• March
    28
    Saturday

Main Area

Main



பியர் கிரில்ஸுடன் ரஜினி பங்கேற்ற MAN VS WILD...ஒளிபரப்பு தேதி அறிவிப்பு!

மேன்Vsவைல்ட்
மேன்Vsவைல்ட்

பியர் கிரில்ஸ் சாகசத்துக்குப் பெயர்போனவர்...பிரிட்டனைச் சேர்ந்த வன ஆர்வலரான இவர் டிஸ்கவரி உள்ளிட்ட பிரபல டிவிக்களில் வனங்கள் தொடர்பான‌ நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கிவருகிறார். எந்த இடத்திலும் நம்மால் தப்பித்து வெளியே வர முடியும் என்பதை MAN VS WILD என்ற நிகழ்ச்சி மூலம் நிரூபித்து வருகிறார். இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமா, அமெரிக்க நடிகர்கள் ஜூலியா ராபர்ட்ஸ், நிக் ஜானஸ்,  உள்ளிட்டோருடனும் விளையாட்டு வீரர்களில் டென்னிஸ் வீரர் ரோஜர் ஃபெடரர் உள்ளிட்ட பிரபலங்கள்  கலந்துகொண்டுள்ளனர். 

 

ttn

சமீபத்தில்  MAN VS WILD நிகழ்ச்சியில் நடிகர் ரஜினிகாந்த் பங்கேற்றார். இதற்காகச் சமீபத்தில்  பந்திபுரா புலிகள் காப்பகத்தில் ஆவணப்படத்தின் படப்பிடிப்பு நடந்தது. பியர் கிரில்ஸுடன் ரஜினி  இரண்டு  நாட்கள் கலந்துகொண்டார்.அவருடன் ரஜினியின் இளையமகள் சௌந்தர்யா ரஜினிகாந்த்தும்   கலந்துகொண்டார். 

இந்நிலையில் MAN VS WILD நிகழ்ச்சியில் ரஜினி கலந்துகொண்ட நிகழ்ச்சி  எப்போது ஒளிபரப்பாகும் என ரசிகர்கள் ஆர்வமாக எதிர்பார்த்த நிலையில், மார்ச் 23ம் தேதி இரவு 8 மணிக்கு நிகழ்ச்சி ஒளிபரப்பாகவுள்ளதாக டிஸ்கவரி தொலைக்காட்சி அறிவித்துள்ளது. முன்னதாக இந்நிகழ்ச்சியின் மோஷன் போஸ்டர் வெளியானது குறிப்பிடத்தக்கது 

2018 TopTamilNews. All rights reserved.