் பண்டிகைக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐசரி கணேஷ் தயாரிப்பில் இயக்குநர் பிரபு இயக்கியுள்ள ‘எல்.கே.ஜி’ படத்திற்கு நடிகர் ஆர்.ஜே.பாலாஜி திரைக்கதை எழுதியுள்ளார். சமீபத்திய அரசியல் நிகழ்வுகளை மையமாக வைத்து உருவாகியுள்ள இப்படத்தின் போஸ்டரை ஆர்.ஜே.பாலாஜி தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

இந்த போஸ்டரில் அரசியல்வாதி கெட்டப்பில் இருக்கும் ஆர்.ஜே.பாலாஜியைச் சுற்றி இலவச ஆடு, மாடு, மிக்ஸி, க்ரைண்டர், ஃபேன், டிவி மற்றும் இலவச அரிசி ஆகியவற்றில் ஆர்.ஜே.பாலாஜியின் ஸ்டிக்கர் ஓட்டப்பட்டுள்ளது. ஆளும் கட்சியை வம்புக்கு இழுக்கும் விதமாக போஸ்டர் வெளியிட்டதன் மூலம், அரசியல்வாதிகள் தனது படத்திற்கு இலவச விளம்பரம் தேடித்தர வேண்டும் என்ற கோரிக்கையையும் முன்வைத்துள்ளார்.

சமீபத்தில் வெளியான தளபதி விஜய் நடித்த ‘சர்கார்’ படத்தில் அரசு வழங்கிய இலவச பொருட்களை தீயில் போட்டும் கொளுத்தும் காட்சிக்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, காட்சிகள் நீக்கப்பட்டன. தற்போது ஆர்.ஜே.பாலாஜியின் போஸ்டரில் நேரடியாக ஆளும்கட்சியை கலாய்த்திருப்பதால் இந்த படத்துக்கும் எதிர்ப்பு கிளம்பும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

2018 TopTamilNews. All rights reserved.