• August
    24
    Saturday

Main Area

Main



அவசரத்துல அச்சடிச்சதால 500 ரூ நோட்டுல மிஸ்டேக் ஆகிடுச்சி, ஸாரி – ரிசர்வ் வங்கி

Two different 500 Rs notes printed
Two different 500 Rs notes printed
Loading...

பணமதிப்பழிப்பு நடவடிக்கைக்குப் புதிதாக வெளிவந்திருக்கும் 500 ரூபாய் நோட்டுகளில், மகாத்மா காந்தி அழகாக சிரிக்கும் புகைப்படத்தின் அருகில் பச்சை நிற ஸ்ட்ரிப்கள் இருந்தால் அவை போலி செல்லாத நோட்டுகள் என்றும், ரிசர்வ் வங்கி ஆளுநர் கையெழுத்தின் அருகில் பச்சை நிற ஸ்ட்ரிப்கள் இருக்கும் 500 ருபாய் நோட்டுகள் மட்டும்தான் ஒரிஜினல் என்றும், எனவே 500 ரூபாய் நோட்டு வாங்கும்போது பச்சை நிற ஸ்ட்ரிப் எங்கே இருக்கிறது என பார்த்து வாங்கவும், இல்லையென்றால் செல்லாமல் போய்விடும் என ஒரு தகவல் வாட்சப்பில் பரவி வருகிறது.

Ways to check authenticity of 500 Rs note

விஷயம் விபரீதமாவதற்குள் விழித்துக்கொண்ட ரிசர்வ் வங்கி, இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளது. அதாவது, வாட்சப்பில் வருவதுபோல காந்தி புகைப்படத்தின் அருகில் பச்சை நிற ஸ்ட்ரிப் இருப்பின் அவை அது போலி நோட்டுகள் அல்ல என்றும், இரண்டு விதமான 500 ரூபாய் நோட்டுகளுமே செல்லும் என்றும் விளக்கமளித்துள்ளது. பணமதிப்பழிப்பு நடவடிக்கைக்குப் பிறகு புதிய ரூபாய் நோட்டுகள் அவசரகதியில் அச்சிடப்பட்டதால் பிழை நடந்துவிட்டதாகவும், ஆனாலும் இரண்டு விதமான நோட்டுகளும் செல்லும் என்றும் ரிசர்வ் வங்கி செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார். எனவே, போலி செய்திகளை பரப்ப வேண்டாம்.
 

2018 TopTamilNews. All rights reserved.