ஆந்திர மாநிலத்தில் உள்ள கல்கி பகவான் ஆசிரமத்திலும் அவரது மகன் என்.கே.வி கிருஷ்ணாவிற்குச் சம்பந்தப்பட்ட சென்னை உள்ளிட்ட 40 இடங்களிலும் வருமான வரித்துறையினர் கடந்த 17 ஆம் தேதி அதிரடியாகச் சோதனை மேற்கொண்டனர். 5 நாட்களாக நடந்து வந்த சோதனை இன்றோடு நிறைவடைந்த நிலையில், கல்கி பகவானும் அவரது மகனும் 800 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, கல்கி பகவானின் இல்லத்தில் கணக்கில் வராத 20 கோடி மதிப்பிலான அமெரிக்க டாலர்கள் மற்றும் 90 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
மேலும், வெளிநாடுகளில் அவர்களது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் பேரில் பல கோடி ரூபாய் மதிப்பிலான சொத்து வாங்கியிருப்பதும் அம்பலமானது. இதனையடுத்து, கல்கி பகவானும் அவரது மகன் என்.கே.வி கிருஷ்ணாவும் அமலாக்கத் துறையினரிடம் விசாரணைக்காக ஒப்படைக்கப்படுவர் என்று தகவல் வெளியாகிறது.