• November
    18
    Monday

Main Area

Main



ரஜினியை அவமானப்படுத்தும் கேடுகெட்ட திமுக அழிவது நிச்சயம்... மாரிதாஸ் சவால்..!

ரஜினிகாந்த் - மாரிதாஸ்
ரஜினிகாந்த் - மாரிதாஸ்

ரஜினியின் நல்ல செயல்களை அவமானப்படுத்தும் திமுக நிச்சயம் அழியும் என சமூக ஆர்வலரும் அரசியல் விமர்சகருமான மாரிதாஸ் சவால் விடுத்துள்ளார்

இதுகுறித்து அவர், "நான் கேட்காமலேயே தன் அருணாச்சலம் படத்தின் லாபத்தில் ஒருபகுதியை அளித்தவர் ரஜினி. இப்போது வீடு வாங்கிக் கொடுத்துள்ளார் என் விருப்பப்படி என் குடும்பத்தினர் பெயரிலேயே வீடு பதிவு செய்யப்பட்டுள்ளது. வீணாக யாரும் வதந்தியைப் பரப்பவேண்டாம்" என்று கலைஞானம் அவர்கள் தெரிவித்துள்ளார்.

கொஞ்சம் கூட வெக்கமே இல்லாமல் திமுக திக ஆதரவாளர்கள் ரஜினி அவர்களுக்கு நற்பெயர் கிடைக்கும் எந்த செயலையும் எப்படி மறைப்பது எப்படி அவமானம் செய்வது என்று துடிக்கிறார்கள். கடந்த வாரம் முழுவதும் விதவிதமாக பொய்களைப் பரப்பி வந்தனர் இந்த கலைஞானம் அவர்களுக்கு வீடு பரிசு அளித்த விவகாரத்தை. இன்று கலைஞானம் விளக்கம் கொடுத்துள்ளார். இப்போ நமட்டு சிரிப்புடன் அடுத்து என்ன

maridhasபொய் சொல்லலாம் என்று ஓடிக்கொண்டிருக்கிறார்கள் திமுக -திக நிர்வாகிகள். நிச்சயம் வெக்கம் சூடு சொரணை கூச்சம் எதுவும் இல்லாத கூட்டம் அது. அதனால் தான் 3ஆம் 4ஆம் தலைமுறை கலைஞர் என்று வாழ்க கோசம் போடுகிறார்கள்.

இந்த உலகத்திலேயே ஒரு கேடுகெட்ட அயோக்கிய கும்பல் ஒன்று பல ஆயிரம் கோடிகளைக் கொள்ளை அடித்து வெளி நாடுகளில் முதலீடு செய்துவிட்டு அதனை மக்கள் அறிந்து விழித்துக் கொள்ளாத வண்ணம் தமிழ் தமிழன் திராவிடன் என்று வெக்கமே இல்லாமல் பொய்கள் மூலம் தங்கள் வாழ்க்கையை அரசியல் பிழைப்பை நடத்துகிறார்கள் என்றால் அது திமுக -திக ஆதரவாளர்கள் தவிர வேறு எவரும் இல்லை.

இந்த கட்சியை அழித்தொழித்தால் மட்டுமே இங்கே ஒரு ஆரோக்கியமான அரசியல் தொடங்கும். சில தினம் முன்பு கடற்கரையில் குப்பையை அகற்றிய நரேந்திர மோடி வீடியோவிற்கு ஒரு போட்டோ வெளியிட்டு எங்கே அவருக்கு நற்பெயர் வந்துவிடுமோ என்று அவரை அவமானம் செய்யத் துடித்தனர் . இதில் பத்திரிக்கையாளர் என்று வெக்கமே இல்லாமல் பிதற்றி கொள்ளும் கூட்டம் தான் அதிகம்.

stalin

பிச்சை எடுத்துச் செத்துப் பிழைக்கும் வாழ்க்கை கிடைத்தாலும் ஆண்டவா இந்த திமுக திக தூக்கிப் போடும் காசுக்குக் கூசாமல் பல்லைக் காட்டும் தமிழக செய்தியாளர்கள் போல் ஒரு வாழ்வு மட்டும் எந்த ஜென்மத்திலும் கிடைத்துவிடக் கூடாது. அவ்வளவு கீழ்த்தரமான இறந்து 7 நாட்கள் ஆகிவிட்ட ஒரு நாயின் சடலத்தில் மொய்க்கும் ஈ கூட்டத்தை விட அருவருப்பான பிழைப்பு திமுக ஆதரவு ஊடகவியலாளர்கள் பிழைப்பு.

நடிகர் என்பதை தாண்டி நான் அறிந்த ரஜினி என்ற மனிதர் மிக அற்புதமான நேர்மையான மனிதர். அந்த மனிதரை பொய்கள் கொண்டு அவமானம் செய்ய துடிக்கும் திமுக நிச்சயம் அழியும். அதன் அழிவை சீக்கிரம் எழுதுவோம்’’ எனத் தெரிவித்துள்ளார். 
 

2018 TopTamilNews. All rights reserved.