darbar
  • January
    20
    Monday

Main Area

Main



என் பிறந்த நாளை விமரிசையாக கொண்டாடி என்னை வாழ்த்திய அனைவருக்கும்  நன்றி - ரஜினிகாந்த்

ரஜினிகாந்த்
ரஜினிகாந்த்

பிறந்த நாளை விமரிசையாகக் கொண்டாடி வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தமிழ் திரையுலகின்  சூப்பர் ஸ்டார்  ரஜினிகாந்த்  இன்று தனது 70 ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதனால்  ரஜினி ரசிகர்கள் இலவச நலத்திட்ட உதவிகள், ஆட்டம், பாட்டம்  என அவரது பிறந்தநாளை கொண்டாடி வருகின்றனர். ரஜினிகாந்திற்கு அரசியல் பிரமுகர்களும், திரைக்கலைஞர்களும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர்.


இதுகுறித்து ரஜினிகாந்த் அவருடைய ட்விட்டர் பக்கத்தில், “என் பிறந்த நாளை விமரிசையாகக் கொண்டாடி என்னை வாழ்த்திய என்னை வாழ வைக்கும் தெய்வங்களான ரசிகப் பெருமக்களுக்கும் என்னை நெஞ்சார வாழ்த்திய தமிழ் மக்களுக்கும் திரையுலக நண்பர்களுக்கும், அரசியல் பிரமுகர்களுக்கும், பல துறையிலிருக்கும் அன்பர்களுக்கும், பத்திரிக்கை, ஊடக மற்றும் தொலைக்காட்சியினருக்கும் என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என பதிவிட்டுள்ளார். 
 

2018 TopTamilNews. All rights reserved.