• August
    24
    Saturday

Main Area


Parents Day

காலையில தானே சொன்னே இந்த வாயால, மஹாலஷ்மி மாதிரி இருக்கேன்னு!

இந்தியாவின் மிகச்சிறந்த ரிடையர்மென்ட் பிளான் - பிள்ளைகள் என்பது எவ்வளவு அவல நகைச்சுவை?. நான் பெற்றேன், பாடுபட்டு படிக்கவைத்தேன், கஷ்டப்பட்டு திருமணம் செய்துவைத்தேன், இப்ப என்னாடான...


ப்ரண்ட்ஸ் - பேமிலி

இதையெல்லாம் கடைப்பிடித்தால்,உங்கள் நண்பர்கள் உறவினர்கள் இடையே உங்கள் மதிப்பு உயரும்!

நண்பர்கள்,அறிமுகமில்லாத பிற நண்பர்கள் சந்திக்கும்போது,நீங்கள் யாரோ ஒருவரைப் பற்றி கேலியும் கிண்டலுமாக ஒரு உரையாடலைத் தொடங்குகிறீர்கள். உடனிருப்பவர்கள் அதை ரசிக்கும் மனநிலையில் இல்ல...

காதலர் தினம்: காதலர்களை மகிழ்விக்கும் ஓசூர் ரோஜா பூக்கள் - ரூ. 5 கோடிக்கு வர்த்தகம் 

ஓசூர்: உலகம் முழுவதும் நாளை காதலர் தினம் கொண்டாடப்படுவதால், ரோஜா மலர்களுக்கு பெரிய அளவில் டிமாண்ட் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் இருக்கும் ஒசூரில் இருந்து மட்டும் சுமார் 2.5 கோடி ரோஜா மலர்கள், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. 5 கோடி ரூபாய்க்கு வர்த்தகம் நடைபெற்றுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

dcdcdf

காதலர் தினம் என்றாலே சாக்லேட்டுகள், ரோஜாக்கள், கிரீட்டிங் கார்டுகள், டின்னர் டேட்டுகள் என எந்த பக்கம் திரும்பினாலும் நகரம் முழுவதும் ஒரே கொண்டாட்டமாக இருக்கின்ற நிலையில், விவசாயிகளும் இந்த வேலன்டைன்ஸ் டேக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கின்றார்கள். உலகம் முழுவதும் நாளை காதலர் தினம் கொண்டாடப்படுவதால், ரோஜா மலர்களுக்கு பெரிய அளவில் டிமாண்ட் ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் இருக்கும் ஒசூரில் இருந்து மட்டும் சுமார் 2.5 கோடி ரோஜா மலர்கள், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.   ஓசூர், தளி, தேன்கனிக்கோட்டை, சூளகிரி ஆகிய பகுதிகளில் விளையும் ரோஜா மலர்கள் அமெரிக்கா, ஜெர்மனி, பிரேசில், மலேசியா, அமீரகம் ஆகிய நாடுகளுக்கு கிறிஸ்துமஸ், புத்தாண்டு, மற்றும் காதலர் தினம் அன்று ஏற்றுமதி செய்யப்படுவது வழக்கம்.

hggg

ரோஜா மலர்கள் 2000 ஹெக்டேர் பரப்பளவில் ரோஜா மலர்கள் இங்கு உற்பத்தி செய்யப்படுகிறது. சாதாரண நாட்களில் 20 பூக்கள் கொண்ட ஒரு கொத்தின் விலை ரூபாய் 30ல் இருந்து ரூபாய் 50 வரை விலை போகும். காதலர் தினத்தன்று மட்டும் ஒரு கொத்தின் விலை ரூ.300 வரை விற்பனை செய்யப்படுகிறது. கடந்த ஆண்டை விட 1 கோடி மலர்கள் அதிகமாக இம்முறை ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதால் விவசாயிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

காதலர் தின விழாவையொட்டி ஓசூரில் இருந்து ஒரு கோடிக்கும் மேற்பட்ட ரோஜா மலர்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு உள்ளது. இங்கு உற்பத்தி செய்யப்படும் ரோஜா பூக்கள் டெல்லி, மும்பை, ஹைதராபாத், பெங்களூர், ஆந்திரா, கொல்கத்தா உள்ளிட்ட பெருநகரங்களுக்கும் அனுப்பி வைக்கப்படுகிறது. இதன்மூலம் மட்டுமே 5 கோடிக்கு வர்த்தகம் நடக்கிறது என்று விவசாயிகள் மகிழ்ச்சியுடன் கூறியுள்ளனர்.

dgsh

உள்ளூர் சந்தையில் 20 ரோஜா மலர்கள் கொண்ட ஒரு கொத்து, 320 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. வெளிநாடுகளுக்கு ஒரு பூ 25 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெளிநாட்டு ஏற்றுமதி மூலம் ரோஜா விவசாயிகளுக்கு கணிசமான லாபம் கிடைக்கிறது,'' என்றனர்.
காதலர்தினத்தையொட்டி, புதுச்சேரியில் உள்ள பல்வேறு கிப்ட் ஷாப் களில் விதவிதமான பரிசு பொருட்கள் விற்பனைக்கு குவிந்துள்ளன. குறிப்பாக கண்ணாடியிலான பரிசு பொருட்கள், ‘காதல் மீட்டர்' எனப்படும் பரிசு பொருட்கள், மின்ஒளியில் ஜொலிக்கும் இதய வடிவிலான பரிசு பொருட்கள், கரடி பொம்மைகள் உள்பட பல்வேறு பொருட்கள் விற்பனைக்கு வந்துள்ளன. வாழ்த்து அட்டைகள் விற்பனை புதிதாக வந்துள்ள இந்தப் பரிசு பொருட்களை காதலர்கள் ஆர்வத்துடன் வாங்கி செல்கிறார்கள்.

வாழ்த்து அட்டைகள் பல்வேறு விதமான வடிவங்களில் விற்பனைக்கு வந்துள்ளது. இசை ஒலிக்கும் வாழ்த்து அட்டைகள், மின்னொளியில் மிளிரும் வாழ்த்து அட்டைகள் போன்ற வாழ்த்து அட்டைகளும் விற்பனைக்கு வந்துள்ளன. இவற்றை காதலர்கள் ஆர்வமுடன் வாங்கி செல்கிறார்கள். காதலர் தின விற்பனை கடைகளில் களைகட்டியுள்ளது.

Arunpandiyan Thu, 02/14/2019 - 14:33
lovers day valentines day roses red rose val லைப்ஸ்டைல் உறவுகள்

English Title

valentines day or lovers day: roses sell up to 5 crore rs

News Order

0 

sex

செக்ஸ் ரகசியம் பற்றி அம்மா தன் மகளுக்கு எழுதிய சீக்ரெட் கடிதம்

பெண் குழந்தைகளுக்கு அப்பா தான் செல்லம். ஆனால் ஒரு குறிப்பிட்ட வயதைத் தாண்டியதும் பெண் குழந்தைகளுக்கும் அம்மாக்களுக்கும் அப்படி ஒரு நெருக்கம் வந்துவிடும். அதற்குக் காரணம் என்னவென்று...


love

காதலர் தின கொண்டாட்டம்; தயவு செய்து முரட்டு சிங்கிள்ஸ் படித்து விட்டு கான்டாக வேண்டாம்!!!

பிப்ரவரி மாதம் பிறந்ததுமே சட்டென்று நினைவுக்கு வருவது காதலர் தினம்தான். காதலிக்கு பரிசு வாங்கவும், காதலை வெளிப்படுத்தவும் ஏற்ற தருணமாக இளைஞர்கள் இதனை கருதுகின்றனர்


sex

நீங்கள் கன்னித்தன்மையை இழக்க சரியான வயது எது தெரியுமா?

சீக்கிரமாகவே கன்னித்தன்மையை இழந்துவிடுவது இங்கிலாந்து நாட்டு இளம் வயதினரின் மத்தியில் பெரிய கவலையை ஏற்படுத்தியுள்ளதாக பிரிட்டிஷ் மக்களின் பாலியல் நடத்தை குறித்த ஒரு ஆய்வு கூறியுள்ள...


sex

உங்கள் வயதை பொருத்து, உடலுறவு வைத்து கொள்ள எது சிறந்த நேரம்..?

தாம்பத்திய வாழ்வு சுமுகமாகச் செல்ல வேண்டும் என்றால் தம்பதியர் சரியான நேரத்தில் உடலுறவு வைத்து கொண்டால் போதும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்


rabf

மனஅழுத்தமா ?கவலை வேண்டாம், பிடித்த ஆணை வாடகைக்கு எடுத்து கொள்ளலாம்!

மன அழுத்தத்தில் உள்ள பெண்கள், தனக்கு பிடித்த ஆணை தேர்வு செய்து வாடகைக்கு எடுத்துக் கொள்ளலாம் என்ற முறை வியப்பை ஏற்படுத்தியுள்ளது.


sex

ஆண்களைவிட பெண்களுக்கு எட்டு மடங்கு காம உணர்வு இருக்குமாம்... சாணக்கியர் சொல்கிறார்!

இந்தியாவின் புகழ்பெற்ற நூல்களில் ஒன்று அர்த்தசாஸ்திரம். வாழ்க்கை நெறிகளையும், எப்படி வாழ வேண்டும் என்பதையும் உணர்த்தும் இந்த நூலின் ஆசிரியர் யார் அனைவருமே நன்கு அறிவோம்.

2018 TopTamilNews. All rights reserved.