kaappan-mobile kaappan-large
  • September
    19
    Thursday

Main Area

Main

kaappan-mobile kaappan-large


பெஹ்லு கான் கொலை விவகாரம்! பிரியங்கா காந்தி மீது கிரிமினல் வழக்கு....

பிரியங்கா காந்தி
பிரியங்கா காந்தி
Loading...

2017ம் ஆண்டில் அரியானாவை சேர்ந்த பெஹ்லு கான் தனது மகன்களுடன் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் கால்நடை சந்தையில் மாடுகளை வாங்கி அவற்றை வாகனத்தில் ஏற்றி அரியானாவில் உள்ள தனது சொந்த ஊருக்கு கொண்டு சென்றார். டெல்லி-ஆழ்வார் தேசிய நெடுஞ்சாலையில் பெஹ்ரர் அருகே அந்த வாகனம் சென்று கொண்டிருந்த போது அவரது வாகனத்தை ஒரு கும்பல் வழிமறித்தது. 

பெஹ்லு கான் (கோப்பு படம்)

வாகனத்தில் இருந்த பெஹ்லு கான் மற்றும் அவரது மகன்களை வெளியே இழுத்து கடுமையாக தாக்கினர். இந்த தாக்குதலில் படுகாயம் அடைந்த பெஹ்லு கான் சிகிச்சை பலன் இன்றி மருத்துவமனையில் உயிர் இழந்தார். பெஹ்லுகான் தாக்கப்பட்ட காட்சி தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

பெஹ்லு கான் கொலை தொடர்பாக போலீசார் 6 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர் இந்த கொலை வழக்கு தொடர்பாக ஜெய்ப்பூர் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது. இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது. ஆதாரமாக வழங்கப்பட்ட வீடியோ தெளிவாக இல்லாததால், குற்றம்சாட்டப்பட்ட 6 பேரையும் நீதிமன்றம் விடுதலை செய்து உத்தரவிட்டது. இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இது தொடர்பாக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பிரியங்கா காந்தி டிவிட்டரில் கருத்து பதிவு செய்து இருந்தார். நீதிமன்றத்தின் தீர்ப்பு அதிர்ச்சி அளிப்பதாகவும், இந்த விவகாரத்தில் நீதி கிடைக்க ராஜஸ்தான் அரசு நடவடிக்கை எடுக்கும் என தான் நம்புவதாக பதிவு செய்து இருந்தார். தற்போது இந்த பதிவுதான் அவருக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. 

பெஹ்லு கான்  (கோப்பு படம்)

சுதிர் ஓஜா என்பவர் தற்போது பிரியங்கா காந்தி மீது கிரிமினல் வழக்கு தொடர்ந்துள்ளார். இது தொடர்பாக சுதிர் ஓஜா கூறுகையில், போதிய ஆதாரம் இல்லாததால் நீதிமன்றம் குற்றம் சாட்டப்பட்டவர்களை விடுதலை செய்தது. இந்த தீர்ப்புக்கு எதிராகவும், மதவெறியை தூண்டும் விதத்திலும், நீதிமன்றத்தை அவமதித்தும் டிவிட் செய்துள்ளார். இது தொடர்பாக வழக்கு தாக்கல் செய்தேன். நீதிமன்றமும் அதனை ஏற்று கொண்டது. ஆகஸ்டம் 26ம் தேதி விசாரணைக்கு வருகிறது என தெரிவித்தார்.

2018 TopTamilNews. All rights reserved.