• August
    21
    Wednesday

Main Area

Main



ஆந்திராவில் டோர் டெலிவரி செய்யப்படும் ரேஷன் பொருட்கள்! ஜெகன் மோகன் ரெட்டி அதிரடி

Jagan Mohan reddy
Jagan Mohan reddy
Loading...

ஆந்திராவில் செப்டெம்பர் 1 ஆம் தேதி முதல் ரேசன் பொருட்கள் அனைத்தும் வீட்டிற்கே சென்று விநியோகிக்க முடிவெடுக்கப்பட்டது

ஆந்திராவில் புதிதாக ஆட்சி பொறுப்பை ஏற்ற ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் தலைவரும், ஆந்திர முதல்வருமான ஜெகன்மோகன் ரெட்டி பல்வேறு புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தி ஆந்திராவையே அசர வைத்து வருகிறார். அதுமட்டுமின்றி வித்தியாசமான வகையில் செயல்படுத்திவருகிறார். ஜெகன்மோகன் ரெட்டி தலைமையில் இன்று அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இதில் 5 துணை முதல்வர்கள் உட்பட அனைத்து துறை அமைச்சர்களும் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில், ரேசன் பொருட்கள் வீட்டிற்கே கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க முடிவெடுக்கப்பட்டது. அமைச்சர்கள் ஏதேனும் தவறான முறைகேடுகளில் ஈடுபட்டால் கட்சி பதவியில் இருந்தும், அமைச்சரவையில் இருந்தும் தகுதி நீக்கம் செய்வார்கள் என கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. 

2018 TopTamilNews. All rights reserved.