• February
    25
    Tuesday

Main Area

Main



வெற்றிக்கு வறுமை ஒரு தடையா? விடாமுயற்சியால் டிஎஸ்பி-யான சாதனை பெண்!

டிஎஸ்பியாக தேர்வான சரோஜா
டிஎஸ்பியாக தேர்வான சரோஜா

திருநெல்வேலி: வறுமையிலும் கடுமையான உழைப்பால்  சரோஜா என்ற பெண்  டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வில் வெற்றி பெற்று டிஎஸ்பியாக தேர்வாகியுள்ளார். 

திருநெல்வேலி அருகே சன்னியாசி கிராமத்தில், ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவர் சரோஜா. இவர் மீனாட்சி புரம் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் கல்வி  பயின்றுள்ளார். பத்தாம் வகுப்பில் 338 மதிப்பெண்கள், 12 ஆம் வகுப்பில் 719 மதிப்பெண்கள்  பெற்றுள்ளார்.  இதனை  தொடர்ந்து உயர்கல்வி படிக்க வறுமை தடையாக இருந்ததால்  தனியார் பள்ளி ஒன்றில், தற்காலிக ஆசிரியர் பணியில் சேர்ந்துள்ளார். 

saroja

பின்னர், மாண்டிச்சோரி கல்வி பயின்ற அவர், தமிழில் பி.லிட், எம்.ஏ. முடித்திருக்கிறார். தொடர்ந்து போட்டி தேர்வுகளுக்கு விண்ணப்பித்து பல்வேறு தேர்வுகள் எழுதி வந்துள்ள  சரோஜா  தாயாருக்கு உதவியாகப் பீடி சுற்றும் தொழிலும்  உதவி புரிந்து வந்துள்ளார்.  

இந்நிலையில் அண்மையில் அவர் எழுதிய டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வில் முதல் முயற்சியிலேயே வெற்றி பெற்று, தற்போது டிஎஸ்பியாக தேர்வாகியுள்ளார். சரோஜாவுக்கு மாவட்ட ஆட்சியர்  ஷில்பா பிரபாகர் நேரில் அழைத்துப் பாராட்டு தெரிவித்துள்ளார்.  சாதிப்பதற்கு வறுமை தடையல்ல என்பதற்கு சரோஜாவே எடுத்துக்காட்டு.

2018 TopTamilNews. All rights reserved.