• December
    05
    Thursday

Main Area

Mainஎம்.ஜி.ஆர்- ஜெ., பாணியில் ரஜினியின் அரசியல் யுக்தி... டரியலாகும் அதிமுக- திமுக..!

ரஜினிகாந்த்
ரஜினிகாந்த்

ரஜினி இங்கு வெற்றிடம் என குறிப்பிடுவது மக்களால் அங்கீகரிக்கப்பட்ட மக்கள் தேர்ந்தெடுத்த முதல்வன், தலைவன் இப்போது இல்லை என்பதே.

எடப்பாடி மற்றும் ஸ்டாலின் தங்களை முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தி தேர்தலை சந்தித்து முதல்வரானால் மட்டுமே மிக சிறந்த தலைவர் என குறிப்பிடுகிறார். கருணாநிதியும், ஜெயலலிதாவும் தங்களை அப்படி நிரூபித்தவர்கள். அவர்கள் இப்போது இல்லை. அதனால் வெற்றிடம் என்கிறார் ரஜினி.  மக்கள் நலகூட்டணி அமைத்து தன்னை முதல்வர் வேட்பாளராய் அறிவித்த விஜயகாந்த்  ஆகட்டும், மாற்றம் முன்னேற்றம் என கூறி நின்ற அன்புமணியாகட்டும், தமிழ்நாட்டை தமிழன் ஆளவேண்டும். அந்த தமிழன் தான் மட்டும்தான் என் பின்னால் வந்தால் மட்டுமே தமிழன். மற்றவனெல்லாம் ஆன்டி தமிழன் என்று கூறி நிற்கும்  சீமானக்கட்டும்.

 seeman

எல்லோரும் மக்களால் புறக்கணிக்கப்பட்டவர்கள் தானே? இவர்களில் ஆக சிறந்த தலைவன் என யாரையாவது கூறமுடியுமா? உதாரணத்துக்கு ஒரு கேள்வி.  ஸ்டாலினுக்கு அடுத்து யார் திமுகவின் அடுத்த தலைவர்? எல்லோருக்கும் தெரிந்தது உதயநிதி.  தந்தையின் பதவியை மகன் எனும் உரிமையில் வாங்கிய உதயநிதியை ஆக சிறந்த தலைவர் எனச் சொல்லமுடியுமா? தேர்தலை சந்திக்க வேண்டும் அவர் தலைமையை ஏற்று கூட்டணி அமைய வேண்டும். தேர்தலில் மக்கள் தீர்ப்பளிக்க வேண்டும்.

இங்கு ஸ்டாலினை தலைவர் என ரஜினி கூறாதது அவர் இன்னும் தன்னை மக்கள் தலைவராக நிரூபிக்கவில்லை என்பதே இதன் பொருள். இதுதான் அதிமுக தலைமை நிலையும். அதிமுகவில் இரட்டை தலைமை. ஓபிஸ் எடப்படிதான் முதலவர் என அறிவித்து தேர்தலை சந்தித்து வெற்றிபெற்றால் எடப்பாடி ஒரு தலைவர்.

ஆனால் ஓபிஸ்-  எடப்பாடியை ஏற்கமறுத்து தனித்து நின்றால்? அப்படி ஒரு சாத்தியத்தை புறந்தள்ளிவிட்டு எடப்பாடியை சிறந்த தலைவர் எனச் சொல்லமுடியுமா? இதுதான் ரஜினி சொல்லும் வெற்றிடம் என்பதற்கான அடையாளம். இப்போது யார் காவி வண்ணம் பூசுவது? யாருக்கு லாபம்? ரஜினியை பிஜேபி என நிரூபித்தால் யாருக்கு என்ன பலன்? பதில் தமிழக அரசியலை கூர்ந்து கவனித்தால் புரியும். பகுத்தறிவு இயக்கத்தின் வெளிவந்து இயக்கம் தொடங்கிய எம்.ஜி.ஆர், கடவுள் நம்பிக்கைக்கு மறுப்பு சொன்னதில்லை.

vijayakanth

தன்னை மிதவாத இந்துத்துவாக அடையாளப்படுத்திக் கொண்டு இந்து ஒட்டுக்களையும் அதோடு மத சகிப்புமையுடன் நடந்து சிறுபான்மையின வாக்கை தக்கவைத்தது யுக்தி. அதே வழியை பின்பற்றிய ஜெயலலிதா, இருவரின் பாதையில் ரஜினியும் ஆன்மிக அரசியல் மூலம் இந்துக்களையும் அதேசமயம் சிறுபான்மை சமூகத்துக்கு எதிரி அல்ல எனும் மத நல்லிணக்கத்தின் மூலம் கிறிஸ்துவ-  முஸ்லீம் ஓட்டுக்களை வளைப்பதும்தான் ரஜினியின் அரசியல் யுக்தி.

ரஜினியை கண்டு திமுக சிறிது அச்சப்படுகிறது. ஏனென்றால் பிஜேபியின் எதிர்ப்பை கையிலெடுத்து சிறுபான்மை ஓட்டுகள் தனக்கு முழுதும் வர திட்டமிடும் கட்சிகள், ரஜினியை பிஜேபி ஆள் என்று கூறுவதன் மூலம் அந்த சிறுபான்மை ஒட்டுக்கள் 12% ரஜினிக்கு போகவிடாமல் செய்வதற்கு திட்டமிடுகிறது. அதை உடைத்து நான் காவி அல்ல என சொன்னதன் மூலம் திமுக கூட்டணிக்கு வேட்டு வைத்துள்ளார் ரஜினி. பிஜேபியை தமிழகத்தில் தனிமை படுத்த விரும்பும் கட்சிகளுக்கு திமுக மட்டுமே கூட்டணி வாய்ப்பு என்ற நிலையை மாற்றி, தானும் ஒரு விருப்ப பட்டியல் என சொல்லாமல் சொல்லியுள்ளார். 2017 -ல் வெற்றிடம் உள்ளது என கூறி அரசியலுக்கு வருவேன் எனச் சொல்லி இப்போவும் அதே கருத்தை கூறுவதன் மூலம் தன் அரசியல் வருகையை ஆணித்தரமாக பதிந்துள்ளார்.Rajini

தெளிவாகவும் அதேசமயம் நிதானமாகவும் அரசியலில் அடியெடுத்து வைக்கிறார் ரஜினி.
 

2018 TopTamilNews. All rights reserved.