• October
    15
    Tuesday

Main Area

pongal festival

jallikattu

பொங்கல் ஜல்லிக்கட்டில் கலக்கிய அடங்காக் காளைகள்: அதுவும் ஓர் அமைச்சருடையது!!

மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் உலகப்புகழ் பெற்ற ஜல்லிக்கட்டு விழா நேற்று நடைபெற்றது. இதில் அமைச்சரின் காளைகள் உள்பட பல மாடுகள் மாடுபிடி வீரர்களிடம் சிக்காமல் தண்ணி காட்டிவிட்டு ஜெய...





jallikattu

நிறைவு பெற்றது பாலமேடு ஜல்லிக்கட்டு; சிறந்த காளைக்கு ஆம்னி கார் பரிசு

பொங்கல் பண்டிகையையொட்டி நடைபெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில், சிறந்த காளைக்கு ஆம்னி கார் பரிசாக வழங்கப்பட்டது



rajinikanth

நல்ல ஆரோக்கியமும், மனநிம்மதியும் கிட்டட்டும்: நடிகர் ரஜினிகாந்த் பொங்கல் வாழ்த்து

நல்ல ஆரோக்கியமும், மனநிம்மதியும் கிடைக்க இறைவனை பிரார்த்திக்கிறேன் என பொங்கல் பண்டிகையையொட்டி நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்


jallikattu

கொம்பு சீவிய காளைகள்...மீசை முறுக்கும் வீரத் தமிழன்: அவனியாபுரம் ஜல்லிக்கட்டு விறுவிறு!!

வனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டு வருகிறது. கொம்பு சீவி துள்ளிக் குதித்து வரும் காளைகளை, மீசை முறுக்கிய வீரத் தமிழ் இளைஞர்கள் அணைந்து தங்க...


mkstalin

எதிர்கால நிலத்தில் நல்லாட்சி விளையட்டும்: மு.க.ஸ்டாலின் பொங்கல் வாழ்த்து

எதிர்கால நிலத்தில் நல்லாட்சி விளையட்டும்; அதற்கான விவசாயம் இந்நாளில் தொடங்கட்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளார்


கிராமங்கள் கொண்டாடும் கதிரவ பொங்கல்!

உலகங்களின் இயக்கத்துக்குக் காரணியாகக் கதிரவன் இருக்கிறான் எனவேதான் நமது பண்பாட்டில் கதிரவ வழிபாட்டுக்கு மிக உன்னதமான இடத்தை வைத்திருக்கிறோம். பொங்கல் பண்டிகை என்பது நமது மரபில் பண்பாட்டு அடையாளமாக, வாழ்க்கைமுறையில் ஆழ வேரூன்றிய திருவிழாவாகக் கொண்டாடப்படுகிறது. 

sunrise

உழைக்கும் தமிழ் மக்கள் தாமே கண்டுணர்ந்து, தமது உழைப்பிற்கு உதவிய இயற்கைக்கும், தம்மோடு சேர்ந்து உழைத்த கால்நடைகளுக்கும், தமது நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவிக்கும் விதமாக சர்க்கரைப் பொங்கல் படைத்து வழிபட்டனர். 

தைப்பொங்கல் பண்டிகை இப்படித்தான் மலர்ந்தது. பல ஆயிரம் ஆண்டுகளை கடந்துள்ள பொங்கல் இன்று உலகத் தமிழர்களின் உணர்வோடு கலந்த ஒரு பண்டிகையாக மாறியுள்ளது.

pongal11

தமிழர் திருநாளான பொங்கல்  அறுவடை முடிந்தவுடனேயே கிராமங்களில் களைகட்டத் தொடங்கிவிடும். அவரவர் வயல்களில் விளைந்த நெல் மணிகளை இடித்து முறத்தால் புடைத்து பொங்கல் வைப்பதற்கு தேவையான சத்துள்ள பச்சரிசியை அவர்கள் தயார் செய்வார்கள். 

பத்து நாட்களுக்கு முன்பிருந்தே கிராமங்களில் பொங்கல் விழா கொண்டாட்டங்கள் ஆரம்பித்துவிடும். களிமண்ணையும், வண்டல் மண்ணையும் குழைத்து உருவாக்கப்பட்ட சுவர்களையும், தரையையும், அடுப்புகளையும் கொண்ட கூரை வீடுகளை, பெண்கள் கூட்டிச் சுத்தப்படுத்தி, சாணத்தால் மெழுகுவார்கள். 

pongal


குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் விடியற்காலையிலேயே எழுந்து, குளித்து முடித்து, புத்தாடை உடுத்தி பொங்கல் வைப்பதற்கு ஆயத்தமாகி விடுவார்கள். 
 
வீட்டின் முற்றத்தில் சிறிய மணல் மேடை அமைத்து, அதன் மேலே பாறாங்கல்லை அடுக்கி அடுப்புப் போன்ற அமைப்பை உண்டாக்கியிருப்பார். பாறாங்கல் அடுப்பைச் சுற்றி, மூன்று கரும்புகளை முக்கோண வடிவத்தில் நட்டு நிறுத்தியிருப்பார். இவை எல்லாமே மாக்கோலத்தின் மேல் வடிவமைக்கப்பட்டிருக்கும். 

pongal

மண்ணாலான பொங்கல் பானையைச் சுத்தமாகக் கழுவி அதைச் சுற்றிலும் அழகாகக் கோலமிட்டு மஞ்சள் கொத்து, கரும்பு, பனங்கிழங்கு, கண்ணுப்புள்ளப்பூ, ஆவாரம்பூ, கதம்பம் ஆகியவற்றைக் கட்டி, நல்ல நேரம் பார்த்து, அடுப்பின் மேல்பானையை வைப்பார்கள்.

எரிப்பதற்குக் காய்ந்த ஓலைகளையும், குச்சிகளையும் மட்டுமே பயன்படுத்துவார்கள் . அதன் பின்னர் பச்சரிசியை களைந்து, அக்கழனித்தண்ணீரை, குலதெய்வத்தை பிரார்த்தித்துக் கொண்டே பானையில் ஊற்றுவார்கள்.

 பால் எப்போது பொங்கும் என்ற எதிர்பார்ப்பு அனைவருக்கும் இருந்துகொண்டே இருக்கும் .  பால் பொங்கும் நேரத்தில் வலம்புரிச் சங்கெடுத்து ஊதுவார்கள். அதனையடுத்து வெண்கல மணியை அடித்து மங்கல ஓசையை எழுப்புவார்கள். அதனையடுத்து பொங்கலோ பொங்கல் என்று அனைவரும் கூறுவார்கள்.

pongal14

அதன் பின்  பச்சரிசி, பாசிப்பருப்பு, வெல்லம், முந்திரி, கிஸ்மிஸ்பழம், ஏலம் சுக்கு, நெய் ஆகிய பொருட்களை பானையிலிட்டு, நன்றாகப் பொங்கல் வெந்ததும், அடுப்பிலிருந்து இறக்குவார்கள்.

பொங்கலை குலசாமிக்கும், கதிரவனுக்கும் படைத்த பின்பு கூட்டாக உட்கார்ந்து அனைவரும் உண்ணத் தொடங்குவார்கள். இத்தகைய சிறப்புகள் வாய்ந்த கிராமத்து பொங்கல் இன்று வரை தமிழகத்தின் பல்வேறு கிராமங்களில் சிறிது அளவு கூட பழமை மாறாமல் கொண்டாடப்படுவது மட்டுமே தமிழக கிராமங்களுக்கு பெருமை சேர்கின்றது.  
 

vijay Sat, 01/12/2019 - 11:17
 pongal festival village veetu pongal Mattu Pongal kaanum pongal pongal festival spiritual gramaththu pongal ஆன்மிகம்

English Title

pongal festival in village

News Order

0 



bus

பொங்கல் பண்டிகை: எந்த ஊருக்கு எங்க இருந்து பஸ் ஏறனும்?-முழு விவரம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து 14,263 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது


bus

பொங்கல் பண்டிகைக்கு 24,708 சிறப்பு பேருந்துகள்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் 24,708 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்


edappadipalanisamy

அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும் பொங்கல் பரிசு தொகுப்பு: முதல்வர் பழனிசாமி உத்தரவு

அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும் பொங்கல் பரிசு தொகுப்பை வழங்க முதல்வர் பழனிசாமி உத்தரவு பிறப்பித்துள்ளார்


kerala pongal

பெண்களின் சபரிமலை சக்குளத்துக்காவு பகவதி அம்மன் கோயிலில் 50 கிலோ மீட்டர் தூரத்திற்கு பெண்கள் பொங்கல் படைத்து வழிபாடு

பெண்களின் சபரிமலை என்றழைக்கப்படும் சக்குளத்துக்காவு பகவதி அம்மன் கோயிலில் பொங்கல் வழிபாடு நடைபெற்றது . இதில் லட்சக்கணக்கான பெண் பக்தர்கள் கலந்து கொண்டு பொங்கல் படைத்து அம்மனை வழிபட...

2018 TopTamilNews. All rights reserved.