• November
    13
    Wednesday

Main Area

Main



இலங்கை மீது அமெரிக்காவின் பரிதாபப் பார்வை ஏன்?!..

நிலுஃபர்
நிலுஃபர்

இவர் பெயர் நிலுஃபர், ஈரானுக்கு எதிராகப் போரினைத் துவக்கக் காத்துக்கொண்டிருக்கும் அமெரிக்காவின் திட்டத்தை அம்பலத்துவதற்காகவே "No Iran War" என்கிற அமைப்பைத் துவங்கி நடத்திவருகிறார். அதனாலேயே சர்வதேச உளவு அமைப்புகள் அவர்வீட்டைச் சுற்றி வட்டமிட்டுக்கொண்டே இருக்கின்றன. அதற்கெல்லாம் அஞ்சாமல் தொடர்ந்து இயங்கிவருகிறார்.

nilufar

சீனாவைச் சுற்றிவளைத்து தனிமைப்படுத்தி காலி செய்வதற்காக, சீனாவுக்கு எண்ணை வழங்கும் ஈரானைக் குறிவைத்து காய்நகர்த்திக் கொண்டிருக்கிறது அமெரிக்கா. ஏற்கனவே ரஷ்யாவுக்கு மத்தியகிழக்கில் இருந்த ஒரே தொடர்பு நாடான சிரியாவை துண்டுதுண்டாக்கியதும் இதேபோல் தான்.

syria

மத்தியகிழக்கிலிருந்து சீனாவுக்கு எண்ணை எடுத்துப்போகும் கப்பல்களை தடுத்து நிறுத்தும் வகையில் மல்லக்கா கால்வாயை அமெரிக்கா ஆக்கிரமித்து சீனாவை அச்சுறுத்தியது போதாதென்று, அதே வழித்தடத்தில் இருக்கும் இலங்கையையும் ஆக்கிரமிக்கும் நோக்கில் 2009 இல் இருந்தே நேரம் பார்த்துக் கொண்டிருக்கிறது அமெரிக்கா. இலங்கைக்குள் எப்படியாவது நுழைந்துவிட வேண்டும் என்று அமெரிக்க பென்டகனின் உயரதிகாரிகள் பலமுறை கூடிக்கூடி விவாதித்த ஆதாரங்கள் எல்லாமும் வெளிவந்திருக்கின்றன.

hbhjh

இப்படியான சர்வதேச சூழலுக்கு நடுவில் இலங்கையில் குண்டுவெடிப்புகள் நிகழ்ந்திருப்பதையும் உடனடியாக அமெரிக்கா பரிதாபப்பார்வை வீசுவதையும் இணைத்துப் பார்க்காவிட்டால் எதையும் சரியாகப்புரிந்துகொள்ள முடியாது.

hgfh

எழுத்து: Chinthan Ep (எழுத்தாளர்)

#NoIranWar #NoMoreSrilankanWar

2018 TopTamilNews. All rights reserved.