• August
    21
    Wednesday

Main Area

Main



அன்புடன் பணியாற்றுங்கள் மோடிஜி... ராகுல் காந்தி அட்வைஸ்!

Rahulgandhi
Rahulgandhi
Loading...

நாட்டின் பிரதமராக இருக்கும் மோடி அவர்களே வெறுப்பைவிட்டுவிட்டு அன்புடன் பணியாற்றுங்கள் என காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.

மத்திய பிரதேசத்தில் 7 ஆம் கட்ட தேர்தலுக்கான பரப்புரை தீவிரமாக நடைபெற்று  வருகிறது. பரப்புரையின்போது தனியார் ஆங்கில செய்தி தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த ராகுல், “ ஊழல், பண மதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி  குறித்து பிரதமர்யிடம் விவாதிக்க நான் தயார்...இந்திய நாடு அன்பால் நிறைந்தது. ஆனால் மோடி மனதில் வெறும் வெறுப்பு மட்டுமே உள்ளது.  அவருடன் நான் மரியாதையாகவும், அன்பாகவும் பேசுவேன்... ஆனால் அவர் அவ்வாறு பேசமாட்டார். தயவு செய்து அன்பால் நிறைந்த இந்த நாட்டிற்கு அன்புடன் பணியாற்றுங்கள். மோடி தற்போது மிகுந்த அச்சத்தில் உள்ளார். 5 ஆண்டுகளுக்கு முன் மோடியை வெற்றிக்கொள்ள முடியாது என எங்களிடம் பலர் கூறினர். ஆனால் தற்போது மோடி வெற்றி பெறுவார் என யாரும் உறுதியாக சொல்லவில்லை. என்னுடைய தந்தையை குறித்தும், பாட்டியை குறித்தும் பிரதமர் மோடி அவதூறாக பேசுகிறார். ஆனால் நான் அவரை அனைவர் முன்பும் கட்டிப்பிடித்து எனது அன்பை வெளிப்படுத்தின்” என தெரிவித்துள்ளார். 

2018 TopTamilNews. All rights reserved.