• October
    16
    Wednesday

Main Area

Main



கைதிகளின் கைப்பக்குவதில் சிக்கன் பிரியாணி காம்போ! விலை ரூ. 127 மட்டுமே!! 

biryani
biryani

கேரளாவில் சிறைக் கைதிகளின் கைப்பக்குவத்தில் சமைக்கப்பட்ட சிக்கன் பிரியாணி காம்போ ரூ 127 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

வையூர் சிறைச் சாலையில் உள்ள கைதிகளால் சமைக்கப்பட்ட பிரியாணி கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் ஆன்லைனில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்ததையடுத்து அதிக அளவு பிரியாணிகளை கைதிகளை வைத்தே செய்து ஆன்லைன் உணவு சேவையை தொடங்கியது. இதற்காக ஸ்விக்கி நிறுவனத்துடன் ஒப்பந்தமும் பெற்றுள்ளது. 

தொடக்கத்தில் பிரியாணி மட்டுமே தயாரித்துக்கொடுத்துக்கொண்டிருந்த சிறைத்துறை நிர்வாகம், அமோக விற்பனையை தொடங்கி காம்போ ஆஃபர்களையும் அறிமுகம் செய்தது. இந்த காம்போ பேக்கேஜில் 300 கிராம் பிரியாணி, சிக்கன் லெக் பீஸ் ஒன்று, மூன்று சப்பாத்திகள், ஒரு கப் கேக், சாலட், ஊறுகாய் மற்றும் ஒரு லிட்டர் தண்ணீர் பாட்டில் ஆகியவை வெறும் ரூ.127க்கு வழங்கப்படுகிறது. குறைந்த விலையில் இவ்வளவு வசதிகளை கொடுத்த கைதிகளின் பிரியாணிக்கு கேரளாவில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. 

2018 TopTamilNews. All rights reserved.