• November
    23
    Saturday

Main Area

Main



சின்ட்ரெல்லா படத்தில் பேயாக நடிக்கும் ராய் லட்சுமி!

Rai laxmi
Rai laxmi
raai laxmi cindrella

ராய் லட்சுமி  வித்தியாசமான வேடத்தில் நடித்துள்ள ‘சின்ட்ரெல்லா’ படத்தின் டீஸரை படக்குழுவினர்கள் வெளியிட்டுள்ளனர். 

இயக்குநரும் நடிகருமான  எஸ்.ஜே. சூர்யாவின் உதவியாளர் வினோ வெங்கடேஷ் இயக்கத்தில் தயாராகிவரும் பேய் படம் சின்ட்ரெல்லா. இந்த படத்தில் ராய் லட்சுமி பேயாக நடித்துள்ளார். அஸ்வமித்ரா இசையில், எஸ்எஸ்ஐ புரொடக்‌ஷன் தயாரிக்கும் இந்த படத்தின் டீசர் தற்போது மிரட்டலாக வெளியாகியுள்ளது. 

இப்படத்தில் நடிகை சாக்‌ஷி அகர்வால், ரோபோ சங்கர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.  திகில் காட்சிகள், நடுங்க வைக்கும் இசை என அதிரவைக்கும் இந்த டீசர் ரசிகர்களை பீதியடையவைத்துள்ளது என்றே கூறலாம். டீசரை பார்க்கும் போது ராய் லட்சுமி படத்தில் கொலைகாரியாக நடித்துள்ளாரா அல்லது பேயாக நடித்துள்ளாரா என்ற குழப்பம் ஏற்படுகிறது.

2018 TopTamilNews. All rights reserved.