• April
    07
    Tuesday

Main Area

Main



தேசிய குடிமக்கள் பதிவு விவகாரம்! மீண்டும் போர்க்கொடி தூக்கும் மம்தா பானர்ஜி

தேசிய குடிமக்கள் பதிவு
தேசிய குடிமக்கள் பதிவு

சட்டவிரோதமாக குடியேறியவர்களை அடையாளம் காண்பதற்காக அசாம் மாநிலத்தில் தேசிய குடிமக்கள் பதிவு மேற்கொள்ளப்பட்டது. அண்மையில் அசாமின் தேசிய குடிமக்கள் பதிவு பட்டியல் வெளியானது. அதில் முன்னாள் ராணுவத்தினர், 2 எம்.எல்.ஏ.க்கள் உள்பட சுமார் 19 லட்சம் பேரின் பெயர்கள் விடுபட்டது பெரும் சர்ச்சையை கிளப்பியது. இதனையடுத்து விடுபட்டவர்கள் பெயரை சேர்க்க காலஅவகாசம் வழங்கப்பட்டது.

அமித் ஷா

அசாமை தொடர்ந்து மற்ற மாநிலங்களிலும் சட்டவிரோதமாக குடியேறியவர்களை கண்டுபிடித்து வெளியேற்ற தேசிய குடிமக்கள் பதிவை அமல்படுத்த மத்திய அரசு தீவிரமாக உள்ளது. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் எல்லா மாநிலங்களிலும் தேசிய குடிமக்கள் பதிவு அமல்படுத்தப்படும் என்று கூறியது குறிப்பிடத்தக்கது. மேலும் பல மாநிலங்கள் தேசிய குடிமக்கள் பதிவுக்கு ஆதரவு தெரிவித்தன. அதேசமயம் மத்திய அரசை தொடர்ந்து எதிர்த்து வரும் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி வழக்கம் போல் தேசிய குடிமக்கள் பதிவு  நடைமுறைக்கும் எதிர்ப்பு தெரிவித்தார்.

மம்தா பானர்ஜி

இந்நிலையில் மேற்கு வங்கம் சிலிகுரியில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்ட முதல்வர் மம்தா பானர்ஜி பேசுகையில், பெங்கால் மக்களின் பாதுகாவலராக நாங்கள் செயல்படுவோம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவு மாநிலத்தில் அமல்படுத்தபடாது என நாங்கள் உங்களுக்கு உறுதி அளிக்கிறேன். குடியுரிமை திருத்த மசோதாவை நான் எதிர்க்கிறேன். சொந்த மாநிலத்தில் வாழும் எந்த குடிமக்களையும் யாராலயும் வெளியேற்ற முடியாது. பெங்காலுக்கு தேசிய குடிமக்கள் பதிவு தேவையில்லை என தெரிவித்தார்.

2018 TopTamilNews. All rights reserved.