• April
    03
    Friday

Main Area

Main



வரும் 24 ம் தேதி டெல்லி சட்டமன்றத்தில் சி.ஏ.ஏவுக்கு எதிரான தீர்மானம்! அசத்தும் அரவிந்த் கெஜ்ரிவால்

Arvind Kejriwal
Arvind Kejriwal

தலைநகர் டெல்லியில் தான், குடியுரிமை திருத்த சட்டத்துக்கான போராட்டம் முதன்முதலாக தலைதூக்க தொடங்கியது. அதன்பின்னரே தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் போராட்டம் தீவிரமடைந்தது. டெல்லியில் போராட்டம் நடத்திய ஜாமியா பல்கலைக்கழக மாணவர்களை காவல்துறை சரமாரியாக தாக்கும் காட்சிகளும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின. மேலும் இந்த கலவரத்தில் துப்பாக்கிச்சூடும் அரங்கேறியது. டெல்லி போலீசாருக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உத்தரவிட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.

குடியுரிமை திருத்த சட்டம்

இந்நிலையில் தமிழக சட்டமன்றத்தில் குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து தீர்மானம் கொண்டுவர எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்து வருகிறது. ஆனால் ஆளுங்கட்சியினர் அதற்கு செவி சாய்க்கவில்லை. இந்த சூழலில் வரும் 24 ம் தேதி டெல்லி சட்ட மன்றத்தில் குடியுரிமை சட்டத்தை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றப்படவிருப்பதாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். 

2018 TopTamilNews. All rights reserved.