• July
    24
    Wednesday

Main Area

Prayer
கேட்பதைத் தரும் கற்பக விருட்சமாய் மயிலை கற்பகாம்பாள்

ஆடி மாசம் பொறந்தாச்சு... ஊர் முழுக்க அம்மன் கோயில்களை தரிசிக்க பெண்கள் திட்டமிட்டுக் கொண்டிருக்கிறார்கள். இந்த ஆடி மாதத்தில் கேட்டதெல்லாம் தருகிற கற்பக விருட்சமாக வீற்றிருக்கும் மயிலை கற்பகாம்பாளைத் தரிசிக்க மறந்து விடாதீர்கள். 
பெயருக்கு ஏற்றாற் போல் இந்த தலத்தில் பக்தர்கள் கேட்பதை எல்லாம் தருகிற கற்பக விருட்சமாகவே இருக்கிறாள் கற்பகாம்மாள். அதனால் இந்த ஆலயத்தில் அம்பாளைப் பிரார்த்தித்தால், நினைத்தது நிறைவேறும்; எண்ணிய காரியங்கள் யாவும் ஈடேறும். உங்கள் மனக்குறைகளை எல்லாம் தீர்த்து, வாழ்வில் ஒளியேற்றி பெற்ற பிள்ளையை நலமுடன் பார்த்து, வழிநடத்தும் அன்னையாக இருக்கும் கற்பகத்தை ஒரு முறை வந்து தரிசித்துச் செல்லுங்கள். மனமுருகி வேண்டும் பிள்ளைகளின் கோரிக்கைக்கு நிச்சயம் செவி சாய்ப்பாள் அன்னை.
மயிலாப்பூரில் கபாலீசரம் திருக்கோயிலில் அருள்பாலிக்கும்  கற்பகாம்பாள், கலக்கத்துடன்

prayer

தன்னை நாடி வருபவர்களுக்கு எல்லாம் மனதில் தெளிவைக் கொடுத்து புத்துணர்ச்சி தருகிறாள்.  வாழ்வில் எல்லா சுகங்களையும் தருபவள் அன்னை கற்பகாம்மாள். ஒரு முறை இந்த ஆலயத்திற்கு வந்து கற்பகத்தைத் தரிசிப்பவர்களை, மீண்டும் மீண்டும் தன்னை நோக்கி ஆனந்தமாய் ஆலயத்திற்கு வரவழைக்கும் சக்தி படைத்த சாந்த சொரூபிணியாய்  கற்பகாம்பாள் சிரித்தப்படியே நின்றிருக்கிறாள். 
‘கற்பகம்’ என்றால் ‘வேண்டும் வரம் தருபவள்’ என்று பொருள். பிற ஆலயங்களுக்கு இல்லாத சிறப்பாக திருவல்லிக்கேணியில் இருக்கும் பார்த்தசாரதி, ஒவ்வொரு பெளர்ணமிக்கும் தன் தங்கையைக் காண ஓடோடி இங்கே வருகிறார் என்பது ஐதீகம். அதனால், பெளர்ணமி தினங்கள் இன்னும் சிறப்பு. ஆடிப் பெளர்ணமி கூடுதல் விசேஷம். 

ambigai

பொதுவாக எல்லா ஆலயங்களிலும் மூலவரான சிவனை தரிசித்து விட்டு அம்பிகையை தரிசிக்கும் படியான அமைப்பு இருக்கும். ஆனால் இந்த ஆலயத்தில் கற்பகாம்பாளை தரிசித்து விட்டே கபாலீசுவரரை தரிசிக்கும் படியான அமைப்பு இந்தக் கோயிலின் சிறப்பு. 
முதல் முறையாக கற்பகாம்பாளை தரிசனம் செய்பவர்கள், அம்மனை தரிசித்து வெளியில் வந்த பிறகு, அவளின் செளந்தர்யத்தில் மனதைப் பறிகொடுத்து மீண்டும் மீண்டும் திரும்பி பார்த்த விழி பார்த்தபடியாக பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அதன் பிறகு எப்போதும் கற்பகத்தின் நினைவாகவே இருக்கிறார்கள். மனமுருகி தன்னை நோக்கி வரும் குழந்தைகளின் குறைகளை நிவர்த்தி செய்யும் தாயாகவே அருள்பாலிக்கிறாள் கற்பகம்.  சென்னை மட்டுமல்லாமல் கடல் கடந்தும் பிரார்த்தனைகளுடன்  பக்தர்கள் கூட்டம் கூட்டமாய் வந்து வியந்து அம்பாளின் ஆசியைப் பெற்றுச் செல்கிறார்கள். 

karpagambal

ஒரு முறை தமிழறிஞர் கி.வா. ஜகந்நாதனின் மருகமளான திரிபுரசுந்த, காஞ்சி மஹா பெரியவாளை மயிலாப்பூர் முகாமில் தரிசித்தார். மகானைத் தரிசிக்கக் காத்திருக்கும் பக்தர்கள் வரிசையில் நின்று, மெள்ள மெள்ள ஊர்ந்து சென்று மஹா பெரியவாளின் திருச்சந்நிதியை அடைந்தார் திரிபுரசுந்தரி. மஹா பெரியவாளுக்குத் திரிபுரசுந்தரி அறிமுகம் செய்து வைக்கப்பட்டார்.  மகானுக்குத் தான் கொண்டு வந்த பழங்கள், புஷ்பங்கள் போன்ற காணிக்கை பொருட்களை ஒரு மூங்கில் தட்டில் வைத்து விட்டு நமஸ்கரித்தார். தன் வலக்கையை உயர்த்தி, திரிபுரசுந்தரியை ஆசீர்வதித்து விட்டு “மெட்ராஸ்ல எங்க தங்கி இருக்கே?” என்று கேட்டார் மஹா பெரியவா.
“மயிலாப்பூர்ல தான் பெரியவா” என்றார் திரிபுரசுந்தரி.
“மயிலாப்பூர்ல கோவில்களுக்குப் போற வழக்கம் உண்டா?”
“ஆமாம் பெரியவா. அதுவும் கபாலீஸ்வரர் கோவில்ல கற்பகாம்பாள்ன்னா எனக்கு அவ்ளோ இஷ்டம்” என்றார் முகம் முழுக்க பரவசத்துடன்.
“கற்பகாம்பாள்கிட்ட என்ன வேண்டிப்பே?” அடுத்த கேள்வி தொடர்ந்தது.
“எப்பவும் உலக நலனுக்காகத்தான் வேண்டிப்பேன் பெரியவா.  தெய்வங்கள்கிட்ட நமக்குன்னு எதுவும் கேக்கக் கூடாதுன்னு என் மாமனார் (கி.வா.ஜ) சொல்வார்.
“பலே… நான் ஒண்ணு சொல்றேன்.  நன்னா கேட்டுக்கோ” என்றவர், திரிபுரசுந்தரி மட்டுமல்லாமல், தன் அருகே கூடி இருந்த அனைவரையும் நோக்கி பேச ஆரம்பித்தார்.“உன்னோட போன பிறவிகள்ல நீ பண்ணின புண்ணியத்துனாலதான் இப்ப மயிலாப்பூர்ல வசிக்கறே. இங்க இருக்கற கற்பகாம்பாள் யாரு தெரியுமா? கற்பக விருட்சம்.  தேவலோகத்துல கற்பக விருட்சம்னு ஒரு மரம் இருக்கு. அதுக்கு அடியில நின்னுண்டு யார் என்ன கேட்டாலும் அந்த விருட்சம் ஒடனே குடுத்துடும்.  அது போல இந்த கற்பகாம்பாள் சந்நிதிக்கு முன்னாடி நின்னுண்டு நீ என்ன கேட்டாலும் குடுத்துடுவா” என்று மகா பெரியவர் சொன்னபோது, மயிலாப்பூர்வாசிகள் அனைவரும் பரவசம் மேலிட, ஆனந்தக் கண்ணீரி சொரிந்தனர்.
மஹா பெரியவர் தொடர்ந்தார்: “எத்தனை எத்தனை ஜன்மம் எடுத்தாலும் மயிலாப்பூர்லயே பிறக்கணும்.  உன்னை தரிசிச்சிண்டே இருக்கணும்’னு அவகிட்ட கேட்டுக்கோ.  அவளோட பார்வையில யாரும் பசியோட இருக்கறதை பாத்துண்டு இருக்க மாட்டா.  மயிலாப்பூர்ல இருக்கற எல்லோருக்குமே  கற்பகாம்பாள் தான் சாப்பாடு போடறா” என்று மஹா பெரியவா முடித்ததும், கூடியிருந்தவர்கள் ஆனந்தத்தில் கண்களில் நீர் கசிந்தனர்.

karpagambal

அப்படி பக்தர்கள் கேட்பதை எல்லாம் தருகிற கற்பக விருட்சமாகவே வீற்றிருக்கும் கற்பகத்திடம் பிரார்த்தனை செய்து, ஒருமுறை திருக்கோயிலை வலம் வந்து அமர்ந்தால், உங்கள் கஷ்டங்களை எல்லாம் இறக்கி வைத்த உணர்வும், வேண்டியவை நிறைவேறி விட்டது போன்ற  பரம திருப்தியும் கிடைப்பது உறுதி. அப்படியான ஒரு புரதான சிறப்புமிக்க, சென்னையின் பக்தி மணம் கமழும் ஆலயமாக இருக்கிறது மயிலாப்பூரில் அமைந்துள்ள கபாலீஸ்வரர் கோயில். பல நூற்றாண்டுகள் பழைமை வாய்ந்த இந்த தலத்தில் சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். இந்த ஆலயம், அன்னை பார்வதி மயில் வடிவம் கொண்டு இறைவனை வழிபட்ட தலம், பிரம்மன் தன் ஆற்றலை திரும்பப் பெற்ற தலம், ராமபெருமான், சுக்ரன் வழிபட்டு பேறு பெற்ற ஆலயம். முருகன் வேல் பெற்ற தலம்,  திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசர் தேவாரம் பாடிய தலம் என பல்வேறு சிறப்புகளைக் கொண்டதாக திகழ்கிறது. இப்படி பல்வேறு சிறப்புகள் நிறைந்த இந்த கோயிலில் கற்பகாம்மாளை தரிசித்தால் உடல் சம்மந்தமான நோய்கள் நீங்கும்,  திருமணம் கை கூடும், குழந்தை பேறு கிடைக்கும் என்பது ஐதீகம்.
ஒருமுறை கயிலை மலையில் அம்பாளுக்கு பிரணவம், பஞ்சாட்சரம் குறித்து உபதேசித்துக் கொண்டிருந்தார் சிவபெருமான். அப்போது, அழகிய மயில் ஒன்று தோகை விரித்து நடனம் ஆடிக்கொண்டிருந்தது. அதைக் கண்டு அம்பாளின் கவனம் சிதறியது. பாடத்தை சரியாக கவனிக்காத மாணவர்களுக்கு குரு தண்டனை கொடுப்பார் தானே? அப்படி அம்பாள் மீது கோபம் கொண்ட சிவ பெருமான், ‘பூலோகத்தில் மயிலாகப் பிறப்பாய்’ என்று அம்பாளை சபித்து விட்டார்.
மாணவியான அம்பிகையை, எதன் அழகில் மயங்கினாயோ அதுவாகவே பிற என்று மயிலாக மாறும்படி செய்து விட்டார். அம்பிகை தன் குற்றத்திற்கு விமோசனம் கேட்டாள். பூலோகத்தில் தன்னை மயில் வடிவில் வழிபட்டுவர விமோசனம் கிடைக்கும் என்றார் சிவன். அதன்படி அம்பிகை மயில் வடிவில் இத்தலத்தில் வலம் வந்தாள். சிவனை வணங்கி விமோசனம் பெற்றாள். இருவரும் இங்கேயே கோயில் கொண்டனர். பார்வதி மயில் உருவில் இத்தலத்தில் இறைவனை பூஜை செய்ததால் இத்தலம் இத்தலம் திருமயிலாப்பூர் என்றும், திருமயிலை என்றும் வழங்கப்படுகிறது. ஆலயத்திற்கு செல்லும் போது, பிரகாரம் சுற்றி புராதனமான புன்னை வனநாதரையும், அவரை மயில் உருவில் வழிபடும் அன்னையையும் வணங்க தவறாதீர்கள்.

shoba Fri, 07/19/2019 - 19:11
karpagambal mylapore temple Prayer கற்பகாம்பாள் ஆன்மிகம்

English Title

mayil karpagambal will give us want we need

News Order

0

Ticker

0 ஆடி மாதத்தில் அதிர்ஷ்டம் தரும் சகஸ்ர நாமம்

ஆடி மாதத்தை அம்மன் மாதம் என்று சொல்கிற அளவிற்கு மகத்துவம் வாய்ந்த மாதமாக இருக்கிறது ஆடி. அதே போல எத்தனை தெய்வங்களை வழிபட்டு வந்தாலும், அம்பிகையைக் குறிப்பிடும் போது லோக மாதா என்றே சொல்கிறோம். நமது இந்து மதத்தின் வழிபாட்டு முறைகள்  நீண்ட கால பாரம்பர்யத்தைக் கொண்டது. வாரந்தோறும் வழிபாடுகள், மாதந்தோறும் விழாக்கள், வருடந்தோறும் திருவிழாக்கள் என தெய்வங்களை விடாது கொண்டாடும் வழிமுறையில் வந்தது இந்து மத ஆன்மிக வழிபாடு. 

god

வருஷந்தோறும் விழாக்கள் இருந்தாலும், அம்பிகையை வழிபாடுவது நமது நாட்டின் மிகப்பெரிய கலாச்சாரமுறை. பொதுவாக செவ்வாய் , வெள்ளி  நாட்களில்  அம்பிகை பூஜை , அம்பிகை கோவில் , விளக்கு பூஜை, மாவிளக்கு, நாக வழிபாடு , எலுமிச்சை விளக்கு என ஊரே அம்பிகையை வழிபடுவதில் களைக்கட்டும். நவராத்திரியும், ஆடி மாத வழிபாடும் அம்பிகை வழிபாட்டில் மிகவும் பிரசித்தி பெற்றது. சக்தி வழிபாடு அம்பிகையினை லலிதா திரிபுர சுந்தரியாகவும், தீமைகளை அழிக்கும் காளி மாதாவாகவும் இருமுறைகளில் வழிபடுவர். அதிலும் ஆடிமாதத்தில் சூரிய வெப்பம் குறைய ஆரம்பிக்கும். மழை ஆரம்பிக்கும் காலம் இது. அம்பிகை என்றாலே குளுமை தானே. ஆடிச்செவ்வாய், ஆடி வெள்ளி, ஆடி ஞாயிறு இவை அனைத்துமே சிறப்பு வாய்ந்தவை தான். ஆடிப்பூரம், ஆண்டாள் பிறந்த தினம், அம்பாளுக்கு வளைக்காப்பு அணிவித்து கொண்டாடுவர். அம்பாளுக்கு இந்த மாதத்தில் வளையலை அணிவித்து மகிழ்வது அவரவர் சந்ததியினரை காக்கும். 

god

பெளர்ணமிக்கு முன்னர் வரும் வெள்ளிக்கிழமையை வரலட்சுமி பூஜையாகக் கொண்டாடுவர். கேட்ட வரம் தரும் லட்சுமி என்ற பொருள்படும் பண்டிகை இதுவாக கொள்ளப்படுகிறது.  மாலை நேரங்களில்  தமிழ்ப்பாடல்கள், மகிஷாசுரமர்த்தினி ஸ்லோகங்கள் , அபிராமி அந்தாதி, லலிதா சகஸ்ர நாமம் என அவரவர் குடும்ப வழக்கத்திற்கேற்ப துதிகளை மேற்கொள்வர். இதில் மிகவும் விசேஷமாக கருதப்படும் லலிதா சகஸ்ரநாமம் என்று அம்பிகையை ஆயிரம் நாமங்கள் கொண்டு துதிக்கும் முறையின் சிறப்பினை பற்றி காண்போம்.

god

லலிதா என்றால் விளையாடுபவள் என்று பொருள். ஆம் இந்த உலகில் அன்னை லோகமாதா நம் அம்மா தானே. நாமெல்லாம் அவளின் குழந்தைகள் தானே? நாம் ஏன் வாழ்க்கையை சுமையாகவும், கடினமாகவும் கொண்டு வாழவேண்டும். மகிழ்வாக சகல நன்மைகளையும்  பெற்று வாழ்ந்து பின் அன்னையையே சேர்ந்து விடலாம். லலிதா சகஸ்ரநாமம் பிரம்மாண்ட புராணத்தில் 36 பிரிவாக லலிதோபகன்யா என்று வருகின்றது. 

god

அகத்திய முனிவருக்கும், ஹயக்கிரீவருக்கும் இடையே நடைபெறும் சம்பாசஷணையாக இடம் பெற்றுள்ளது.  மஹாவிஷ்ணுவின் மறு உருவமே. ஹயக்கிரீவர். கல்விக்கான கடவுள் இவர் தான். அப்படிப்பட்ட ஹயக்கிரீவர், அகத்தியரிடம் லலிதமகா திரிபுரசுந்தரியின் மகிமைகளை எடுத்துச் சொல்கிறார். ஸ்ரீ புரம் எனும் அம்பிகையின் ஊரைப் பற்றி விவரிக்கின்றார். தேவதைகளை நோக்கி, நான் உங்களுக்கு கட்டளையிடுகிறேன் யார், யார் ஸ்ரீசக்ரம், ஸ்ரீவித்யா மற்றும் பிற மந்திரங்களை அறிந்தவர்களோ அவர்கள் என்னைப் பற்றி கூறும் ஆயிரம் நாமங்கள் கொண்ட சுலோகங்களை உருவாக்குங்கள். என் பக்தர்கள் இதனை சொல்லி என்னை வந்து அடையும் பாதையாக அமையட்டும் என்கிறார். 

அதனைக் கேட்டு வாசினி உட்பட எட்டு வாக்கு தேவதைகள் மிக ரகசியமான மந்திரமாக லலிதா சகஸ்ரநாமம் ஸ்லோகத்தினை உருவாக்கினார்கள். ஒரு நாள், தன்னுடைய சிம்மாசனத்தில் அமர்ந்து இருந்தாள். அன்னை. அப்போது வாசினி உட்பட எட்டு தேவதைகளையும் லலிதா சகஸ்ரநாமத்தை உச்சரிக்க கண்களால் ஆணையிட்டாள். இதைக் கேட்டு மனம் குளிர்ந்த லோகமாதா “குழந்தைகளே வாசினி உட்பட எட்டு வாக்கு தேவதைகளால் கூறப்பட்ட இந்த சகஸ்ரநாமம் உலக நன்மைக்காக என் இசைவால் கூறப்பட்டது. இதனைப் படிப்பவர்கள்  அனைத்து நன்மைகளையும் பெற்று என்னை வந்து அடைவார்கள் என்றாள். அதனால் தான் இன்று வரை லலிதா சகஸ்ரநாமம் மிக சக்தி வாய்ந்த ஸ்லோகமாக கருதப்படுகிறது. 

பக்தியோடு இதனைச் சொல்லி வர நோய்கள் விலகும். லலிதா என்றால் அழகு என்று பொருள். ஞான மார்க்கமாக வழிபடும் பொழுது ஸ்ரீ வித்யா என்று பொருள் படும். ஞான அறிவு கிட்டும். அனைத்து ஆத்மாவின் உள்ளும் இருக்கும் அம்பிகையினை உணர முடியும். அளவிட முடியாத அம்பிகையின் அருளினை உணர முடியும். உள்ளுணர்வு கூடும். அந்த உள்ளுணர்வே அம்பிகை தான் என்று புரியும். சக்தி வழிபாட்டினை ஸ்ரீ என்ற எழுத்தின் மூலம் வழிபடுவது தான் ஸ்ரீ வித்யா. நமது இந்த பிரபஞ்சமே ஸ்ரீசக்கரம் தான்.மந்தர , ய்ந்தர, தந்தர என்ற மூன்றும் இணைந்ததே ஸ்ரீ வித்யா வழிபாடு. பிரம்ம வித்தையும் ஸ்ரீ வித்தையும் ஒன்றே.  லலிதா சகஸ்ர நாமத்தினையும், ஸ்ரீவித்யாவையும் படிக்கப் படிக்க ஜாதி, மத, இன வேறுபாடுகள் கிடையாது. உயர் பண்புகளை தன்னுள் வளர்த்துக் கொள்வோர் அனைவரும் படிக்கலாம். இதனை தினமும் சொல்வது புனித நீரில் நீராடிய புண்ணியத்தினை தரும். 

god

உணவுப்பொருள், நிலம், பசு தானம் செய்த புண்ணியம் கிடைக்கும். குழந்தை வரம் வேண்டுவோர் குழந்தை பாக்கியம் பெறுவர். அன்றாடம் சொல்வதால் தீமைகள் விலகும். பூஜை செய்யும் முறைகளில் செய்யும் தவறுகளால் ஏற்படும் பாவம் நீங்கும். அன்றாட நித்திய பூஜை முறைகளையும் அவரவர் குடும்ப வழி பூஜைகளையும் செய்யாது இருப்போருக்கு ஏற்படும் பாவம் நீங்கும். கிரக தோஷங்களால் ஏற்படும் தீமைகள் நீங்கும். எதிரிகள் நீங்குவர். வெற்றி கிட்டும். பொன், புகழ், பொருள் சேரும். லலிதா சகஸ்ர நாமம் தினசரி சொல்வது ஒரு தவம். இறைவனுக்கு வேறு எதனையும் அளிக்க வழி இல்லை. எனினும் இந்த நாமத்தினை சொல்வதே போதும். தன்னம்பிக்கை கூடும். லலிதாம்பிகையே ஸ்ரீகாளி மாதா, துர்கா தேவி, பராசக்தி, பகவதி, பிரபஞ்சத்தின் தாய். ஒவ்வொரு நாமமும் மிகவும் சக்தி வாய்ந்தது. படிக்க ஆரம்பித்தால் ஆயிரம் நாமத்தினையும் ஒரே நேரத்தில் முழுமையாக சொல்லிவிட வேண்டும்.
அம்பிகையின் துதி நூல்களில் முதலிடம் வகிப்பது ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாமம்.  பிரம்மதேவரிடம் இருந்து அசுரன் ஒருவன் வேதங்களைக் கவர்ந்து கொண்டு போன போது, மகாவிஷ்ணு ஹயக்ரீவராக (குதிரை முகம் கொண்டவராக) வந்து, அசுரனைக் கொன்று, வேதங்களை மீட்டார். ஞானத்தின் வடிவமே ஹயக்ரீவர். அப்படிப்பட்டவர், லலிதா ஸஹஸ்ர நாமத்தை உபதேசம் செய்திருக்கிறார். உபதேசம் பெற்ற அகத்தியரின் பெருமையோ, அளவில் அடங்காது, அதில் ஒன்றை மட்டும் இங்கே பார்க்கலாம். 
சிவனுக்கும் பார்வதிக்கும் திருமணம் நடந்தபோது மகாவிஷ்ணு, பிரம்மா, இந் திரன் முதலான தேவர்கள் அனைவரும் அங்கு கூடினார்கள். அதன் காரணமாக, வடகோடு தாழ்ந்து தென்கோடு உயர்ந்தது. அப்போது சிவபெருமான் அகத்தியரைத் தென்திசைக்கு அனுப்ப, பூமி சம நிலை பெற்றது. இந்தக் கதை அனைவருக்குமே தெரிந்தது தான். ஆதியும் அந்தமும் இல்லாத அரும்பெரும் ஜோதியான சிவபெருமான் முதல் தேவர்கள் வரை அனைவரும் ஒரு பக்கம் இருக்க, அகத்தியர் மட்டும் தென்திசை போனார். அதனால் பூமி சமநிலை ஆனது என்றால் என்ன பொருள்? 

shivan parvathi

அந்தப் பக்கம் இருந்த அவ்வளவு பேருக்கும் சமமானவர் அகத்தியர் என்பது தானே இதன் பொருள்? அதாவது, அனைத்து தெய்வங்களுக்கும் சமமானவர் அகத்தியர். அப்படிப்பட்ட மகாபுருஷர் லலிதா சகஸ்ரநாமத்தை உபதேசம் பெற்றிருக்கிறார். 
ஞானத்தின் வடிவமான ஹயக்ரீவர் உபதேசிக்க, அதை அனைத்து தெய்வங்களுக்கும் சமமான அகத்தியர் கேட்டிருக்கிறார் என்றால், ஸ்ரீலலிதா சகஸ்ரநாமம் எந்த அளவுக்கு உயர்ந்ததாக மேன்மையானதாக இருக்க வேண்டும். 
பதினெட்டு புராணங்களில் ஒன்றாகிய பிரம்மாண்ட புராணத்தில், லலிதோபாக்யானம் என்ற பகுதியில் லலிதா தேவியின் திரு அவதாரமும், சரிதமும் கூறப்படுகின்றன. அதன் ஒரு பகுதியாக, அன்னை பராசக்தியின் ஆயிரம் திருநாமங்களைக் கூறும் லலிதா சகஸ்ரநாமம் என்னும் மகோன்னதமான இந்த ஸ்தோத்திரம் உள்ளது. அகத்தியரும், அவரது மனைவி லோபா முத்திரையும் சக்தி வழிபாட்டு நெறிகளை உருவாக்கிய குருமார்களில் முதன்மையாக வைத்துப் போற்றப்படுபவர்கள் 
சகஸ்ரநாம நூல்களிலேயே தனித் துவமும், தனிச்சிறப்பும் மிக்கதாக லலிதா ஸஹஸ்ரநாமம் உள்ளது. அபாரமான கவித்துவமும், சொல்லழகும், ஓசை நயமும் கொண்டது. இவ்வளவு சிறப்புகள் பெற்று தன்னுள் அனைத்து தெய்வ சக்திகளையும் அடக்கியுள்ள லலிதா ஸஹஸ்ர நாமத்தை நாமும் கூறுவதால் 
வாழ்வில் சகல சந்தோஷங்களையும் அனுபவிக்கலாம். இந்த ஆடி மாதத்தின் அம்மன் வழிபாட்டினை லலிதா சகஸ்ர  நாமத்துடன் ஆரம்பியுங்கள்.

shoba Wed, 07/17/2019 - 17:03
aadi month sangaranamaham Prayer சகஸ்ர நாமம் ஆன்மிகம்

English Title

Good luck in the month of Aadi

News Order

0

Ticker

0 
 ராகுகால பூஜை

செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் ராகுகால பூஜை முறை

உங்கள் வாழ்வின் சங்கடங்களைப் போக்கும் அற்புதமான விரத முறை தான் செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் கடைப்பிடிக்கப் படுகிற ராகு கால பூஜை. இந்த விரத பூஜையை செவ்வாய்க்கிழமை ஆரம்பித்தால் தொடர்...


சரபேஸ்வரர் கவசம்

பிரச்சனைகளைத் தீர்க்கும் | இன்னைக்கு சாயந்தரம் மிஸ் பண்ணாதீங்க!

இன்று வளர்பிறை அஷ்டமியில் சரபேஸ்வரரை வணங்கி வழிபட்டு வந்தால் நல்லதே நடக்கும். அதனால், இன்று மாலை அருகிலிருக்கும் சரபேஸ்வரர் ஆலயத்திற்கு சென்று ஸ்ரீ சரபேஸ்வர கவசத்தைச் சொல்லி வழிபட்...


சூரியகிரகணம்

சூரிய கிரகணத்தின் போது கண்டிப்பாக என்னவெல்லாம் செய்யக்கூடாது!

நாளை நிகழ இருக்கும் சூரியகிரகணம் மொத்தமாக நான்கு நிமிடம் முப்பத்து மூன்று வினாடிகள் வரையில் நடைபெறும். சூரிய கிரகணம்  அமெரிக்க நேரப்படி 12.55 மதியம் நிகழும் என்று அறிவிக்கப்பட்டுள்...


சூரியகிரகணம்

சூரிய கிரகணத்தின் போது என்னவெல்லாம் செய்ய வேண்டும்

நாளை, ஜூலை 2ம் தேதி முழு சூரிய கிரகணம் ஏற்படுகிறது. இந்த வருடத்தின் இறுதி சூரிய கிரகணம் இது தான்.  இந்த சூரிய கிரகணம் தென் பசிபிக் பிராந்தியத்தில்  நிகழும் என்று அறிவிக்கப்பட்டுள்ள...


வரதராஜ பெருமாள் கோவில்

40 ஆண்டுகளுக்கு பின் வெளியே வந்த அத்திவரதர்! ஜூலை 1 முதல் பக்தர்களுக்கு தரிசனம்

காஞ்சிபுரத்தில் 40 ஆண்டுகளுக்கு பிறகு வரதராஜ பெருமாள் கோவில் குளத்தில் இருந்து அத்திவரதர் சிலை வெளியே எடுக்கப்பட்டுள்ளது. ஒரு வார காலமாக குளத்தில் இருக்கும் நீரை அகற்றும் பணி நடைப்...


சனிபகவான்

சனிக்கிழமைகளில் மறக்காம இதைச் செய்ங்க... அப்புறம் பாருங்க உங்க முன்னேற்றத்தை!

நவகிரகங்களில் வலிமையான கிரகமாகத் திகழ்பவர் சனிபகவான். சனியைப் போல் கொடுப்பவருமில்லை, சனியைப் போல்  கெடுப்பவருமில்லை என்பார்கள். ஒருவர் முற்பிறவியில் செய்த பாவ புண்ணியங்களுக்கு ஏற்ப...


கடவுள்

கடவுள்  எங்கே  இருக்கிறார்

அது ஒரு ஆன்மிக தலம். மலையின் உச்சியில் அமர்ந்திருந்தார் கடவுள். ரொம்ப விசேஷமான கோயில் அது. அந்த மலை உச்சிக்குச் சென்று கடவுளை தரிசனம் செய்தால், நம் வாழ்க்கையில் எல்லா சுகங்களும் கி...


கடவுள்

தினந்தோறும் சாமி கும்பிடுறீங்களா..  இந்த 10 விஷயத்தை மறக்காம மனசுல வெச்சுக்கோங்க...

கோயிலுக்குச் சென்று இறைவனை வழிபடுகிறோம். வீட்டிலும் பூஜைகள் செய்து வழிபடுகிறோம். ஆனால் இவை எல்லாவற்றையும் முறையாகத் தான் செய்கிறோமா? சில விதிமுறைகள் இருக்கின்றன. உங்களுக்கு தெரியாத...


கடவுள்

ஏன் நல்ல காரியங்கள் செய்யும் பொழுது குறிப்பாக அஷ்டமியையும், நவமியையும் ஏன் தள்ளி வைக்கிறோம்?

இன்று 10-6-19 அஷ்டமி   நாளை 11-6-19 நவமி.எல்லா நாட்களும் நல்ல நாட்கள் தான்.ஆனாலும், ஏன் நல்ல காரியங்களைச் செய்ய அஷ்டமியையும், நவமியையும் ஒதுக்கி வைத்திருக்கிறோம். சுகப்பிரசவ வாய்ப்...


தீர கருடன்

நோய்கள் தீர கருடனை தரிசிப்போம்… ஏழு நாளும் ஏழு பலன்கள்...

ஒவ்வொரு கடவுளுக்கும் தனித்தனியாக ஒவ்வோர் வாகனம் உண்டு.திருவிழா காலங்களில் கருட தரிசனம் பார்... என்று சொல்வார்கள்.அதன் அர்த்தமும், பலன்களும்  தெரியாமலேயே வானத்தில் வட்டமிடுகிற கருடன...


கல் உப்பு

நினைத்ததெல்லாம் கொடுக்கும் கல் உப்பு மந்திரம்

சாதாரண உப்பு தானே? நம் பிரச்னைகளை எப்படி உப்பைக் கொண்டு தீர்க்க முடியும் என்று நம்பிக்கையில்லாமலேயே நீங்கள் படிப்பது புரிகிறது. இது உங்களுக்கான பக்கம் கிடையாது. நம்பிக்கையுடன் யார்...


அமாவாசை

அமாவாசையன்று செய்கிற தானங்கள் ஆயுளை அதிகரிக்கும்

அமாவாசையன்று முன்னோர்களை வழிபடுவதும், கர்ம சிரத்தையாக பிதுர் காரியங்களை நிறைவேற்றுவது மட்டுமே நம் வாழ்க்கையில் வசந்தத்தைக் கொண்டு வந்து விடாது. நமது முன்னோர்ளை வழிபடும்போது, வைக்கி...


அமாசோமம் வழிபாடு

03-06-19 - தீர்க்க சுமங்கலியாக வாழ வேண்டுமா? அமாசோம வழிபாடு செய்யுங்கள்!

அமாவாசை வழிபாட்டுக்கு எப்பொழுதுமே தனிச் சிறப்பு உண்டு. அப்படி, திங்களன்று ( 03-06-19 ) வருகின்ற அமாவாசையன்று சூரியன் முழுமையாக உதிக்கும் முன்பு அரசமரத்தை ‘ஸ்ரீமத் நாராயணனாக’ பாவித்...


சிவன்

கடன் தொல்லை தீர்க்கும் சுக்கிர வார வழிபாடு

இன்று சுக்ர பிரதோஷம் இமாலையில் அருகில் உள்ள சிவாலயங்களுக்கு சென்று மறக்காமல் வழிபடுங்கள். சுக்கிர வாரம் என்று சொல்லப்படும் வெள்ளிக்கிழமையில் பிரதோஷம் வருவது ரொம்பவே சிறப்பு வாய்ந்த...


thaiamavasai

தை அமாவாசை - சிறப்பு வழிபாட்டு தகவல்கள்!!

மாதம் தோறும் அமாவாசை அன்று தர்ப்பணம் தர முடியாதோர், ஆண்டுக்கு ஒரு முறை வரும் தை அமாவாசையில் விரதம் இருந்து தர்ப்பணம் கொடுத்து, அனைத்து மாதத்திலும் தர்ப்பணம் தந்த பலனை பெறலாம்


konganasiddar

காரிய சித்திக்கும், பகையை வெல்லவும், வாழ்வில் வளம் பெறவும் கொங்கணர் சித்தரை வழிபடும் முறைகள்

கொங்கணர் ஜீவ சமாதி அடைந்தது திருமலையில், பெரிய குன்று அல்லது மலை சதய வடிவம் ஆகும். சதய நட்சத்திரம் கொங்கணருக்கு க்ஷேம தாரை


deity

குலதெய்வங்கள் என்றால் என்ன? அவர்களின் பெருமை என்ன?

குல தெய்வ தோஷம் இருந்தால், மற்ற தெய்வங்களின் அருள் கிடைக்காது. குல தெய்வத்தின் அனுமதி அல்லது அனுகிரகம் இல்லை என்றால் ஒருவர் என்னதான் சக்தி வாய்ந்த ஹோமம், யாகம் செய்தாலும், ஆலயங்களு...


namaz

தில்லியில் பொது இடங்களில் இனி 'நமாஸ்' செய்ய தடை

தில்லியில் பள்ளிவாசல், தர்காக்களைத் தவிர பொது இடங்களில் தொழுகை நடத்த அனுமதியில்லை என காவல்துறை எச்சரிக்கை நோட்டீஸ் பிறப்பித்துள்ளது

2018 TopTamilNews. All rights reserved.