• August
    26
    Monday

Main Area

Main



இயக்குநர் லிங்குசாமியை எல்லா ஹீரோக்களும் கைவிட்ட நிலையில்....எதிர்பாராத ட்விஸ்ட் கொடுத்த அவர்...

இயக்குநர் லிங்குசாமி
இயக்குநர் லிங்குசாமி
Loading...

கடந்த இரண்டு வருடங்களாக, முன்னணி நடிகர்கள் யாரும் கால்ஷீட் தராமல் இழுத்தடித்ததால் படம் கிடைக்காமல் தவித்து வந்த இயக்குநர் லிங்குசாமிக்கு பேய்ப்பட மன்னன் ராகவா லாரன்ஸ் கால்ஷீட் தர முன்வந்து காப்பாற்றியிருக்கிறார்.

தனது முதல் படம் ‘ஆனந்தம்’ தொடங்கி 2010ல் வெளியான ‘பையா’ வரை நல்ல ரன்கள் எடுத்து வந்த லிங்குசாமி அடுத்து தொடர்ந்து கோட்டை விட்டு அடிக்கடி டக் அவுட் ஆக ஆரம்பித்தார். ‘வேட்டை’,’அஞ்சான்’, கடைசியாக ரிலீஸான ‘சண்டக்கோழி 2’ என்று ஒன்றை ஒன்று மிஞ்சிய தோல்விப்படங்களும், அவரது வெளியான சில தோல்விப்படங்களும் அவரைப் பெரும் கடனாளியாக மாற்றி வெளியே தலைகாட்ட முடியாமல் செய்தன.

lingusamy

’சண்டக்கோழி2’வின் தோல்விக்குஇ பிறகு அவரிடம் விக்ரம்,சூர்யா, ஆர்யா போன்ற அவரது முன்னாள் ஹீரோக்கள் கதை கேட்கக்கூட தயாராக இல்லை. சரி ‘ரன்’ காம்பினேஷனை மறுபடியும் முயற்சித்துப்பார்க்கலாம் என்றால் 2022 வரை மாதவன் படுபிசி.

raghava

இந்நிலையில் தற்செயலாக ஒரு நிகழ்ச்சியில் ராகவா லாரன்ஸை சந்தித்த லிங்குசாமி, இவர்தான் இந்தியில் படம் இயக்கப்போய்விட்டாரே நமக்கு எங்கே கால்ஷீட் தரப்போகிறார் என்று நம்பிக்கையில்லாமல், ஒரு கதை சொல்லியிருக்கிறார். அதைக்கேட்டு உற்சாகமான லாரன்ஸ் ‘இன்னும் 4 மாசத்துல இந்திப்படத்தை முடிச்சிடுவேன். தமிழ்ல நான் நடிக்கிற அடுத்த படம் உங்களோடதுதான் சார்’என்று சர்ப்ரைஸ் கொடுத்திருக்கிறாராம்.

2018 TopTamilNews. All rights reserved.