• August
    24
    Saturday

Main Area

Rajini
ரஜினியும், கமலும் மோத மாட்டார்கள்... இருவருக்குமே பொது எதிரியாக திமுகவும் அதிமுகவும் தான்!

கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம், கடந்த வாரம் வெளியிட்ட அறிவிப்பில், 'தமிழகத்தின் ஒவ்வொரு வாக்காளரையும் கட்சியின் பொறுப்பாளர்கள் சந்திக்கும் வண்ணம், புதிய பொறுப்புகள் அறிவிக்கப்படவுள்ளன. அதன் அடிப்படையில், ஆறு பொதுச்செயலாளர்கள் அடங்கிய பட்டியல் முதலில் வெளியிடப்படுகிறது' என்று சொல்லப்பட்டிருந்தது. நமது டாப் தமிழ் நியூஸ் வாசகர்களுக்கு ஏற்கெனவே இந்த செய்தியை நாம் தெரிவித்து, மோடிக்காக பிரச்சார வியூகம் வகுத்து கொடுத்த அரசியல் நிபுணர் பிரசாந்த் கிஷோர் தான் தற்போது மக்கள் நீதி மய்யத்தில் அதிரடி மாற்றங்களுக்கு உத்தரவிட்டு, சட்டசபை தேர்தலுக்கான வியூகங்களை வகுத்து கொடுத்திருக்கிறார் என்று சொல்லியிருந்தோம்.

makkal nithi maiam

இதற்கிடையே, ஏற்கெனவே மக்கள் நீதி மய்யத்தில் பொறுப்பில் இருந்த நடிகைகள் ஸ்ரீபிரியா, கோவை சரளா ஆகியோரின் செயல்பாடுகள் மீது கமலுக்கு திருப்தி ஏற்படவில்லை என்று காதை கடிக்கிறார்கள் ஆழ்வார்பேட்டை ஆண்டவரின் விசுவாசிகள். அதனால் தான் அவசர அவசரமாக அருப்புக்கோட்டையைச் சேர்ந்த பிரபல குடும்பத்தின் உமாதேவி என்பவரை, பொதுச்செயலாளராக அறிவித்துள்ளார் கமல் என்கிறார்கள்.

uma devi

"என்னுடைய தொழிற்சாலையில் ஏராளமான பெண்கள் வேலை செய்கிறார்கள். இதனால், பெண்களின் நிலையை நன்கு அறிவேன். அதைப் பற்றி தலைமைக்குச் சில கருத்துகளை அனுப்பியிருந்தேன். அதன் அடிப்படையில் எனக்கு இந்தப் பதவியைக் கொடுத்திருக்கலாம்" என்கிறார் உமாதேவி. இதன் தொடர்ச்சியாக, முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரி மெளரியா, ஐ.ஏ.எஸ் அதிகாரி பஷீர் அகமது உள்ளிட்டோருக்கும் பதவிகள் வழங்கப்பட்டுள்ளது. கட்சியில் அதிரடி மாற்றங்களைச் செய்யும் போது, கூடவே  இன்னும் சில நாட்களில் வேறு சில அறிவிப்புகளும் வரவுள்ளன. நாடாளுமன்ற தேர்தலில் கணிசமான வாக்குகள் வாங்கியுள்ள மக்கள் நீதி மய்யம், சட்டசபை தேர்தலில் ரஜினியும் களமிறங்க இருப்பதால், இப்போதிலிருந்தே அதற்கான வியூகங்களை வகுத்து, 'ஆபரேஷன் 500' என்ற புதிய திட்டத்துடன் களத்தில் இறங்கியுள்ளது. சத்தமில்லாமல் இன்னொரு பக்கம் ரஜினியும் தன் ரசிகர் மன்றத்தினரிடையே ஒவ்வொரு தொகுத்திக்கான வேட்பாளரைத் தேர்ந்தெடுக்கும் பொறுப்பையும் ஒப்படைத்திருப்பதாகச் சொல்கிறார்கள். தொகுதி பிரச்சனைகள், தொகுதிக்குள் திராவிட கட்சிகள் ஏற்படுத்தி வைத்திருக்கும் குளறுபடிகள் என பெரிய பட்டியலை தயார் செய்து வைத்துக் கொண்டு காத்திருக்கிறார் ரஜினி!

rajini

ரஜினியின் மனதில், தேர்த்தல் சமயத்தில் சீமான், கமல் ஆகியோரைப் பற்றி விமர்சிக்கும் திட்டமே கிடையாதாம். இந்த தேர்தலில் மக்களை சந்தித்து, இரு திராவிட கட்சிகளைப் பற்றி மட்டுமே எதிர்பிரச்சாரம் செய்து சந்திக்க திட்டமிட்டிருக்கிறாராம். ஆனால், மய்யத்தில் ரஜினியின் போக்கிற்கேற்ப சட்டசபை பிரச்சாரங்களுக்கான திட்டங்கள் எல்லாம் கூட ஏற்கெனவே வகுத்து வைக்கப்பட்டிருக்கிறதாம்.

gowtham Wed, 08/21/2019 - 12:38
makkal neidhi maiam kamal Rajini ரஜினி,கமல் அரசியல்

English Title

Rajini and Kamal will not fight ... DMK and AIADMK are the common enemy of both!

News Order

0

Ticker

0 ரஜினி கட்சியில் இணையும் கராத்தே தியாகராஜன்... ப.சிதம்பரம் எடுக்கப்போகும் அதிரடி முடிவு..!

ரஜினி அரசியலுக்கு வந்தால் கராத்தே தியாகராஜன் அவர் பின்னால் போய்விடுவார் என்று காங்கிரஸுக்குள் இருக்கும் அவரது  எதிரிகள் அழுத்தமாக  சொல்கிறார்கள்.karate

ஆனால், கராத்தே தியாகராஜன் காங்கிரஸ் கட்சிக்குள் இருந்து கொண்டே குடைச்சல் கொடுத்ததின் பின்னணியில் தமிழக காங்கிரஸின் முக்கியப் புள்ளியான ப.சிதம்பரம் செயல்பட்டு வருவதாகக் கூறுகிறார்கள்.  “அவரது வழிகாட்டலில் தான் நான் இதையெல்லாம் செய்கிறேன்” என்று கராத்தே தியாகராஜன் வெளிப்படையாகவே பேசியும் வருகிறார்.stalin

மக்களவை தேர்தலில் தனது மகன் கார்த்தி சிதம்பரத்துக்கு  சீட் கொடுக்கும் விவகாரத்தில் இழுத்தடித்தது தொடங்கி அனைத்திலும் கட்சித் தலைமை தன்னை உதாசீனப்படுத்திவிட்டதாகக் கருதும் ப.சிதம்பரம் சமீப காலமாக பாஜக தலைகளுடன் இணக்கம் பாராட்டுவதாகவும் ஒரு செய்தி கசிகிறது. இதையெல்லால் முடிச்சுப்போட்டுப் பேசும் அவரது எதிரிகள், “சொல்ல முடியாது... தன்னைக் காப்பாற்றிக்கொள்ள ப.சிதம்பரம் மீண்டும் தனி இயக்கம் கண்டாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை எனக் கூறுகிறார்கள். 
 

Thijai Tue, 07/23/2019 - 20:07
karate thiyagarajan P.Chidambaram Rajini ரஜினிகாந்த் அரசியல் தமிழகம்

English Title

Rajinikanth parti joins Karate Thiyagarajan

News Order

0

Ticker

1 கமலை தொடர்ந்து சூர்யாவுக்கு ஆதரவு தெரிவித்த ரஜினி!

சென்னை: புதிய கல்விக் கொள்கை குறித்து நடிகர் சூர்யா கருத்தை ஆதரிப்பதாக நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

kappan

நடிகர் சூர்யா சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய போது, புதிய கல்விக் கொள்கை குறித்தும், மூன்று வயதிலிருந்தே இந்தி திணிக்கப்படுகிறது என்றும் பேசினார். சூர்யாவின் இந்த பேச்சுக்கு பாஜகவைச் சேர்ந்த கட்சி நிர்வாகிகள் பலரும் கண்டனம் தெரிவித்து வந்தனர். இதையடுத்து சூர்யாவின் பேச்சுக்கு நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சித்தலைவர் கமல்ஹாசன் ஆதரவு தெரிவித்தார்.

kappan

இந்நிலையில் நடிகர் சூர்யாவின் காப்பான் பட இசை வெளியிட்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பங்கேற்றார். அப்போது பேசிய அவர், 'ரஜினி புதிய கல்வி குறித்துப் பேசினால் மோடிக்கு கேட்கும் என்று கூறினார்கள். ஆனால் சூர்யா பேசியதே மோடிக்கு கேட்டுள்ளது. சூர்யாவின் கருத்தை நான் ஆதரிக்கிறேன். அவரின் இன்னொரு முகம் சில நாட்களுக்கு முன்பு தெரிந்தது' என்றார். தொடர்ந்து பேசிய அவர், 'பொன்னியின் செல்வன் படத்தை மணிரத்னம் இயக்க உள்ளார் படம் எப்படி வரும் என்ற எதிர்பார்ப்பு எனக்குள் அதிகரித்துள்ளது' என்றார்.

rajini

சூர்யாவின் கருத்துக்கு நடிகர்களும் அரசியல் கட்சி பிரமுகர்களும் ஆதரவு கூறி வரும் நிலையில் பாஜக ஆதரவாளராகப் பார்க்கப்படும் ரஜினி ஆதரவு தெரிவித்துள்ளது கவனிக்கத்தக்கது.

gowtham Mon, 07/22/2019 - 19:06
Rajini Suriya, kappan audio launch ரஜினி சினிமா

English Title

after kamal rajini given his support for suriya

News Order

0

Ticker

0 #Thalaivar167; அசத்தலான தலைவர், அழகான நயன்தாரா - புகைப்படங்கள் உள்ளே?!..

ரஜினி நடித்தும் வரும் ‘தர்பார்’ திரைப்படம் நாளுக்கு நாள் எதிர்பார்ப்பை அதிகரித்து வருகிறது.

ஏ.ஆர். முருகதாஸ் தன் படத்தில் வரும் நாயகன், நாயகியை மிக அழகாக காட்டும் இயக்குநர். துப்பாக்கி, கத்தி படங்களில் விஜய் கெட்டப்பை பார்த்து சிலாகிக்காதவர்கள் இல்லை. இப்படியான இயக்குநரிடம் சூப்பர் ஸ்டார் ரஜினி பணிபுரிவதால், அவரது ரசிகர்களின் பல்ஸ் எகிறியுள்ளது.

rajini

‘தர்பார்’ படத்தின் பூஜையை முடித்தவிட்டு படப்பிடிப்பு வேலைகளில் பிஸியாக இருக்கிறது முருகதாஸ் டீம். மும்பையில் நடைபெறும் இதன் படப்பிடிப்பில் நயன்தாரா, விவேக் மற்றும் யோகி பாபு உள்ளிட்ட பலரும் பங்கேற்கின்றனர்.

rajini

எந்த உடை அணிந்தாலும் அழகாக தெரியும் ரஜினி, முருகதாஸ் படத்தில் எப்படி இருப்பார் என்று கேட்கவா வேண்டும். ரஜினியின் ஷூட்டிங் ஸ்பாட் ஸ்டில்ஸ் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதேபோல் நயன்தாரா படப்பிடிப்பில் கலந்துகொண்ட புகைப்படமும் வெளியாகியுள்ளது.

thara

‘தர்பார்’ திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாகவுள்ளது. ‘தளபதி 63’ படத்திலும் நயன்தாரா நடித்திருக்கிறார், இந்த திரைப்படம் வருகிற தீபாவளி அன்று வெளியாகவுள்ளது. நயன்தாராவுக்கு இந்த ஆண்டு இறுதியும், அடுத்த ஆண்டு துவக்கமும் மிக சிறப்பாக அமைந்துள்ளது.  எனவே நயன்தாரா ரசிகர்கள் தலைவி.டா மாஸ்.டா சொல்ல தயாராகிக் கொள்ளுங்கள்.

இதையும் படிங்க: ரசிகர்களின் கேள்விகளுக்கு கூச்சமே இல்லாமல் பதிலளித்த யாஷிகா! அப்படி என்ன கேள்வின்னு நீங்களே பாருங்க!

Arunpandiyan Thu, 04/25/2019 - 16:09
thalaivar 167 darbar Rajini nayanthara தர்பார் ரஜினி சினிமா

English Title

#Thalaivar167; Latest stills of Rajini and nayanthara in shooting spot?!..

News Order

0

Ticker

0 தர்பார் போஸ்டர் ஹாலிவுட் டிசைன் அல்ல, மூன்று முகம் டிசைன்: மனம்திறந்த டிசைனர்

பேட்ட படத்தின் வெற்றியை தொடர்ந்து முருகதாஸ் இயக்கும் ‘தர்பார்’ படத்தில் ரஜினி நடித்து வருகிறார். நீண்ட இடைவெளிக்கு பிறகு நயன்தாரா இதில் ரஜினியுடன் ஜோடி சேர்ந்திருக்கிறார். பேட்ட படத்துக்கு பிறகு அனிருத் இரண்டாவது முறையாக இதில் ரஜினிக்கு இசையமைக்கவுள்ளார். அதேபோல் ‘தளபதி’ படத்துக்கு பிறகு ரஜினிக்கு சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்கிறார். இந்த படத்தை லைக்கா நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரிக்கிறது.

darbar

கடந்த 9-ஆம் இந்த படத்தில் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. போஸ்டர் வெளியான சில நேரங்களிலேயே இது ஹாலிவுட் படத்தின் காப்பி என சமூக வலைதளங்களில் பரவலாக விமர்சிக்கப்பட்டது.

darbar

அர்னால்டு நடித்த killing gunther என்ற படத்தின் போஸ்டரை ஷேர் செய்தனர். இதற்கு தர்பார் போஸ்டர் டிசைனர் வின்சிராஜ் விளக்கமளித்துள்ளார்.

ரஜினியின் மூன்று முகம் படத்தின் டிசைன் மற்றும் அபாய சின்னத்தை மனதில் வைத்துதான் இந்த போஸ்டர் உருவாக்கப்பட்டது என தன் பேஸ்புக் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். இவர்தான் ‘கபாலி’, ‘காலா’ படங்களின் போஸ்டர் டிசைனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் வாசிங்க: பொன்னியின் செல்வனில் சத்யராஜ்: பாகுபலியால் கிடைத்த மாஸ் ரோல் இது தான்!?

Arunpandiyan Sat, 04/13/2019 - 15:51
Rajini darbar darbar poster issue ar murugadoss ரஜினிகாந்த் சினிமா

English Title

Rajini's Darbar poster is not a hollywood copy; designer reveals the truth

News Order

0

Ticker

0 பத்த வச்சுட்டியே பரட்ட; ரஜினி - எஸ்.ஜே.சூர்யா இடையே சண்டைமூட்டும் ஏ.ஆர். முருகதாஸ்?!

பேட்ட படத்தின் வெற்றியை தொடர்ந்து ரஜினிகாந்த் அடுத்ததாக ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிக்கிறார். இந்த படத்தை பற்றிய அப்டேட்கள் வந்த வண்ணம் உள்ளது. இதில் ரஜினி மகளாக நிவேதா தாமஸ் நடிக்க இருப்பதாக கூறப்பட்டது. அதேபோல் தற்போது ஒரு அப்டேட் கிடைத்துள்ளது.

sj

‘மெர்சல்’, ‘ஸ்பைடர்’ படத்தில் எஸ்.ஜே. சூர்யா வில்லத்தனத்தை பார்த்து மெர்சல் ஆகாதவர்களே இருக்க மாட்டார்கள். அதனால் இந்த படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடிக்க எஸ்.ஜே. சூர்யாவிடம் பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது!

sj

ஆனால் அவர் அமிதாப் பச்சன் உடன் இணைந்து நடிக்கும் ‘உயர்ந்த மனிதன்’ பட வேலைகளில் பிஸியாக இருக்கிறார்.

ரஜினிக்கு எதிராக நடிக்க எஸ்.ஜே.சூர்யா சம்மதம் தெரிவித்தால். மீண்டும் ஒரு மெர்சலான வில்லன் கெட்டப்பில் எஸ்.ஜே.சூர்யாவை பார்க்கலாம். ஆனால் ரஜினி படத்தில் வில்லன்கள் ஸ்கோர் செய்வது சிரமமான விஷயம்.

ramya

இத்தனை ஆண்டு காலம் ரஜினி நடித்த படங்களில், நீலாம்பரி (ரம்யா கிருஷ்ணன்) கதாபாத்திரம் மற்றுமே பெரிய அளவில் பேசப்பட்டுள்ளது.

இதையும் வாசிங்க

திருநம்பிகளுக்கு வேலை கொடுத்த அமேசான் நிறுவனம்; ஒரே பைக்கில் டெலிவரி!

Arunpandiyan Sun, 04/07/2019 - 16:45
Thalaivar 166 ar murugadoss sj surya Rajini எஸ்.ஜே.சூர்யா - முருகதாஸ் - ரஜினி சினிமா

English Title

A.R.Murugadoss team needs sj suryah

News Order

0

Ticker

0 இயக்குனர் மகேந்திரனுக்கு டயாலிசிஸ் சிகிச்சை; விரைவில் நலம்பெறுவார் யதார்த்த கலைஞன்?

தமிழ் சினிமா இயக்குநர்களில் முக்கியமான ஒருவராக திகழ்ந்த மகேந்திரன் உடல்நலக் குறைவு காரணமாக அப்போலோவில் உள்ள தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மகேந்திரன் என்ற பெயரை நீக்கிவிட்டு தமிழ் சினிமாவின் முன்னேற்றம் குறித்து பேச முடியாது. கதாநாயக வழிபாடுகளை தகர்த்து யதார்த்த சினிமாவின் மூலம் வெகுஜன மக்களை கவர்ந்த கலைஞன். 1978-ஆம் ஆண்டு வெளியான ‘முள்ளும் மலரும்’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு இயக்குனராக அறிமுகமானார் மகேந்திரன்.

மகேந்திரன் 1

அவர் தமிழ் சினிமாவின் முக்கியமான கதைசொல்லி, சிவாஜி நடிப்பில் வெளியான ‘தங்கப்பதக்கம்’ திரைப்படத்தின் கதை அவர் கைவண்ணத்தில் உருவானது. 

முள்ளும் மலரும், ஜானி, கை கொடுக்கும் கை ஆகிய மூன்று திரைப்படங்களை ரஜினியை வைத்து இயக்கினார். ரஜினியின் மேனரிசம் (பழக்கம் வழக்கம்) ஸ்டைலாக இருப்பதில் மகேந்திரன் பங்கும் அதிகம். ரஜினி, பாலுமகேந்திரா மற்றும் மணிரத்னம் உள்ளிட்ட பல்வேறு திரை ஆளுமைகளின் மனம் கவர்ந்த கலைஞன் மகேந்திரன்.

மகேந்திரன் 2

10 ஆண்டுகளுக்கும் மேலாக திரைப்படம் இயக்குவதில் இருந்து விலகியிருந்த மகேந்திரன், ‘தெறி’ படத்தின் மூலம் நடிகர் அவதாரம் எடுத்தார்.

அதன்பிறகு உதயநிதியின் ‘நிமிர்’, ரஜினியின் ‘பேட்ட’ உள்ளிட்ட சில படங்களில் நடித்து வந்தார். இந்நிலையில் மகேந்திரன் கடந்த சில தினங்களாக காய்ச்சலில் அவதிப்பட்டு வந்தார்.

தெறி

உடல் நலிவுற்ற நிலையில் அவரை நேற்று மதியம் கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதித்தனர். அவருக்கு சிறுநீரக கோளாறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. எனவே அவரை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து  டயாலிசிஸ் சிகிச்சை அளித்திருக்கிறார்கள். நெருங்கிய நண்பர்களுக்கு மட்டும் அவரை காண அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அப்பா உடல்நிலை நலம் பெற பிரார்த்தனை செய்யுங்கள் என மகேந்திரனின் மகன் ஜான் மகேந்திரன் தனது டிவிட்டர் பக்கத்தில் உருக்கமாக பதிவு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

 

இதையும் படிங்க 

பாஜக - வில் இணைந்த அதிரடி கிரிக்கெட் வீரர் - டெல்லி தொகுதியில் போட்டியிடுகிறார்

Arunpandiyan Thu, 03/28/2019 - 13:20
Director mahendran Rajini mullum malarum மகேந்திரன் - ரஜினி சினிமா

English Title

Dialysis treatment given to director mahendran

News Order

0

Ticker

0 “மீண்டும் ரஜினி படத்தில் பணிபுரிகிறேன்” – “பேட்ட” பிரபலம் மகிழ்ச்சி!

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் அடுத்த படத்தில் பிரபல ஆடை   வடிவமைப்பாளர் நிஹாரிக்கா பாசின் ஒப்பந்தமாகியுள்ளார். “பேட்ட” படத்திலும் இவரே ஆடை வடிவமைப்பாளர் ஆவார்.

சூப்பர் ஸ்டாரை வைத்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய “பேட்ட” படத்தில் ரஜினியை பழைய ரஜினியாக பார்த்தோம் என்று அவரது ரசிகர்கள் கூறி மகிழ்ந்தனர். அதற்கு முக்கிய காரணமாக படத்தில் ரஜினியின் ஆடைகள் மிகவும் பிரமாதமாக இருந்ததும் ஒன்று.

இந்நிலையில், அப்படத்தின் ஆடை வடிவமைப்பாளரான நிஹாரிக்கா பாசினே “தலைவர் 166” படத்திற்கு ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றவுள்ளார். இந்த தகவலை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த வடிவமைப்பாளர் நிஹாரிக்கா பாசின், அதில், கபாலி படம் விளம்பரத்துக்காக பயன்படுத்தப்பட்ட விமானத்தின் போட்டோவை பதிவிட்டு, இந்த விமானத்தில் கோவா செல்வதாக குறிப்பிட்டு, முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும்  படத்தில் மீண்டும் பணியாற்றுவதில் மகிழ்ச்சி என்று பதிவிட்டுள்ளார்.

பேட்ட படத்தை போலவே..இல்லை..இல்லை அதுக்கும் மேலே, “தலைவர் 166” படத்தில் ரஜினியின் ஆடைகள் மிகவும் ஸ்டைல் ஆக இருக்க வேண்டும் என்பதே ரஜினி ரசிகர்களின் விருப்பமாக உள்ளது.

NiharikaBhasinKhan

ஏ.ஆர்.முருதாஸ் இயக்கவுள்ள இப்படத்தில் அனிருத் இசையமைக்கவுள்ளார். இப்படம் தொடர்பான பல தகவல்கள் வந்த வண்ணம் உள்ள நிலையில், அதிகாரப்பூர்வமான அறிவிப்பு கூடிய விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

newsdesk Fri, 03/08/2019 - 18:22
NiharikaBhasinKhan Thalaivar 166 Rajini rajini சினிமா

English Title

again work with rajini sir movie

News Order

0

Ticker

0 தலைவர் 166: மீண்டும் இரண்டு கதாநாயகிகள்?!

சென்னை: ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் தலைவர் 166 படத்திலும் இரண்டு கதாநாயகிகள் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் திரைப்படம் தலைவர் 166, இன்னும் பெயர் வைக்கப்படவில்லை. பேட்ட படத்தின் வெற்றியை தொடர்ந்து வருவதால், இந்த படம் ரஜினி ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. தளபதி படத்துக்குப் பிறகு ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் இதில் பணிபுரிகிறார். இந்த படத்துக்கு இசையமைக்க அனிருத் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் பேட்ட படத்தை போலவே இந்த படத்திலும் இரண்டு கதாநாயகிகள் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

nayan

நயன்தாரா மற்றும் கீர்த்தி சுரேஷ் ஆகியோருடன் பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறதாம், இதுபற்றிய அதிகாரப்பூர்வ தகவல் வெகுவிரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Arunpandiyan Sat, 03/02/2019 - 21:22
Thalaivar 166 rajinikanth Rajini nayanthara ar murugadoss keerthi suresh ரஜினி சினிமா

English Title

Thalaivar 166: 2 heroines in rajinis next

News Order

0

Ticker

0 ‘எந்த தண்ணி’என்பதில் கமலுக்கு  குழப்பமாகத்தான் இருக்கும்! சூப்பர் ஸ்டார் ரஜினி ரசிகர்கள் கொந்தளிப்பு !?

சென்னை: தண்ணீர் பிரச்சனை பற்றி ரஜினி பதிவு செய்த கருத்தை கலாய்த்த கமல்ஹாசனை, ரஜினி ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர்.

பல ஆண்டு காலமாக அரசியலுக்கு வருவதாக சொல்லிக்கொண்டிருக்கிறார் சூப்பர் ஸ்டார் ரஜினி! ரஜினி மக்கள் மன்றத்திற்கான கொடியை அறிமுகப்படுத்தினார்.அதன் தொடர்பாக டிஜிட்டல் முறையில் உறுப்பினர் சேர்க்கை...ஒவ்வொரு வாக்கு சாவடிக்குமான பூத் கமிட்டி அமைப்பது என அரசியல் பரபரப்பு அரங்கேறியது என்னவோ உண்மைதான்.
 
ஆனால்,கட்சிக்கான அறிவிப்பு வெளியிடுவதில் எப்போதும் போல் தாமதப்படுத்தவே செய்தார்.பாராளுமன்ற தேர்தல் நடப்பதற்கான சூழலில்,மாவட்ட பொறுப்பாளர்களை சந்தித்துப் பேசினார்.அவரது ரசிகர்கள் மட்டுமின்றி பல அரசியல் கட்சிகளும் ரஜினி தேர்தல் குறித்து அறிவித்தால்,யார்,யாருடன் கூட்டணி வைப்பார்கள் என்று ஆளாளுக்கு ஒரு கணக்கு போட்டுக்கொண்டிருந்த நிலையில் ‘சட்டமன்ற தேர்தல்தான் எங்கள் இலக்கு ‘என்று அறிவித்ததில் சூப்பர் ஸ்டாரின் ரசிகர்களுக்கு அதிர்ச்சியையும் சில கட்சிகளுக்கு மகிழ்ச்சியையும் கொடுத்திருக்கிறது அவரது அறிவிப்பு.
 

அதோடு,’தமிழகத்தின் முக்கியமான பிரச்சனை தண்ணீர் பிரச்சனை, அதை நிரந்தரமாகத் தீர்த்து வைக்கும் திட்டங்களை வகுத்து, அதை உறுதியாக செயல்படுத்துபவர்கள் என்று யாரை நம்புகிறீர்களோ அவர்களுக்கு வாக்களிகயுங்கள் என அறிக்கை வெளியிட்டார்.
 
அது குறித்து பல்வேறு மீம்ஸ்களை தட்டிவிட்டது நெட்டிசன் க்ரூப்.தண்ணீர் பிரச்சினையை ‘யார் தீர்ப்பார்கள்’ என்ற வார்த்தையில் உள்ள சூட்சுமத்தைச் சுட்டிக்காட்டி ,தற்போது இருக்கும் பா.ஜ.க தீர்க்கவில்லை.தீர்க்கக்கூடிய ஆள் யார் என்பதை முடிவு செய்ய வேண்டும் என்றால் வருகிற தேர்தலில் மத்தியில் யார் ஆட்சி அமைக்கிறார்களோ அவர்கள் ‘தண்ணீர் பிரச்சினையை  தீர்த்தார்களா இல்லையா என்பதை;ஆட்சி காலம் முடிந்த பிறகுதான் சொல்ல முடியும்.
 
அப்படியிருக்க ,இப்படியொரு குழப்பமான அறிக்கை எதற்கு என்பதுதான் நெட்டிசன்களின் கேள்வி!
 
இந்நிலையில் இன்று நடந்த பத்திரிகையாளர்கள் சந்திப்பின் போது ’மக்கள் நீதி மய்யம் ‘கட்சியின் தலைவர் கமல்ஹாசனிடம்  ரஜினியின் அறிக்கை குறித்து கேட்டதற்கு “ரஜினி எந்த தண்ணியை சொல்றார்னு தெரியல.எந்தத் தண்ணினு தெளிவா சொன்னப் பிறகு கருத்து சொல்கிறேன்” என தெரிவித்திருக்கிறார்.

rajini
நாற்பதாண்டுகளுக்கும் மேலாக சூப்பர் ஸ்டார் ரஜினியும் கமல் ஹாசனும் நட்பாக இருப்பவர்கள்.இரண்டு வாரத்திற்கு முன்புகூட தனது இரண்டாவது மகள் திருமணத்திற்கு ,கமலின் மய்யம் கட்சி அலுவலகத்திற்கே நேரில் சென்று அழைப்பிதழ் கொடுத்தார் சூப்பர் ஸ்டார்.கமலும் அந்த விழாவிற்கு சென்று மணமக்களை வாழ்த்தினார்.

kamal
 

சினிமாவில் இருவருவரும் எதிரெதிர் துருவங்களாக இருந்தாலும்,தனிப்பட்ட முறையில் நட்போடுதான் இருந்தார்கள்.இப்படியான சூழ்நிலையில் ரஜினியின் அறிக்கை பற்றி கமல் ‘கலாய்த்தது’ ரஜினி ரசிகர்களை கொந்தளிப்பில் ஆழ்த்தியிருக்கிறது.
 
‘எந்த தண்ணி’என்பதில் அவருக்கு குழப்பமாகத்தான் இருக்கும், அவர் பார்க்காததா!? என்று சோசியல் மீடியாவில் ஓவர் டைம் போட்டு பதிலடி கொடுக்க ஆரம்பித்திருக்கிறார்கள்.கமலுக்கு இது தேவையா!?
 

Arunpandiyan Fri, 02/22/2019 - 15:46
Rajini kamal hassan Makkal Needhi Maiam water issue ரஜினி கமல் (கோப்புப்படம்) தமிழகம்

English Title

Rajini fans angry on kamal for criticizing rajini

News Order

0  
rajini

விபத்தில் உயிரிழந்த ரஜினி மக்கள் மன்ற நிர்வாகி: ரூ. 50 லட்சம் பண உதவியோடு வீட்டை மீட்டுத் தந்த ரஜினி

சாலை விபத்தில் உயிரிழந்த தர்மபுரி மாவட்ட செயலாளர் குடும்பத்துக்கு ரூ 50 லட்சம் பண உதவியும், அடமானத்தில் இருந்த வீட்டையும் மீட்டுக் கொடுத்துள்ளார் ரஜினிகாந்த்.


ரொமான்ஸ் - காமெடியில் ரஜினி டாப்: கார்த்திக் சுப்பராஜ்

சென்னை: காமெடி, ரொமான்ஸ் காட்சிகளில் ரஜினியின் நடிப்பு குறித்து ‘பேட்ட’ இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் நெகிழ்ந்து பேசியுள்ளார்.

ரஜினி நடிப்பில் உருவான ‘பேட்ட’ படத்தை இயக்கிய கார்த்திக் சுப்பராஜ், தனியார் டிவிக்கு அளித்த பேட்டி ஒன்றில் ரஜினி நடிப்பு பற்றி தெரிவித்துள்ளார். ரஜினி எந்த காட்சிகளை மிகவும் ரசித்து நடிப்பார் என கார்த்திக் சுப்பராஜிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், ரஜினி சார் காமெடி மற்றும் ரொமான்ஸ் காட்சிகளை மிகவும் ரசித்து நடிப்பார். இதுபோன்ற காட்சிகளில் அவர் நடிப்பும், எனர்ஜி லெவலும் வியக்க வைக்கும். அவர் காமெடி - ரொமான்ஸ் திரைப்படங்களில் நடிப்பதை அதிகம் விரும்புவார் என தெரிவித்துள்ளார்.

Arunpandiyan Sun, 02/10/2019 - 17:46
Rajini Petta karthik subbaraj romance comedy rajinias சினிமா

English Title

Rajini eager to act in romance comedy films: karthik subbaraj

News Order

0 

rajini

ரஜினி பெற்றோர் நினைவு மண்டபம் என்னாச்சு?

நடிகர் ரஜினிகாந்த கட்சி ஆரம்பிப்பாரா மாட்டாரா என்பதெல்லாம் பல நூறு கேள்விகளாக இருக்கும் நிலையில், அவரது பெற்றோர்களுக்கு மணிமண்டபம் கட்டுவேன் என்று சொன்ன அவரது வாக்கு என்னாச்சு என்ற...


petta

பேட்ட: தரமான சிறப்பான சம்பவம்: பிரபலங்களின் பார்வையில்...!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்  நடிப்பில் உருவாகியுள்ள பேட்ட திரைப்படம்  இன்று வெளியாகி ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.2.0 படத்திற்கு வாழ்த்து கூறிய பேட்ட: எப்படி தெரியுமா?

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள 2.0 திரைப்படத்திற்கு 'பேட்ட' படக்குழு வாழ்த்து தெரிவித்துள்ளது.

இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் பிரம்மாண்ட பொருட் செலவில் உருவாகியுள்ள ‘2.0’ திரைப்படத்தில் ரஜினிகாந்த், அக்ஷய்குமார், எமி ஜாக்சன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அதிநவீன தொழில்நுட்பத்தில் உருவாகியுள்ள இப்படம் நாளை உலகம் முழுவதும் வெளியாகிறது.

இந்நிலையில் பேட்ட படக்குழு 2.0 திரைப்படத்திற்கு வாழ்த்து தெரிவித்துள்ளது. இது குறித்து சன் பிக்சர்ஸ் நிறுவனம் தனது டிவிட்டர் பக்கத்தில், பேட்ட ரஜினி, 2.0 சிட்டி என இரு கதாபாத்திரத்தின் புகைப்படத்தை வெளியிட்டு 2.0 திரைப்படம் வெற்றிப்படமாக அமைய தங்கள் வாழ்த்தை தெரிவித்துள்ளனர்.

சன் பிக்சர்ஸின் இந்த வாழ்த்துக்கு 2.0 படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைகா புரொக்ஷன் நன்றி தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
 

manikkodimohan Wed, 11/28/2018 - 14:21
Petta 2.0 super star rajinikanth Rajini sun pictures rajini சினிமா

English Title

sun pictures wishes to the success of 2.0
2018 TopTamilNews. All rights reserved.