• August
    26
    Monday

Main Area

Main



இதெல்லாம் உங்க வீட்டில் இருக்கா? அப்போ உங்களுக்கு குடும்ப அட்டை சலுகை ரத்து!

ரேஷன்
ரேஷன்
Loading...

சென்னை: ஏசி உள்ளிட்ட 10 அம்சங்களில் ஏதேனும் ஒன்று இருந்தாலும் முன்னுரிமை குடும்ப அட்டைக்கான சலுகை பறிக்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. 

sec

வசதிபடைத்தவர்கள் மானிய விலையில் வழங்கப்படும் பொருட்களை குடும்ப அட்டை மூலம் பெறுவதாகப் புகார் எழுந்துள்ளது. மேலும் போலி குடும்ப அட்டைகள்  புழக்கத்தில் உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால் தமிழகம் முழுவதும் உள்ள குடும்ப அட்டைகளை ஆய்வு செய்யத் தமிழக அரசு அறிவித்துள்ளது. அதற்கான பணிகளும் தற்போது துவங்கியுள்ளது. 

 Ration card

அதில், வருமான வரிச் செலுத்தும் நபர் யாரேனும் ஒருவர் குடும்பத்திலிருந்தாலோ, தொழில் வரிச் செலுத்தும் ஒருவர் குடும்பத்திலிருந்தாலோ,  5 ஏக்கருக்கும் மேல் நிலம் வைத்திருந்தாலோ, அரசு பணியில் பணியாற்றுபவர் அல்லது   ஓய்வு பெற்றவரை உறுப்பினராகக் கொண்ட குடும்பத்திற்கு அரசு வழங்கும் சலுகை நிறுத்தப்படும்.

 Ration card

அதே போல், 4 சக்கர வாகனம் , ஏசி வைத்திருக்கும் குடும்பம், 3 அல்லது அதற்கும் மேல் அறைகளைக் கொண்ட கான்கிரீட் வீடுகள் உள்ள குடும்பம், வணிக நிறுவனங்களைப் பதிவு செய்து செயல்படுத்தும் குடும்பம், ஆண்டு வருமானம் ரூ. 1 லட்சத்திற்கும் மேல் உள்ள குடும்பம் ஆகியோர்கள் இதற்கு முன் சலுகை பெற்றுவந்தால் இனிமேல் அது நிறுத்தப்படும் என்று அறிவித்துள்ளது. இக்குடும்பங்கள் முன்னுரிமை பெறத் தகுதியுள்ள குடும்ப அட்டைகளைப் பயன்படுத்தினால் தற்போது அது மாற்றப்படும் என்று குறிப்பிட்டுள்ளது. 

2018 TopTamilNews. All rights reserved.