• December
    16
    Monday

Main Area

Main



செயற்கை நகைகளை அணிவதில் இத்தனை பிரச்சனைகளா?

செயற்கை நகைகளை
செயற்கை நகைகளை

தங்கத்தின் மீது யாருக்குத் தான் ஆசை இருக்காது? ஆனால், எல்லா காலங்களிலும் தொடர்ந்து தங்க ஆபரணங்களையே பயன்படுத்த முடியுமா? தொடர்ந்து பயன்படுத்துவதால், மூன்று மாதங்களுக்கு ஒருமுறை தங்க வளையல் வளைந்து நெளிந்து தேய்ந்து போகிறது. ஒவ்வொரு முறையும் வளையல் மாற்றும் போது செய்கூலி, சேதாரம் எல்லாம் போட்டு கூட்டி கழித்து வயிற்றில் புளியைக் கரைப்பார்கள். அதனால், அன்றாட பயன்பாட்டிற்காக பலரும் இப்போது, தங்க நகைகளுக்கு மாற்றாக பெண்டட்டுகள் போன்ற செயற்கை நகைகள் பக்கம் திரும்பி விட்டனர்.

jewelry

ஆனால் தொடர்ந்து தங்கத்திற்குப் பதில் அணியும் செயற்கை நகைகளைப் பயன்படுத்தி வருவதால், பலருக்கும் சருமத்தில் ஒவ்வாமையை ஏற்படுகிறது.
பார்க்க அழகாக கண்ணைக் கவரும் விதத்தில் பல வண்ணங்களில் விற்கப்படும் செயற்கை நகைகள் எல்லோருக்கும் ஒத்துக் கொள்வதில்லை. தவிர செயற்கை நகைகளில் பதிக்கப்படும் கற்களினால் தலைவலி, கழுத்து வலி போன்ற உபாதைகள் போனஸாகவும் கிடைக்கிறது. இந்த போலி நகைகள் நிக்கல், குரோமியம் போன்ற உலோகங்களால் செய்யப்படுவதால் சருமத்தில் அரிப்பு, ஒவ்வாமை எதிர்வினைகள், ஆபரணங்களை அணிகின்ற இடத்தில் வெள்ளைத் திட்டுக்கள், சிவந்து போதல், சிறிய நீர் கோர்த்த கொப்புளங்கள் மற்றும் உடலினுள் உறிஞ்சப்படுவது போன்ற விளைவுகளை ஏற்படுத்துகிறது.

jewellery

ஒன் கிராம் கோல்டு என்று விற்கப்படும் நகைகளில் மற்ற உலோகத்தின் மேல் தங்க நிறத்தில் முலாம் பூசி விற்கிறார்கள். சருமத்தின் மேல் இருக்கும் வியர்வை மற்றும் அழுக்குகள் மீது இந்த உலோகம் உரசும் போது ஏற்படும் எதிர்வினையாலும் ஒவ்வாமை ஏற்படக்கூடும். உலோக ஒவ்வாமை இருப்பவர்கள் கூடியவரை செயற்கை நகைகள் அணிவதை தவிர்க்கலாம்.
அப்படியும் விருந்து, விசேஷங்களில், உறவினர் வீடுகளுக்கு செல்ல நேர்கையில் என்று செயற்கை நகைகளை அணிந்தே தீர வேண்டிய கட்டாயத்தில் இருப்பவர்கள் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் சில இருக்கின்றன. இவற்றை கடைபிடித்தால், சருமத்தைப் பாதுகாக்கலாம். 
செயற்கை நகைகளை போட்டுக் கொண்டு வெளியில் சென்று விட்டு, வீட்டுக்கு வந்தவுடன் நன்றாக சுத்தம் செய்து உலர வைத்து, காட்டன் உள்ள பெட்டிகளில் காற்றுப் புகாமல் இறுக்கமாக மூடி வைத்துவிட வேண்டும். 

jewellery

போலிநகைகள் அணிந்துள்ள சருமப் பகுதியில் பர்ஃப்யூம் உபயோகிக்க வேண்டாம். செயற்கை நகைகளை அணிவதற்கு முன் அவை சருமத்தில் படும் இடங்களில் ஈரம் இல்லாமல், துடைத்து உலர வைத்த பின் அணிவது நல்லது. எந்நேரமும் வியர்வையோடு இருக்க வேண்டியிருக்கும். எல்லாவற்றிற்கும் மேலாக, அழகு என்பது அணிகின்ற ஆபரணத்தில் இல்லை... நமது முகத்தில் அணியும் புன்னகையில் இருக்கிறது என்பதை மனதில் நினைவு வைத்துக் கொள்ளுங்கள். உடலுக்கு ஒத்துழைக்காத நகைகளை அழகுக்காக அணியாதீர்கள்!

2018 TopTamilNews. All rights reserved.