• August
    26
    Monday

Main Area

Main



அடுத்த தேர்தலில் போட்டியிடுவாராம்’...திரும்பத் திரும்பப் பேசுற ...திரும்பத் திரும்பப் பேசுற ரஜினி...

ரஜினிகாந்த் (கோப்புப்படம்)
ரஜினிகாந்த் (கோப்புப்படம்)
Loading...

சூப்பர் ஸ்டாரின் அரசியல் அறிவிப்பு மிக விரைவில் வெள்ளிவிழா காணவிருக்கும் நிலையில், ‘நான் ஒரு வாட்டி சொன்னா திரும்பத்திரும்ப அதையேதான் சொல்வேன்’ என்கிற ரீதியாக ’தமிழகத்தில் எப்போது தேர்தல் நடந்தாலும் எதிர்கொள்ள தயார்’ என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்

rajini

கடந்த 1996-ம் ஆண்டிலிருந்தே அரசியலுக்கு வருவதாகச் சொல்லிக்கொண்டிருக்கும் ரஜினிக்கு இது 24வது வருடம். இந்த அரசியல் அறிவிப்பு அடுத்த வெள்ளிவிழா காணும் என்னும் நிலையில், கடந்த 2017-ஆம் ஆண்டு டிசம்பர் மாத இறுதி வரை ரசிகர்களை சந்தித்து புகைப்படம் எடுத்தார். அப்போது, தான் அரசியலுக்கு வருவது உறுதி என்றும், போர் வரும் போது களம் காணுவோம் என்றும் அறிவித்தார்.

தொடர்ந்து, ரஜினி ரசிகர் மன்றம், 'ரஜினி மக்கள் மன்றம்' என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டு அதற்கான நிர்வாகிகள் நியமிக்கப்பட்டனர். எனினும், தற்போது வரை கட்சி தொடங்கப்படவில்லை. எனினும், எதிர்வரவுள்ள மக்களவை மற்றும் இடைத்தேர்தலில் ரஜினியின் கட்சி களம் காணும் என எதிர்ப்பார்க்கப்பட்டு வந்த நிலையில், ’தண்ணீர் பிரச்னையை யார் தீர்ப்பார்கள் என நம்புகிறீர்களோ அவருக்கு வாக்களியுங்கள்’ என்று மட்டும் கூறி தண்ணி காட்டிவிட்டு சென்றார் ரஜினி. இதனால், தேர்தலில் அவரது கட்சி போட்டியிடும் என்று எதிர்பார்த்தவர்களுக்கு வெறும் ஏமாற்றமே மிஞ்சியது.

kamalhaasan

ரஜினியின் சககால நடிகரான கமல்ஹாசன், கட்சி ஆரம்பித்து மக்களவை தேர்தலில் களம் கண்ட நிலையில், ரஜினி தேர்தல் அரசியலில் ஈடுபடுவாரா? இல்லை விலகி விடுவாரா? என பரவலாக கேள்வி எழுப்பப்பட்டு வந்த நிலையில், தமிழகத்தில் எப்போது தேர்தல் நடந்தாலும் எதிர்கொள்ள தயார் என நடிகர் ரஜினிகாந்த், கொஞ்சமும் கூச்சமின்றித் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தனது போயஸ்கார்டன் இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்த ரஜினிகாந்த், ’ரசிகர்களை ஏமாற்ற மாட்டேன். தமிழகத்தில் அடுத்து எப்போது சட்டமன்ற தேர்தல் வந்தாலும் சந்திக்க தயார்’என்றார். மோடி மீண்டும் பிரதமராக வருவாரா? என்ற கேள்விக்கு பதிலளித்த ரஜினி, அது மே 23-ம் தேதி தெரியும் என்றார்.

இதையும் வாசிங்க

அரியலூர் பொன்பரப்பியில் குடியிருப்பு மீது தாக்குதல்; 8 பேர் காயம், 25 பேர் மீது வழக்குப்பதிவு!

2018 TopTamilNews. All rights reserved.