kaappan-mobile kaappan-large
  • September
    19
    Thursday

Main Area

Main

kaappan-mobile kaappan-large


பிக் பாஸ் 3 வீட்டிற்கு நுழையும் ரகுல் ப்ரீத் சிங்க்!

ரகுல் ப்ரீத் சிங்க்
ரகுல் ப்ரீத் சிங்க்
Loading...

சென்னை: பிக் பாஸ் 3 நடிகை ரகுல் ப்ரீத் சிங்க் நுழையுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 

பிக் பாஸ் நிகழ்ச்சி தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, ஹிந்தி மற்றும் கன்னடா போன்ற மொழிகளில் ஒளிபரப்பாகி வருகிறது. அந்த வகையில் சம்பத்தில் தெலுங்கில் பிக் பாஸ் 3 சீசன் தொடங்கியது.இந்த நிகழ்ச்சியை நாகார்ஜுன்னா தொகுத்து வழங்கி வருகிறார். 

இந்த நிலையில் பிக்பாஸ் வீட்டிற்குள் நடிகை ரகுல் ப்ரீத்தி சிங் செல்லவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் போட்டியாளராக இல்ல சிறப்பு விருந்தினராகச் செல்லவுள்ளாராம். ஆம்... நாகார்ஜுன், ரகுல் பிரித்திசிங் இணைந்து நடித்த 'மன்மதடு 2' படம் விரைவில் வெளியாகவுள்ளது. 

rakul

அதற்கான புரமோஷன் பணியில் படக்குழு ஈடுபட்டு வருகிறது. அதற்காக அவர் பிக்பாஸ் வீட்டிற்குச் செல்ல உள்ளதாகவும் அவருடைய பிக்பாஸ் காட்சிகள் விரைவில் ஒளிபரப்ப வாய்ப்புகள் இருப்பதாகக் கூறப்படுகிறது.  
 

2018 TopTamilNews. All rights reserved.