• August
    20
    Tuesday

Main Area

Mainபொள்ளாச்சி பக்கம் பொண்ணு எடுக்காத ,எல்லாம் டேமேஜ் பீஸ்க ! வழக்கை திசை திருப்பும் கயவர்கள்: அதிர வைக்கும் உண்மை!?

பொள்ளாச்சி பாலியல்  வழக்கு
பொள்ளாச்சி பாலியல் வழக்கு
Loading...

பொள்ளாச்சி: பொள்ளாச்சி பாலியல் வழக்கை காரணம் காட்டி  கடந்த 20 நாட்களில் பொள்ளாச்சியில் மூன்று திருமணம் நின்றுவிட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 

அன்றாட செய்தியாகி விட்ட பாலியல் வன்கொடுமை:
harass ttn

பெண்கள் குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை குற்றங்கள் தமிழகம் மட்டுமல்ல இந்தியா முழுவதும் கொடூரமாக நடந்தேறி வருகிறது. அங்கொன்றும் இங்கொன்றுமாக நடந்தவை இன்று அன்றாட செய்தியாகி விட்டது.


சமீபத்தில் தமிழகத்தையே உலுக்கியுள்ள பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.  பெண்களை  பாலியல் வன்கொடுமை செய்து, அதனை வீடியோவாக பதிவு செய்து மிரட்டி வந்த 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுதொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகி அனைவரையும் பதற வைத்தது. இந்த சம்பவத்தில் தொடர்புடைய அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும் என்று  பலரும் குரல் எழுப்பி வருகின்றனர்.

ஒட்டுமொத்த பொள்ளாச்சி பெண்களை குற்றம் சாட்டும் கயவர்கள்:
ttn

இது ஒருபுறமிருக்க பொள்ளாச்சி சம்பவத்தை மையப்படுத்தி நினைத்துப் பார்க்க முடியாத சில கொடுமைகளும் அரங்கேறி வருவதாக கூறப்படுகிறது. அதில் பொள்ளாச்சியில் 200ற்கும் மேற்பட்ட பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகச் செய்தி வெளியானது.ஆனால்  இது குறித்து உண்மை தன்மை இன்னும் முழுமையாக வெளியாகவில்லை. இருப்பினும்  அதை தொடர் படுத்தி ஒட்டுமொத்த பொள்ளாச்சி பெண்களையும் கேவலமாக சித்தரிக்கும் படியாக பேச்சுக்கள் சமூகவலைதளங்களில்  வெளியாகி வருவதாகக் குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது.

குறிப்பாக 20 நாட்களில் பொள்ளாச்சியில் மூன்று திருமணம் நின்றுவிட்டதாகவும், அதற்கு காரணம் மாப்பிள்ளையும் , மணமகன் வீட்டாரும் பொள்ளாச்சி பெண் வேண்டாம் என்று சொல்லி திருமணத்தை நிறுத்திவிட்டதையும் உதாரணமாக முன்வைக்கின்றனர் ஒரு தரப்பினர். 

பொள்ளாச்சி பக்கம் பொண்ணு எடுக்காத ,எல்லாம் டேமேஜ் பீஸ்க!
abused ttn

இதுகுறித்து பொள்ளாச்சியைச் சேர்ந்த கீதா பிரகாஷ் என்பவரின் பதிவு பின்வருமாறு:-

 

இவ்வாறு பதிவிட்டுள்ளார்.

ஆணாதிக்கமும்...அயோக்கியத்தனமும்!
women abuse ttn

பெண்களை பாலியல் வன்கொடுமை செய்வதற்குச் சமமான, சந்தேகம் என்ற அம்பை பெண்கள் மீது எய்து அவர்களைத் தவிடு பொடியாக்கும் நோக்கில் சில கொடூரர்கள் களமிறங்கியுள்ளனர் என்பது இந்த பதிவின் மூலம் தெரிய வருகிறது. 

பாதிக்கப்பட்ட பெண்ணையே குற்றவாளியாக்கி, உடை சரியில்லை, இரவு நேரத்தில் அங்கு என்ன வேலை, என அவள் நடத்தையின் மீதே சந்தேகப்பட்டு குற்றம் சாட்டுவது இச்சமூகத்தின் பொதுப்புத்தியாக உள்ளது. இதற்குக் காரணம்  காலம் காலமாக  ஊட்டி வளர்க்கும் பண்பாடும்,  ஆணாதிக்கமும்தான். 

20 வயது கூட நிரம்பாத இளைஞன், 80 வயது நிறைந்த கிழவன் என வயது வித்தியாசமின்றி  பாலியல் வன்கொடுமையில் ஈடுபடுகின்றனர். இவர்களை மனித தன்மையற்ற காமுகர்களாக மாற்றியது யார்? ஏன் இவர்களுக்கு இந்த ஈன பிழைப்பு ? என்ற கேள்விகள் அவர்கள் தலைக்கு மேல் கத்தி மாதிரி தொங்கி கொண்டிருக்கின்றன. ஆனால் அதையெல்லாம் கண்டுகொள்ளாது, குழந்தைகளையும், பெற்றோர்களையும் எச்சரிக்கையாக இருக்கச் சொல்லி விளம்பரம் போடுவது அயோக்கியத்தனமில்லையா?

நுகர்வு பொருளா பெண்?
ttn

பெண்கள் என்றாலே நுகர்ந்து தள்ள வேண்டிய, இன்பம் தரும் பண்டம் என்கிற பொதுப்புத்தியை உருவாக்கி, ஒருசாரார் பணம் சம்பாதிக்க வழிவகுக்கும் வகையில் ஆபாச வீடியோக்கள் இணையதளத்தில் கொட்டி கிடக்கின்றன.  இப்படி புகுத்தப்படும் கலாச்சார சீர்கேட்டினால், இளைஞர்கள் சீரழிக்கப்படுகிறார்கள்.

பெண்களுக்கு ‘குட் டச்’ – ‘பேட் டச்’ கற்று தந்தால் போதுமா?
gd ttn

‘குட் டச்’ – ‘பேட் டச்’, சி.சி.டி.வி. கேமிரா பொருத்துவது, தண்டனைகளைக் கடுமையாக்குவது, உடனடியாகத் தண்டிப்பது போன்ற வழிமுறைகள் சொல்லப்படுகிறது. ஆனால் அப்போது கூட இந்த சட்டத்தைக் கண்டும், சில ஆண்கள் பயப்பட்டதாகத் தெரியவில்லை. பெண் குழந்தைகளுக்கு ‘குட் டச்’ – ‘பேட் டச்’, கற்று தருவதற்கு பதிலாக, ஆண்களுக்குப் பெண்களிடம் எப்படி நடந்து கொள்ளவேண்டும் என்று சொல்லி தருவதே புத்திசாலித்தனம். 

விடுதலைக் காற்றை ஒரு பெண் எப்போது சுவாசிப்பாள்?!
women ttn

பிற்போக்கு, ஆபாசக் குப்பைகளை ஒழித்து, பெண்ணை சக மனுஷியாக மதிக்க சமத்துவமான பண்பாட்டை உருவாக்க வேண்டும். அப்படி ஒரு பெண்ணை நுகர்வு பொருளாக பார்க்காமல் சக மனுஷியாக பார்க்கும் நாள் விரைவில் வந்தால் தான் உண்மையான விடுதலைக் காற்றை ஒரு பெண் சுவாசிக்க முடியும். 

2018 TopTamilNews. All rights reserved.