• March
    31
    Tuesday

Main Area

Main



விஜய் வாடகைக்கு கூட வீடு தரவில்லை... ஆனால் ரஜினி சொந்த வீடே வாங்கிக்கொடுத்துள்ளார் தயாரிப்பாளர் கலைஞானம்

sac- vijay
sac- vijay

பிரபல தயாரிப்பாளர் கலைஞானத்துக்கு 1990 களில் விஜயின் அப்பா சந்திரசேகர் வாடகைக்கு கூட வீடு கொடுக்கவில்லை என அவர் வேதனையுடன் பதிவு செய்திருக்கிறார். 

1997 ஆம் ஆண்டு நடிகர் விஜய்யின் தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர், தயாரிப்பாளர் கலைஞானம் வீட்டுக்கு சென்று அவரை சந்தித்துள்ளார். விஜய்யை ஹீரோவாக வைத்து தான் எடுத்த இரண்டு படங்களும் ஓடவில்லை. இரண்டு வீடுகளை விற்றுவிட்டேன். தற்போது மூன்றாவது முறையாக படம் எடுத்துள்ளேன். அதற்கு உதவி செய்யுங்கள் என கேட்டாராம் சந்திர சேகர். 

producer kalaignanam

அதற்கு கலைஞானம், நீங்கள் விஜய் படத்தில் நடிப்பேன் என கூறியதற்காக அவரை பெல்ட்டால் அடிதீர்களாமே, அப்பவும் விஜய் முரட்டு பிடிவாதம் பிடித்து வீட்டை விட்டு வெளியேறிய பிறகு ஷோபாவின் ஆதரவால்தான அவரை ஒரே ஒரு படம் மட்டும் தயாரிக்க நீங்கள் ஒப்புக்கொண்டதாக உங்கள் வீட்டிலிருந்த எழுத்தாளர் கூறியதாக தெரிவித்துள்ளார். இப்படி சொல்லிவிட்டு சந்திரசேகர் கேட்டதற்காக புதிய படத்தில் விஜய்யை நடிக்கவைக்க தயாரிப்பாளரையும் ரெடி பண்ணி கொடுத்திருக்கிறார் கலைஞானம்.


அதன்பின் சில ஆண்டுகள் கழித்து விஜய் முன்னணி ஹீரோவாகி சென்னையில் பல வீடுகள் வாங்கி வாடகைக்கு விட்டிருந்தார். அப்போது எனக்கு ஒரு வீடு வாடகைக்கு வேண்டும் என எஸ்.ஏ.சந்திரசேகரை கலைஞானம் கேட்டதாகவும், அவர் எல்லாம் விஜய் மற்றும் அவர் மனைவி தான் பார்த்துக்கொள்கிறார்கள் எனக் கூறி வாடகைக்கு வீடு தர மறுத்துவிட்டார்கள். ஆனால் நான் கேட்காமலேயே ரஜினி எனக்கு வீடு வாங்கி கொடுத்துள்ளார் என கூறுகிறார் கலைஞானம். 

2018 TopTamilNews. All rights reserved.